அனுபவமற்றவர்கள்கூட எளிதாக குறிமுறைவரிகளை எழுதஉதவும் “Ready” எனும் இணையதளத்தினை பயன்படுத்திகொள்க

முதன்முதல் “Are you ready?”என்ற பெயரில் 8பிட் கொண்ட கணினிக்கான செயல்திட்டமாக இது இருந்தது தற்போது ready எனும் பெயரில் இயங்கும் இந்த தளமானது கணினியின் நிரல் தொடர் எழுதுவதில் அனுபவம் இல்லாத புதியவர்கள் கூட எளிதாக நிரல் தொடர் குறிமுறை வரிகளை எழுதி விளையாட்டுகள், பயன்பாடுகள் ஆகியவற்றிற்கான மென்பொருளை உருவாக்கிட உதவுகின்றது எந்தவொரு பயன்பாடுகளிலும் குறிமுறைவரிகள் எனில் ஆயிரக்கணக்கான வரிகளாக இருக்கும் இந்த குறிமுறவரிகளை எழுதிஉருவாக்கியபின்னர் அவைகளில் ஏதேனும் பிழையுள்ளதாவென தேடிபிடித்து சரிசெய்வது என்பது வைக்கோற்போரில் தொலைந்துபோன ஊசியை தேடுவதுபோன்ற செயலாகும் ஆனால் இந்த “Ready” எனும் இணையதளத்தில் metadata எனும் அடிப்படையில் பிழைகளை தேடிசரிசெய்திடபடுகின்றது இந்த இணைய தளமுழுவதும் தேடிபடித்தால் வெவ்வேறு அமைவுகளில எவ்வாறெல்லாம் பயன்பாடுகளை உருவாக்கிடமுடியு்ம் என நமக்கு விவரங்களை அளிக்கின்றது அவைகளில் நமக்கு பிடித்தமான நமக்கு எளிதாக தோன்றும் அமைவுகளை பின்பற்றி பயன்பாடுகளை உருவாக்கிகொள்ளமுடியும் மேலும் வேவ்வேறு வண்ணங்களில் நாம் கற்றுக்கொள்வதற்கான பாடங்கள் இந்த தளத்தில் வரிசையாக நம்மை வரவேற்கின்றன இந்த தளத்தில் தக்காளிபோன்ற சிவப்புவண்ண பாடமானது இந்த Ready” எனும் இணையதளத்தினை எவ்வாறு பயன்படுத்திகொள்வது எனும் அடிப்படை விவரங்களை கூறுகின்றது மேலும் இதிலுள்ள நீலநிறமானது விளையாட்டுகளை எவ்வாறு வடிவமைப்பது எனக்கூறுகின்றது அதுமட்டுமல்லாது பச்சைவண்ணமானது அறிவியல் தொடர்பாக விவரிக்கின்றது கூடுதலாகசெந்நீலம் கதைகளை கூறுகின்றது இதில் இவ்வாறான பாடங்களானது நாமே எவ்வாறு கற்றுக்கொள்வது என்றும் மற்றவர்களுக்கு எவ்வாறு கற்றுக்கொடுப்பது என்றும் மிகவிவரமாக உதவுகின்றது பள்ளியில் பயிலும் மாணவர்கள் முதல் கல்லாரியில் பயிலும்இளைஞர்கள் வரையுள்ள அடுத்த தலைமுறையாளர்கள் அனைவரும் எளிதாக நிரல்தொடர் குறிமுறை வரிகளை எழுத பயனுள்ள தளமாக இது விளங்குகின்றது முகநூல் , ட்விட்டர் ,இன்ஸட்டாகிராம் யூட்யூப் போன்ற சமூதாய இணையதளங்கள் அனைத்தும் ம்க்களை பொழுது போக்காக பயன்படுகின்றவே தவிர சுயமாக புதியவைகளை கற்றுக்கொண்டு புத்தாக்கங்களை உருவாக்குவதற்கான உத்வேகத்தை சுயசிந்தனையை இவை வளர்க்கவில்லை ஆனால் இந்த “Ready” எனும் இணையதளமானது அனுபவமே இல்லாதவர்களையும் புத்தாக்கங்களை புதியவைகளை உருவாக்கிடுவதற்கான திறனை உருவாக்குகின்றது நமக்கு நிரல் தொடர் குறிமுறை வரிகள் எதுவும் எழுததெரியாது நான் எங்கேபுதிய பயன்பாட்டினை உருவாக்கமுடியும் என ஏங்கி தவித்திடும் அனைவரும் வாருங்கள் http://www.getready.io/எனும் இந்த தளத்திற்கு வந்து நீங்களும் புதிய பயன்பாடுகளை உருவாக்கிட கற்ற பயன்பெற்றிடுங்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: