லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-56-உருவப்படம் அமைவு இடத்தை சரிசெய்தல் அளவைசரிசெய்தல் தொடர்ச்சி

Position and Sizeஎனும் உரையாடல் பெட்டியின் Rotationஎனும் தாவியின் திரையில் உள்ள Pivot point, Rotation angleஆகிய வாய்ப்பு களை பயன்படுத்தி லிபர் ஆஃபிஸ் கால்க்கில் உருவாக்கப்படும் உருவப்படத்தை நாம் விரும்பிய திசையில் விரும்பிய அளவிற்கு சுழற்றி அமைக்கமுடியும்

அதே போன்று இதே உரையாடல் பெட்டியின் Slant & Corner Radiusஎனும் தாவியின் திரையில் உள்ள Corner Radius, Slantஆகிய வாய்ப்புகளை பயன்படுத்தி லிபர் ஆஃபிஸ் கால்க்கில் உருவாக்கப்படும் உருவப்படத்தின் சுழலும் கோணஅளவை நாம் விரும்பிய அளவிற்கு  அமைக்கமுடியும்

1.

1

லிபர் ஆஃபிஸ் கால்க்கின் திரையில் ஒன்றிற்கு மேற்பட்ட உருவப்படங்கள் இருந்தால் அவற்றை வரிசையாக அடுக்கி வைத்திடமுடியும் அதற்காக தேவையான உருவப்படங்களை தெரிவுசெய்துகொள்க பின்னர் திரையின் மேலே உள்ள முதன்மை கட்டளை பட்டையில்Format => Arrange=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேவையான உருவப்படங்களை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Bring to Front, Bring Forward, Send Backward, Send to Back, To Foreground, To Backgroundஆகிய. வாய்ப்புகளில் நாம்விரும்பும் ஒன்றினை தெரிவுசெய்துசொடுக்குக

அல்லது திரையின் மேலேஉள்ள உருவப்படங்களுக்கான கருவிகளின் பட்டையில் Bring to Front அல்லதுSend to Back ஆகிய கருவிகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் உருவப்படங்களானது நாம் கட்டளையிட்டவாறு வரிசையாக அமைந்திருக்கும்

இவ்வாறான உருவப்படங்களை நிலையாக ஒரே இடத்தில் நிறுத்துவதற்காக திரையின் மேலே உள்ள முதன்மைகட்டளை பட்டையில்Format => Anchor => To Page=> அல்லது To Cell=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தேவையான உருவப்படத்தை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் To Page அல்லது To Cell ஆகிய. வாய்ப்புகளில் நாம்விரும்பும் ஒன்றினை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது திரையின் மேலேஉள்ள உருவப்படங்களுக்கான கருவிகளின் பட்டையில்Change Anchor எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர் விரியும் உருவங்களில் To Page அல்லது To Cell ஆகிய. வாய்ப்புகளில் நாம்விரும்பும் ஒன்றினை தெரிவுசெய்துசொடுக்குக

லிபர் ஆஃபிஸ் கால்க்கின் திரையில் ஒன்றிற்கு மேற்பட்ட உருவப்படங்கள் இருந்தால் அவற்றை தேவையானவாறு நகர்த்தி சரிசெய்து அமைத்திடமுடியும் அதற்காக தேவையான உருவப்படங்களை தெரிவுசெய்துகொள்க பின்னர் திரையின் மேலே உள்ள முதன்மை கட்டளை பட்டையில்Format => Alignment=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக அல்லது தேவையான உருவப்படங்களை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Alignment எனும் கட்டளை வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக

அல்லது திரையின் மேலேஉள்ள உருவப்படங்களுக்கான கருவிகளின் பட்டையில் Alignmentஎனும் கருவியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் Left, Centered, Rightஆகிய கிடைமட்ட கட்டளைகளில் அல்லது Top, Center, Bottomஆகிய நெடுமட்ட கட்டளைகளில் நாம் விரும்பிய கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் உருவப்படங்களானது நாம் கட்டளையிட்டவாறு சரிசெய்து அமைந்திருக்கும்

இவ்வாறான உருவப்படங்களை குழுவாக ஒருங்கிணைக்கலாம் அல்லது குழுவாக இருப்பதை தனித்தனியானதாக இருக்குமாறு செய்திடலாம் குழுவாக செய்வதற்காக

தேவையான உருவப்படங்களை தெரிவுசெய்துகொள்க பின்னர் திரையின் மேலே உள்ள முதன்மை கட்டளை பட்டையில் Format => Group => Group=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேவையான உருவப்படங்களை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Group எனும் கட்டளைவாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக

இவ்வாறு குழுவாக இருப்பதை திருத்தம் செய்வதற்காக தேவையான உருவப்படங்களை தெரிவுசெய்துகொள்க பின்னர் திரையின் மேலே உள்ள முதன்மை கட்டளை பட்டையில்Format => Group => Edit Group=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக அல்லது தேவையான உருவப்படங்களை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Group => Edit Group=> எனும் கட்டளைவாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக

திருத்தம் செய்தபிறகு அந்த குழுவிலிருந்து வழக்கமான கால்க்கின் திரைக்கு இடம் சுட்டி வெளியில் வருவதற்காக திரையின் மேலே உள்ள முதன்மை கட்டளை பட்டையில்Format => Group => Exit Group=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேவையான உருவப்படங்களை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Group =>Exit Group=> எனும் கட்டளை வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக

2.

2

லிபர் ஆஃபிஸ் கால்க்கில் உள்ள வரைகலை கருவிகளுக்கான கருவிகளின் பட்டையானது கால்க்கின் திரையில் தோன்றவில்லையெனில் திரையின் மேலே உள்ள முதன்மை கட்டளை பட்டையில் View => Toolbars => Drawing=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக மேலும் இதில் கருவிகளை கூடுதலாக சேர்த்திட இதில் காலியான பகுதியில் இடம்சுட்டியை வைத்திட்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Visible Buttons எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இந்த வரைகலை கருவிகளின் பட்டியில் உள்ள கருவிகளை பயன் படுத்தி தேவையானவாறு திருத்தம் செய்துகொள்ளலாம் குறிப்பிட்ட செயல் தேவையில்லை எனில் விசைப்பலகையில் Escஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

3

3

வரைபடத்தின் பண்பியல்புகளை மாற்றியமைத்திட Drawing Object Propertiesஎனும் கருவிகளின் பட்டையை பயன்படுத்தி கொள்க இவ்வாறான வரைபடத்தினை மீயிணைப்பு செய்திடலாம் இதற்காக தேவையான வரைபடத்தை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியல் Hyperlinkஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Hyperlinkஎனும் உரையாடல் பெட்டியில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு உரைகளின் பெட்டியில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொள்க

4

4

லிபர் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளில் இவ்வாறு உருவப்படங்களை சேர்த்திடுவதால் இதனுடைய கோப்பின் கொள்ளளவு பெரியதாக மாறிவிடும்அதனை குறைத்து சரிசெய்வதற்காக தேவையான வரைகலையை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Compress Graphic என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றிடும் உரையாடல் பெட்டியில் சுருக்குவதற்கு தேவையான வாய்ப்புகளை மாற்றியமைத்திட்டு Calculateஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து எவ்வளவு குறைந்துள்ளது என கணக்கிட்டு தெரிந்துகொண்டபின்னர் திருப்தியுற்றால் OKஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

வரைகலையை திருத்தம் செய்வதற்காக தற்போது இருக்கும் கருவிகள் போதுமானதாக இல்லை வெளியிலிருக்கும் கருவிகளை பயன்படுத்திடவேண்டுமென விரும்பினால் தேவையான வரைகலையை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Edit with External Tool என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றிடும் உரையாடல் பெட்டியின் வாய்ப்புகளில் தேவையானவைகளை பயன்படுத்தி கொள்க

5

5

மீயிணைப்பு அல்லது இணைய இண்ப்பின் வாயிலாக உருவப்படங்கள் Server Side Image Map, Client Side Image Mapஆகிய இருவகையில் உள்ளன அவைகளை இணைப்பு செய்திடுவதற்காக திரையின் மேலே உள்ள முதன்மை கட்டளை பட்டையில் Edit-=> Image Map=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியம் Image Map Editor எனும் உரையாடல் பெட்டியில் தேவையான இணைய முகவரி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்துகொள்க இந்த உருவப்படங்களை SIP – Star View Image Mapஎன்ற வடிவமைப்பில் சேமித்திடவேண்டும் இவ்வாறு வடிவமைப்பு எதுவும் தெரிவு செய்திட முடியாதபோது இயல்புநிலையில் தானாக இந்த வடிவமைப்பில் சேமித்திட Applyஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக திருப்தி யுற்றால் saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்துகொள்க அல்லது முதலில் OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக திருப்தி யுற்றால் Applyஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்துகொள்க

6

6

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: