முன்பெல்லாம் நம்முடைய கைகளில் அதிலும் பெண்களின் கைகளில் மருதாணி பூசிக்கொண்டு கைகளை அழுகுபடுத்திகொள்வது மிகமுக்கியமான பழக்கமாக இருந்துவந்தது நாகரிக வளர்ச்சியினால் அதனை விட்டொழித்துவிட்டோம் இருந்தாலும் ஒருசிலர் தற்போதும் அவ்வாறே தம்முடைய கைகளில் மருதாணியை பூசி அழுகுபடுத்திகொள்ள விரும்புவார்கள் அவ்வாறானவர்கள் தம்முடைய கைகளில் எவ்வாறெல்லாம் மருதாணி பூசிக்கொள்வது எனும் செயல்முறைகளைக் கூறுவதற்கான பெரியோர்கள் இல்லாது போய்விட்டனர் அஞ்சற்க அவ்வாறானவர்களுக்கு உதவவருவதுதான் http://inkhunter.tattoo/ எனும் இணைய தளமாகும் இந்த தளத்திற்கு வந்தவுடன் முதலில் Watch Video எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய கைகளில் மருதாணியை கொண்டு எவ்வாறெல்லாம் அழுகுபடுத்தி கொள்ளமுடியும் எனும் செயல்முறையை கானொளி காட்சியாக நம்முடைய கண்களால் கண்டிடுக பின்னர் தேவையெனில் இந்த கானொளி காட்சியை நம்முடைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் மேலும் இந்த AppStore எனும் பயன்பாடானது ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் விண்டோ ஃபோன்களுள்ள சாதனங்களிலும் செயல்படும் வண்ணம் மேம்படுத்தபட்டுள்ளது என்ற செய்தியை மனதில் கொள்க இந்த திரையின் கீழ்பகுதியில் இது தொடர்பாக புதிய கானொளி காட்சி மேலேற்றப்பட்டிருந்தால் நமக்கு நினைவூட்டுதல் செய்வதற்கான மின்னஞ்சல் பட்டியிலில் நம்முடைய பெயரையும் தேவையெனில் பதிவுசெய்து கொள்க