லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-55 கால்க்கில் வரைகலையை பயன்படுத்துதல்

இந்த லிபர் ஆஃபிஸ் கால்க்கில் வழக்கமாக தரவுகளை வழங்கும் செயலே  பயன்படுத்தபடுகின்றது தொடர்ந்து அந்த தரவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என முன்கணிப்பு செய்யப்படும் செயல் பயன்படுத்தப்படுகின்றது   இந்நிலையில் வரைகலையானது சாதாரனமாக  தரவுகளின் கொள்கலணாக இருந்த விரிதாளினை சிறந்த தொவில்நுட்ப தகவல்-களமாகவும் மேற்கோள்காட்டிடும் விரிதாளாகவும் உயர்த்திவிட்டது. இந்த கால்க்கில் வெக்டார்(கோட்டு)வரைபடம், புள்ளிவரைபடம் ஆகிய வடிவமைப்பு கோப்புகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்   பொதுவாக பயன்படுத்திடப்படும் வரைபடகோப்புகளானது  GIF, JPG, PNG,  BMP ஆகிய வடிவமைப்புகளை கொண்டதாகும் கால்க்கில் வரைகலையானது மூன்று அடிப்படை வகைகளில் பயன்படுத்திகொள்ளப் படுகின்றது உருவப்படக்கோப்புகள், நிழற்படங்கள், வரைபடங்கள், வருடப்பட்டபடங்கள் ஆகியவை இந்த வகையை சார்ந்தவைகளாகும்  இதிலுள்ள டயாகிராம் எனும் படங்கள் லிபர் ஆஃபிஸின் வரைபடகருவியை பயன்படுத்தி உருவாக்கபட்டவையாகும் இது வரைபடமும் வரைகலையும் சேர்ந்து லிபர் ஆஃபிஸின் வரைபட வசதியை பயன்படுத்தி உருவாக்கப் பட்டது ஆகும்  லிபர் ஆஃபிஸின் மற்ற பயன்பாடுகளை போன்றே கால்க்கிலும் வரைகலையை பயன்படுத்திவந்தாலும் அவைகளின் வித்தியாசமாக இந்த கால்க்கில்  எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என இந்த பகுதியில் இப்போது காண்போம் .

குறிப்பு இங்கு வரைகலை என்பது படமும் வரையும் பொருளும் சேர்ந்ததை குறிப்பதாகும்   படங்களையும் மற்றவரைபடங்களையும் குறிக்கின்ற உருவப்படம் என்பது  ஒரு வரைபொருளன்று என்ற செய்தியை அறிந்துகொள்க

வரைகலையை (உருவப்படங்களை) சேர்த்தல் லிபர்ஆஃபிஸில்  சில நேரங்களில் படங்கள் என அழைக்கபடும் வரைகலை அல்லது உருவப்படம் நிறுவனங்களின் உருவப்படம், நிழல்படம் போன்றவை கால்க்கின் விரிதாளில் பெரும்பாலும் பயன்படுத்திடும் பொதுவான வரைகலை வகைகளாகும் அவைகள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவையாகவும் வருபடப் பட்டவை-யாகவும் வரைகலை பயன்பாட்டில் உருவாக்கபட்டவையாகவும் படப்பிடிப்பு கருவியின் வாயிலாக எடுக்கப்பட்ட நிழல்படங்களாகவும் இருக்கும் இந்த உருவப்படங்கள் கால்க்கின் விரிதாளில்   1.Insert Picture எனும் உரையாடல் பெட்டியை பயன்படுத்துவதன்வாயிலாக ,  2.gallery இலிருந்து, 3.வேறு இடங்களிலிருந்து  clipboard என்பதன் மூலம் நகலெடுத்து ஒட்டுவதிலிருந்து ஆகிய மூன்று வழிகளில் உள்ளிணைக்கபடுகின்றன

உருவப்படங்களை உள்ளிணைத்தல் பெரும்பாலான வரைகலைகளின் மூலங்களாக நடப்பிலிருக்கும் கோப்புகளை பின்வருமாறு ஒரு கோப்பிலிருந்து உருவப்படங்களை உள்ளிணைப்பு செய்வதேயாகும்  அதற்காக

  1. கால்க்கின் விரிதாளில் உருவப்படத்தினை தோன்றச் செய்திட விரும்பும் தேவையான கலணை தெரிவுசெய்து சொடுக்குக இந்நிலையில் கோப்பின் இடஅமைவைபற்றி அதிக கவலைபடவேண்டாம் இதனை பின்னர் மாற்றியமைத்து கொள்ளலாம்.

  2 பின்னர் திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Insert => Picture => From File=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக   அல்லது திரையின் மேலே  Insert எனும் கருவிகளின் பட்டையில் From File என்ற உருவப்-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  இந்த  Insertஎனும் கருவிகளின் பட்டை திரையில் தோன்றவில்லையெனில்    திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் View => Toolbars => Insert=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

3 உடன் தோன்றிடும்  Insert Picture எனும் உரையாடல் பெட்டியில் நாம் உள்ளிணைத்திடவிரும்பும் உருவப்படத்தை தேடிப்பிடித்து தெரிவு செய்து கொள்க

 4 பின்னர்  தேவையென விரும்பினால்  Preview என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து நாம் தெரிவுசெய்த படத்தினை சிறிய அளவில் முன்காட்சியாக கண்டு உறுதிபடுத்திகொள்க

5 அதன்பின்னர்   கணினியின் அமைவிற்கேற்ப  Insert as Link அல்லது Link என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்த வழிமுறையில் இணைப்பு ஏற்படுத்தினால் உண்மைகோப்புடன் எப்போதும் இணைப்பில் இருக்கும் உண்மை கோப்பில் மாறுதல் செய்தால் இணைப்பிலும் மாறுதல்கள் அடைந்துவிடும்   Insert as Link அல்லது Link என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடவிலலையெனில் படம் மட்டும் உள்பொதியபட்டுவிடும் பின்னர்  Open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த படமானது கால்க்கின் விரிதாளில் நாம் விரும்பிய கலணில் மிதக்கும்

குறிப்பு இந்த  Insert Picture எனும் உரையாடல் பெட்டியானது நம்முடைய இயக்கமுறைமைக்கு ஏற்ப வித்தியாசமாக தோன்றிடும் அதாவது  Tools => Options => LibreOffice => General=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தோன்றிடும்  லிபர் ஆஃபிஸ் Open/Save என்ற உரையாடல் பெட்டியின் தோற்றமானது நாம் கட்டமைவுசெய்தவாறு அமைந்திருக்கும்

கோப்புகளை   இணைத்தல்  விரிதாளில்    உருவப்படத்தினை உள்பொதிவதற்கு     பதிலாக அந்த உருவப்படத்தின்    கோப்பினை   இணைப்பாக   செய்வதற்காக      Insert picture dialog என்ற  உரையாடல் பெட்டியை பயன்படுத்திகொள்க.  அதில்  Insert as Link அல்லது Link ஆகிய வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்   இதனால் நமக்கு பாதிப்பு ஏற்படும் என  உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றி நம்மை எச்சரிக்கை செய்திடும்  தொடர்ந்து இதனை உறுதிபடுத்திடுமாறும் Keep Link அல்லது Embed Graphic ஐ மாற்றுவது ஆகிய இரண்டில் ஒன்றினை தெரிவுசெய்து  உறுதி படுத்திடுமாறு கோரும்

1.

Keep Link  என்பதை தெரிவுசெய்தால் இந்த ஆவணத்தில் உருவப்படம் பிரதிபலிக்கும் ஆனால்  ஆவணத்தினை சேமித்திடும்போது   அந்த உருவப்படத்தின் இணைப்பு மேற்கோளாக மட்டுமே சேமிக்கப்படும் உருவப்படம் சேமிக்கபடமாட்டாது ஆவணமும் உருவப்படமும் தனித்தனி கோப்பாகவே பராமரிக்கபடும்  இந்த விரிதாளினை மீண்டும் திரையில் தோன்ற செய்திடும் போது மட்டும் உருவப்படம் திரையில் அதனோடு கூடவே மீண்டும் தோன்றிடும்

  இதனால் ஏற்படும் சாதகங்கள்  விரிதாளினை மாறுதல்கள் செய்திடாமல் உருவப்படகோப்பினை மட்டும் மாறுதல்கள் செய்திடலாம்  ஏனெனில் இரண்டிற்குமிடையேயான இணைப்பு தொடர்ந்து இருக்கின்றது அதனால் உருவப்படத்தில் செய்த மாறுதல்களானது அடுத்தமுறை விரிதாளினை திரையில் தோன்றிடசெய்திடும்போது மாறியமையும். இது மிகப்பெரிய சாதகமான செயலாகும்  வரைகலை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் விரிதாளிற்குள் நுழையாமலேயே மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும் உருவப்படங்களை நிகழ்நிலை படுத்திகொள்ளமுடியும்  அதன்பின்னர் விரிதாளினை திரையில் தோன்றச்செய்திடும்போது உருவப்படத்தில்  நாம் செய்த மாறுதல்களானது தானாகவே விரிதாளிலும் நிகழ்நிலை படுத்தபடும்

 Embed Graphic  என்பதை தெரிவுசெய்திருந்தால்  விரிதாளில் உருவப்படம் பிரிதபலிக்கும்  உருவப்படகோப்பு விரிதாளிற்குள் உள்பொதியப் பட்டுவிடும்  அதன்பின்னர்இந்த இரண்டு கோப்புகளும் ஒன்றாக ஒன்றிணைக்கபட்டுவிடும்

 இதனால் ஏற்படும் சாதகங்கள்  இணைப்பினை செய்திடும்போது விரிதாள் கோப்பின் அளவு மாறாமல் இருக்கின்றது உருவப்படம் உட்பொதியப் படவில்லை யென்பதால் எவ்வாறு இருந்தாலும்  கோப்பின் அளவு புதிய தற்கால கணினியில் ஒரு பொருட்டன்று  வேறு பேரளவு வரைகலை கோப்பினை விரிதாள் உள்ளே வைத்துகொள்ளாதவரை கால்க்கானது எளிதாக பேரளவு கோப்புகளை கையாளும் திறன்கொண்டதாக விளங்குகின்றது

   இதனால் ஏற்படும் பாதகங்கள்  வேறு யாருக்காவது இந்த ஆவணத்தினை அனுப்பிட விரும்பினால்  அல்லது வேறு கணினிக்கு இந்த கோப்பினை கொண்டுசெல்ல விரும்பினால்  கோப்பு கட்டமைவை பராமரிப்பதாற்காக உருவப்படகோப்பினையும் சேர்த்து அனுப்பவேண்டும் அல்லது கொண்டு செல்லவேண்டும்  அதன்மூலம் இணப்பை உருக்குலைப்பதை தவிர்க்கலாம் அல்லது விரிதாளில் காலியான பகுதியாக விடப்படுவதை தவிரக்கலாம் ஏனெனில்  கால்க்கானது இணைப்பு கோப்பினை தேடிபிடிக்காது

  குறிப்பு ஒருஆவணத்தில் ஒரே உருவப்படத்தினை திரும்பதிரும்ப பலமுறை உள்ளிணைத்திடும் போது இணைப்பாக உருவாக்குவதற்காக பயனாளர்களின் முன் தோன்றிடும்  எதுஎப்படியிருந்த போதிலும் லிபர்ஆஃபிஸானது ஒருஉருவப்பட கோப்பு நகலை மட்டும் அந்த ஆவணத்தில் உட்பொதிவது தேவையற்றதாகும்  இவ்வாறான ஒன்றிற்கு மேற்பட்ட நகல்களை நீக்கம் செய்வது அதே கோப்பில் உள்ளமற்ற நகல்களை பாதிக்காது

உருவப்படகோப்புகளைஉட்பொதிதல்  நம்முடைய விரிதாளில் ஒரு உருவப்படத்தினை உட்பொதிதல் செய்திடும்போது நம்முடைய விரிதாளில் நிலையானதொரு உருவப்படமாக அமைகின்றது இந்த உட்பொதிந்த உருவப்படத்தில் செய்திடும் மாறுதல்கள் உண்மை உருவப்படத்தினை பாதிப்படையச்செய்யாது. விரிதாளில் உருவப்படத்தினை உட்பொதிய செய்வதற்காக தேவையான உருவப் படத்தினை நகலெடுத்து வந்து விரிதாளின் தேவையான கலணில் ஒட்டுதல் அல்லது  தேவையான விரிதாளின கலணில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்தபின்னர் Insert Picture எனும் உரையாடல் பெட்டியின் மூலம் தேவையானவரைபடத்தை தேடிப்பிடித்து தெரிவுசெய்துகொண்டு Embed Graphic என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

  இதனால் ஏற்படும் சாதகங்கள் வரைகலையை உட்பொதிந்திடும்போது இணைப்புகோப்பு தயார்நிலையில் அதே கணினியில் இருக்கவேண்டிய அவசியமில்லை உள்பொதியப் பட்டவரைபடம் தானாகவேவிரிதாளில் தோன்றிடும்

  இதனால் ஏற்படும் பாதகங்கள் வரைகலையைஉட்பொதிதல் என்பது கோப்பின்அளவை பெரியதாக ஆக்குகின்றது அதனால் நம்முடைய வரையரைக்குள் கணினியின் நினைவகத்தை வைத்துள்ளவர்களுக்கு சிக்கலான செயலாகிவிடும் .மேலும் உண்மையான வரைகலையில் செய்திடும் திருத்தம் இந்த உட்பொதியப்படும் வரைகலையில் நிகழ்நிலைபடுத்தபட்டு பிரதிபலிக்காது

  குறிப்பு சாதாரன வரைகலைபடமானது லிபர் ஆஃபிஸின் விரிதாளில் உள்பொதியபடும்போது இதனுடைய வரைகலை வடிவமைப்பானது தானாகவே   PNG வடிமைப்பிற்கு மாற்றியமைத்துகொள்ளும்

இணைக்கப்பட்ட உருவப்படங்களை உட்பொதிதல்   உண்மையில் உருவப்படங்களை இணைத்திருந்தால்  பிற்காலத்தில் நாம் விரும்பும் போது அதனை உள்பொதியபட்டபடமாக அமைத்துகொண்டு கால்க்கின் விரிதாளினை சேமித்துகொள்ளமுடியும் இதற்காக  உருவப்படம் இணைக்கபட்ட விரிதாளினை திரையில் தோன்றிட செய்திடுக பின்னர் திரையின் மேலே முதன்மை பட்டியில் Edit => Links=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் Edit Linksஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றி விரிதாளில் இணைக்கப்ட்ட கோப்புகளை பட்டியலாக காண்பிக்கும்  அவற்றுள் விரிதாளில்  உட்பொதியவிரும்பும் கோப்பினை மட்டும் தெரிவுசெய்துகொள்க பின்னர் Break Linkஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் இந்த செயலை உறுதிபடுத்திடுமாறு நம்மிடம் கோரும் அதனை ஆமோதித்திடுக  உடன் நாம் தெரிவுசெய்த கோப்பின் உருவப்படமானது விரிதாளில் உட்பொதியப்பட்டு விடும்.

2.

குறிப்பு இவ்வாறு உட்பொதியப்பட்ட உருவபடகோப்பினை மீண்டும் இணைப்பாக உருமாற்றுவது சிறிது சிரமமான செயலாகும் அதற்காகமுதலில்  விரிதாளில் உள்ள அனைத்து உட்பொதியபட்ட உருவப்படங்களையும் ஒரேசமயத்தில் நீக்கம் செய்திடுக  அதன்பின்னர் Insert as Link அல்லதுr Linkஎன்ற வாய்ப்பின் வாயிலாக ஒவ்வொரு கோப்பாக இணைத்திடுக

 நகலெடுத்தலும்     ஒட்டுதலும்     clipboard ஐ பயன்படுத்தி கால்க்கின் ஒரு விரிதாளிலிருந்து மற்றொரு விரிதாளிற்கு அல்லது கால்க்கின் ஒரு விரிதாளிலிருந்து லிபர் ஆஃபிஸின் ரைட்டர், ட்ரா போன்ற மற்ற பயன்பாட்டிற்குள் உருவப்படங்களை நகலெடுத்து ஒட்டிடலாம் அல்லது லிபர்  ஆஃபிஸின் மற்ற பயன்பாடுகளிலிருந்து உருவப்படங்களை நகலெடுத்து வந்து    கால்க்கின் விரிதாளிற்குள் ஒட்டிடலாம்  உருவப்படகோப்புகளை நகலெடுத்து ஒட்டுதல் செய்வதற்காக முதலில் 1. உருவப்படகோப்புகளை நகலெடுத்து ஒட்டுதல் செய்திட விரும்பும் கால்க்கின் அல்லது இதர பயன்பாடுகளின் இரு ஆவணங்களயும் திரையில் தோன்றிட செய்திடுக. அடுத்ததாக2. மூலக்கோப்பில் நகலெடுத்திட விரும்பும் உருவப்படத்தை தெரிவுசெய்துகொள்க . 3. பின்னர் திரையின் மேலே முதன்மை பட்டியில் Edit => Copy=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது செந்தர முதன்மை கருவிகளின் பட்டியில் Copyஎன்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+Cஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக  உடன் நாம் தெரிவுசெய்த உருவப்படமானது  clipboard இல் நகலெடுத்து வைத்துகொள்ளும்   4. அதன்பின்னர் உருவப்படத்தை ஒட்டிட விரும்பும் விரிதாளிற்கு அல்லது வேறு பயன்பாட்டிற்கு சென்றிடுக  5 அங்கு  திரையின் மேலே முதன்மை பட்டியில்Edit => Paste=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது செந்தர முதன்மை கருவிகளின் பட்டியில்  Pasteஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+Vஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக  உடன் நாம் தெரிவுசெய்த உருவப்படமானது  clipboard இலிருந்து   உருவப்படத்தை நாம் விரும்பிய இடத்தில் ஒட்டப்பட்டுவிடும்

  குறிப்பு இந்த வழிமுறைக்கு பதிலாக நகலெடுத்திடவிரும்பம் உருவப்படத்தை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Copyஎன்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக அதன்பின்னர் ஒட்டிடவிரும்பும் பகுதிக்கு சென்று இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்   Pasteஎன்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக  இந்த வழிமுறையானது லிபர் ஆஃபிஸின் பயன்பாட்டிற்குள் மட்டும்  செயல்படும் என்ற செய்தியை மனதில்கொள்க

   Galleryஐ பயன்படுத்துதல்  இந்த வழிமுறையில் உருவப்படங்கள், ஒலிகள் ஆகிய பயனுள்ள திரும்ப திரும்ப பயன்படுத்திடும் தயார்நிலையில் உள்ள பொருட்களை  வசதியான வழிகளில் நம்முடைய ஆவணத்தில் உள்ளிணைத்திட  உதவுகின்றது  இந்த வழிமுறையானது லிபர் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் நாம் பயன்படுத்திடுவதற்கு ஏதுவாக தயார்நிலையில் உள்ளது நிதி ,கணினி, மக்கள் என்பனபோன்ற குழுவானஒருங்கிணைக்கப்பட்ட ஏராளமான வகையில் உருவபடங்கள் லிபர்ஆஃஸிஸ் தயார் நிலையில்உள்ளன.  இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக திரையின் மேலே செந்தர கருவிகளின் பட்டியில் Galleryஎன்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  அல்லது  நகலெடுத்திடவிரும்பம் உருவப்படத்தை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  Insert => Copy=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேவையான உருவப்படத்தினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பிடித்துகொண்டு  அப்படியே பிடியை விடாமல் இழுத்துசென்று தேவையான இடத்தில் விட்டிடுக

  இயல்புநிலையில் இந்த  Galleryஆனது கால்க்கின் விரிதாளில்திரையின் மேலே கட்டப்பட்டிருக்கும்  இருகோடுகளுக்கிடையே சிறிய அளவாக இது இருக்கும்  இதனுடைய  கீழ்பகுதியின் கோட்டினை இடம்சுட்டியால் பிடித்து இழுத்து இதனை தேவையெனில் விரித்துகொள்க விரிதாளில் நாம் பணிபுரியும் இடத்தினை குறைத்திடாமல் இருக்குமாறு செய்திட இந்த Galleryஇன்மீது  இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குக அல்லதுவிசைப்பலகையில்  Ctrl+Shift+F10ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக  உடன் இந்த Galleryஆனது மிதக்கும் பலகமாக மாறியமையும்  இந்த Galleryஇல்உள்ள Hide/Showஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக திரையில் மறைத்திடலாம் அல்லது மறைந்திருப்பதை திரையில் தோன்ற செய்திடலாம் இந்த Galleryஐ நிரந்தரமாக மூடிவிடுவதற்காக   திரையின் மேலே முதன்மை பட்டியில் Tools => Gallery=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விரியும் திரையில் Galleryஎன்பதன் தேர்வுசெய்பெட்டியில் தேர்வுசெய்திருப்பதை நீக்கம் செய்திடுக அல்லது செந்தர கருவிகளின் பட்டியில்Gallery என்ற உருவபொத்தானை மீண்டும் தெரிவுசெய்துசொடுக்குக

3

உருவப்படங்களை மாறுதல்செய்தல்       இவ்வாறு உட்பொதியபட்ட அல்லது இணைக்கபட்ட  உருவப்படங்களை நாம்விரும்பி்யவாறு  போதுமான அளவிற்கு மட்டும் கால்க்கிலுள்ள  கருவிகளை கொண்டு மாறுதல்கள் செய்து கொள்ளலாம் மேலும் மெருகூட்டிடவிரும்பினால் ஜிம்ப் எனும் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திகொள்க. உருவப்படங்களை கால்க்கின் விரிதாளிற்குள் உட்பொதிந்தவுடன் படங்களை திருத்தம் செய்வதற்காக Picture toolbarஎனும் செந்தர கருவிப்பட்டி திரையில் தோன்றிடும்  அவ்வாறு தோன்றவில்லையெனில் திரையின் மேலே முதன்மை பட்டியில் View => Toolbars => Picture=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து தோன்றிடசெய்திடுக  இதிலுள்ளFilter, Graphics mode,Color,  Transparency என்பன போன்ற கருவிகள் உருவப் படங்களை  திருத்தி மாறுதல்கள் செய்வதற்கு உதவுகின்றன

 உருவப்படங்களில் தேவையற்றதை வெட்டி சரிசெய்தல் இதற்காக சரிசெய்திடவிரும்பும் உருவப்படத்தை தெரிவுசெய்துகொள்க  பின்னர் Picture toolbarஎனும் செந்தர கருவிபட்டியிலுள்ள Crop Picture என்ற உருவப்பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Crop என்ற உரையாடல் பெட்டியில் Crop,Scaleஎன்பனபோன்ற தயார் நிலையிலுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி சரிசெய்தபின்னர் OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக

4

 குறிப்பு இவ்வாறு சரிசெய்திடும்போது உண்மை படம் பாதிக்காது  விரிதாளிலிருந்து  வடிவமைப்பிற்கு பதிவேற்றம் செய்திடும்போது உண்மைபடமே பதிவேற்றம் ஆகும்

 உருவப்படத்திற்குள் உரையை சேர்த்தல்   உரையை உருவப்படத்திற்குள் இணைத்திட்டால் கால்க்கானது அதனையும் சேர்த்து உருவப்படமாகவே பாவிக்கும்

 உரையை உள்ளிணைக்கவிரும்பும் உருவப்படத்தை தெரிவசெய்துகொள்க பின்னர்  சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக.  உடன் இடம்சுட்டி உருவபடத்தில் விட்டுவிட்டு பிரிபலிக்கும் உரைவடிவமைப்பு செய்வதற்கான கருவிப்பட்டை தானாகவே திரையின் மேலே பிரதிபலிக்கும் தேவையான உரையை உள்ளீடு செய்துகொண்டு  உரைவடிவமைப்பு கருவிபட்டையின் உதவியால் சரிசெய்துகொள்க  இதன்பின்னர் உருவப்படத்தின் வேறுபகுதியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்திடுக  இதன்பின்னர் இந்த உரையின்மீது இடம்சுட்டியை வைத்து வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சூழ்நிலைபட்டியை தோன்றசெய்திடுக அதில் Textஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Textஎனும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு மாறுதல்கள் செய்து உரையை சரிசெய்து அமைத்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

5

உருவப்படம்    அமைவு   இடத்தை   சரிசெய்தல்    அளவைசரிசெய்தல்

சுட்டியை பயன்படுத்துதல்   தேவையான உருவப்படத்தை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து பிடித்து இழுத்துசென்றுபுதியஇடத்தில் விட்டிடுக. உருவப்படத்தின் தேவையான ஓரப்பகுதியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பிடித்து இழுத்து உருவப்படத்தை விரித்திடலாம் அல்லது சுருக்குதல் செய்திடலாம்   Shiftஎனும் விசையை பிடித்துகொண்டு சுட்டியின் பொத்தானை சொடுக்குதல் செய்வதன்வாயிலாக பழைய அளவிற்கு கொண்டு செல்லலாம்

Position and Sizeஎன்ற உரையாடல் பெட்டியை பயன்படுத்திடுதல் இதற்காக  திரையின் மேலே முதன்மை பட்டியில் Format => Graphic=> Position and Size => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  அல்லது தேவையான உருவப்படத்தின் மீது இடம் சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  Position and Sizeஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக   உடன் Position and Sizeஎன்ற உரையாடல் பெட்டி Position and Sizeஎன்ற தாவிப்பொத்தானின் திரையுடன் தோன்றிடும்  இதிலுள்ள  Adapt, Position, Protect, Size, என்பன போன்ற வாய்ப்புகளை தேவையானவாறு பயன்படுத்தி கால்க்கின் விரிதாளில் உள்ள உருவப்படத்தை சரிசெய்துஅமைத்து கொள்க

6

 

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. srimalaiyappan
    ஜூலை 05, 2016 @ 16:46:31

    அருமையான தகவல்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: