விண்டோ பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய பயன்பாடுகள்

பின்வருபவை கட்டணமற்ற விண்டோ இயக்கமுறைமையில் பயன்படும் விண்டோ இயக்க முறைமையை பயன்படுத்தி வரும் ஒவ்வொருவரும்  கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய அத்தியாவசிய பயன்பாடுகளாகும்

1.7-Zip  என்பது WinRAR/WinZip என்பன போன்று பெரிய கோப்புகளைசுருக்கி கட்டுவதற்கு பயன்படுகின்றது

  1. C.Cleaner என்பதை கொண்டு தேவையற்ற குப்பையான கோப்புகளை நீக்கம் செய்து நம்முடைய கணினியின் நினைவகத்தை துடைத்து சுத்தமாக வைத்திருக்கலாம்
  2. Evernote என்பது குறிப்பெடுக்க உதவும் பயன்பாடாகும் இதனை எங்கிருந்தும் எந்த சாதனத்திலிருந்தும் பயன்படுத்தி கொள்ளலாம்
  3. f.luxஎன்பது நாம் இருக்கும் இடத்தின் தட்ப வெப்பநிலை சூழ்நிலைக்கு ஏற்ப கணினியின் திரையின் வெப்பநிலையும் பிரதிபலிக்கும் அளவையும் நம்முடைய கணினி பாதுகாப்பிற்கு ஏற்ப சரிசெய்துகொள்ள பயன்படுகின்றது
  4. Geek Uninstaller என்பது நம்முடைய கணினியின் இருக்கும் பயன்பாடுகள் அவைகளின் பதிவுகள் தவறவி்ட்ட கோப்பகங்கள், கோப்புகள் ஆகியவைகளை அறவே நீக்கம் செய்திட பயன்படுகின்றது
  5. Ninite என்பது புதியதாக கணினி ஒருவர் வாங்கிவிட்டார் அதனை முதன்முதல் இயக்கதுவங்கிடும்போது அவருடைய கணினிக்கு தேவையான அனைத்து பயன்பாடுகளையும் ஒவ்வொன்றாக இணையத்தில் தேடி பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்வதற்கு பதிலாக இந்த Ninite மட்டும் விண்டோ பயன்பாட்டில் செயல்படுத்தினால் போதும் அவருடைய கணினிக்கு தேவையான அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே வரிசையாக இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில்நிறுவுகை செய்துகொள்ளும்
  6. PC Decrapifier என்பது நம்முடைய கணினியின் உற்பத்தியாளர் நமக்கு கணினியோடு வழங்கிய தேவையற்ற பயன்பாடுகள் அனைத்தையும் நீக்கம் செய்து கணினியின் செயல்வேகத்தை விரைவாக்குகின்றது
  7. Recuva என்பது நம்முடைய கணினியை நாம் பயன்படுத்தி கொண்டு வரும்போது கைதவறுதலாக ஏதேனும் பயன்பாட்டினை நீக்கம் செய்துவிட்டிருந்தால் கவலையே படாதீர்கள் இந்த Recuva ஆனது உங்களுக்கு கைகொடுக்கின்றது அவ்வாறான பயன்பாடடினை மீட்டாக்கம் செய்து பழைய நிலையில் செயல்பட உதவுகின்றது
  8. Secunia Personal Software Inspector என்பது நம்முடைய கணினியில் உள்ள பயன்பாடுகள் ஏதேனும் நம்முடைய கணினிக்கு தீங்குவிளைவிக்குமாறு இருந்தால் உடன் அதனை சரிசெய்து சரியாக செயல்படுமாறு செய்கின்றது
  9. Unchecky என்பது நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்திடும் பயன்பாடுகளின் கட்டுகளில் ஏதேனும் தேவையற்றவை இருந்தால் அவைகளை நீக்கம் செய்திட பயன்படுகின்றது

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: