கணினியை முதலில் செயல்படுத்திட உதவும் GRUB ஐபற்றி அறிந்துகொள்வோம்

எந்தவொரு கணினியை இயக்கத்துவங்கியவுடன்boot loader எனும் முதல் மென்பொருளே இயக்கதுவங்கும் இந்த boot loader ஆனது செயல்படத்துவங்கியதும் Kernalஐ மேலேற்றுதல் செய்திடும் அதனைதொடர்ந்து இந்த Kernal ஆனது செயல்படத்துவங்கி இயக்குமுறைமையே மேலேற்றிடும் பின்னர் இயக்கமுறைமை செயல்படத்துவங்கி கணினியை நாம் பயன்படுத்த அனுமதிக்கும் இந்த கணினியின் துவக்க இயக்கத்தை செயல்படுத்திடும் boot loader ஆக GNU GRUPஎன்பதையே பிரபலமான இயக்கமுறைமைகள் பயன்படுத்தி கொள்கின்றன இது பயன்படுத்துவதற்கு எளிய உற்ற நன்பனாக பல்லடுக்கு துவக்கத்திற்கு நமக்கு உதவுகின்றது இந்த GRUPஆனது முதன்முதல் 1995 இல் எரிச் பூலியன் என்பவரால் உருவாக்கபட்டது பின்னர் 1999இல் சிறிது மேம்படுத்தபட்டது தெளிவானதாகவும் பாதுகாப்பானதாகவும் திறனுள்ளதாகவும் 2002 ஆம் ஆண்டு மேம்படுத்தபட்டது இறுதியாக நாம் அனைவரும் பயன்படுத்திடும் GRUP இயல்புநிலையில் இயக்கமுறையுடன் சேர்ந்து பயன்படுத்திகொள்ளுமாறு செய்யப்பட்டு நாம் தற்போது பயன்படுத்திவருகின்றோம் இந்த கணினியின் துவக்க இயக்கமானது பல்லடுக்குகளை ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்த அடுக்குகளை கொண்டதாகும்

BIOS என்பது முதல்அடுக்கு இயக்கமாகும் அடிப்படைஉள்ளீடு வெளியீடு அமைவு (Basic InputOutput System)சுருக்கமாக BIOS சரிபார்த்தல் செயலாகும் இந்த BIOS மென்பொருளானது தாய்ப்பலகையிலுள்ள ROMஎனும் சிப்பில் தேக்கிவைக்கபட்டிருக்கும் இது செயல்பட்டு சரிபார்ப்பதை மின்னினைப்பை வழங்கியதும் சுயபரிசோதனை Power on Self Test (POST) ஆக அனைத்து வன்பொருட்களும் சரியாக உள்ளனவா அவைகளுக்கு போதுமானஅளவு மின்சாரம் செல்கின்றதா என சரிபார்ப்பு செய்திடும்

அடுத்ததாக boot loader ஆன GRUP boot loader எனும் பல்லடுக்கு துவக்க இயக்கமேலேற்றி செயல்படத்துவங்கும் இது கணினியின் அடிப்படையான Kernalஐ மேலேற்றுதல் செய்து கணினியின் இயக்க கட்டுபாட்டினை கெர்னலிற்கு மாற்றிவிடும்

மூன்றாவதாக இந்த Kernal ஆனது இடைநிலை படியாக மென்பொருளிற்கும் வன்பொருளிற்கும் இடைமுகமுகவராக செயல்படத்துவங்கிடும் இ்நத கெர்னல்லானது I/Oகோரிக்கைய நிருவகித்தல் செயல்களை படிமுறையாக செயல்படுத்துதல் கணினியின் நினைவகத்தை நிருவகித்தல் ஆகிய கணினியின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பான முகவராக செயல்படுகின்றது initசெயல்கள் துவங்கசெய்கின்றது

நான்காவதாக நம்முடைய கணினியில் நிறுவுகை செய்யபட்டுள்ள இயக்கமுறையானது initசெயல்களின் தொடர்ச்சியாக செயல்படதுவங்குகின்றது அனைத்து கோப்பமைவுகள் அமைவுகளின் பண்பியல்புகள் வன்பொருளின் ஒத்தியங்கும தன்மை ஆகியவை சரியாக உள்ளதாவென சரிபார்த்தவுடன் நாம் இந்த இயக்கமுறைமையின்மீது செயல்படும் பயன்பாடுகளை நம்மை பயன்படுத்திகொள்ள அனுமதிக்கின்றது

இந்த GRUP ஐ நம்முடைய கணினி முழுவதும் அதாவது ஒரேயொரு இயக்கமுறைமையாக பயன்படுத்திடுவதற்கும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கமுறைமையாக பயன்படுத்திகொள்வதற்கும் என இருவழிகளில் நிறுவகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இந்த GRUP இல் பிரச்சினை எனில்Boot -repairஎன்ற மென்பொருள் கைகொடுக்கின்றது இந்த Boot -repairஎன்ற மென்பொருளும் Recommended repair , Advanced options ஆகிய இருவகையான வாய்ப்புகளில் பயன்படுமாறு இருக்கின்றது

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. srimalaiyappan
  ஜூன் 30, 2016 @ 02:04:27

  அருமை

  மறுமொழி

  • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
   ஜூன் 30, 2016 @ 06:26:14

   தங்கள் வருகைக்கும் எளிய தமிழில்கணினி தகவலில்  வெளியிடப்படும் கட்டுரைகளின் மீதான  தங்களுடைய   மேலான கருத்திற்கும்   நன்றிதொடர்ந்து உங்களின் வருகையையும் கருத்துகளையும் வேண்டி காத்திருக்கும்   என்றும்  தங்கள் அன்புள்ள முனைவர் ச.குப்பன்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: