நம்முடைய செயல்திட்டத்தினை கட்டுபடுத்திட ட்ரில்லோ என்ற இணையசேவையை பயன்படுத்திகொள்க  

   6

எந்தவொரு பதிய செயலிற்குமான பதிய செயல்திட்ட அட்டைகளை பயன்படுத்தி  அடுத்தடுத்து என்னசெய்யவேண்டும் என நமக்கும் நம்முடைய குழுவிற்கும் வழிகாட்டி உதவதயாராக இருக்கும்  Trello என்பதொரு மிகச்சிறந்த  ஆச்சரியமான திறனுள்ள இணையதள கருவியாக திகழ்கின்றது

மேலும் இதுஒரு கட்டணமற்ற நெகிழ்வுதன்மையுடனான செயல்வழிகாட்சியாக யார்வேண்டுமானாலும் எந்த செயலைவேண்டுமானாலும் எப்போது வேண்டு-மானாலும் செய்யஉதவிடும் ஒரு  பரவசமூட்டிடும் இணைய தள கருவியாகும்

 இதனுடைய சேவையை பெறுவதற்காக https://trello.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க  இந்த தளத்திற்கு வந்தவுடன் மேலே வலதுபுறமூலையில்  நம்முடைய பெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொற்கள் போன்ற விவரங்களுடன்  New Account என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது நமக்கென கூகுள் கணக்கு இருந்தால் அதைகூட இந்த தளத்தின் பதிவிற்காக பயன்படுத்திகொள்க உடன் நமக்கு நம்முடைய கணக்கு துவங்கியதற்கான ஆமோதிப்பு மின்னஞ்சல் ஒன்று் வந்துசேரும்  அதன்பின்னர் நம்முடைய செயல்திட்டத்திற்கென தனியான boards and lists  ஐ உருவாக்கிடுக  இந்த ட்ரில்லோவானது நாம் எங்கிருந்தாலும் கணினி, ஆண்ட்ராய்டு பயன்படும் செல்லிடத்து பேசி ,டேப்ளெட் ,ஐபேடு, கிண்டில் ஆகிய எந்த சாதனத்தின் வாயிலாகவும் தொடர்புகொண்டு நம்முடைய செயல்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி கொள்ளமுடியும்  அவ்வாறே நம்முடைய செயல்திட்டத்திற்கான கோப்புகளை நம்முடைய கணினி ,கூகுள்ட்ரைவ், ஒன்ட்ரைவ், ட்ராப்பாக்ஸ் ஆகியவற்றில் எதிலிருந்தும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் . ஒட்டிடும் குறிப்புதாட்கள், விரிதாட்கள், மின்னஞ்சல் , மென்பொருள் ஆகியவற்றை உடனிணைத்து நம்முடைய செயல்திட்டத்தை நிருவகிக்கலாம்   தனிப்பட்ட குடும்ப பணிமுதல்  பெரிய பெரிய பணிகளை முடிப்பதற்கான செயல்திட்டங்கள்வரை அனைத்தையும் இந்த இணைய கருவியை கொண்டு எளிதாக நிருவகிக்கலாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: