லினக்ஸ் இயக்கமுறைமைக்கு ஏன்மாறவேண்டும்

 மிகநீண்ட நாட்களாக அதாவது ஏறத்தாழ பத்தாண்டுகள் விண்டோ எக்ஸ்பி எனும் விண்டோ இயக்கமுறைமையை நாமனைவரும் பயன்படுத்திவந்தோம் அதன்பின்னர் இந்த விண்டோ எக்ஸ்பிக்கான ஆதரவை விளக்கி கொள்ளப் போவதாக மைக்ரோசாப்ட்நிறுவனம் அறிவித்தது அதனைதொடர்ந்து விண்டோ எக்ஸ்பி எனும் இயக்கமுறைமையை பயன்படுத்திவரும் அனைவரும் விண்டோவிஸ்டா போன்ற இயக்கமுறைமையை பயன்படுத்தியேஆகவேண்டும் என்ற கட்டாய சூழல் எழுந்தபோது இதற்கு மாற்றாக வேறு இயக்கமுறைமை உள்ளதாவென தேடிடும்போது கட்டணமே இல்லாத கட்டற்ற லினக்ஸ் அடிப்படையிலான ஏராளமான இயக்கமுறைமைகள் இருக்கின்றன என்ற செய்தி தெரியவந்தது இவை மிகப்பழைய கணினிமுதல் சமீபத்திய கணினி வைத்திருந்தாலும் எந்தவித பிரச்சினையுமில்லாமல் அவைகளில் இயங்கும் திறனுடன் இந்த லினக்ஸ் அடிப்படையிலான இயக்கமுறைமைகள் உள்ளன இவ்வாறு லினக்ஸ் இயக்கமுறைமைக்கு மாறுவதற்குமுன் பின்வரும் கேள்விகளை தெளிவுபடுத்திகொண்டால் கண்டிப்பாக மாறிடலாம்

லினக்ஸ் இயக்கமுறைமைக்கு ஏன் மாறவேண்டும் விண்டோ இயக்கமுறைமையானது அவ்வப்போது புதிய புதிய இயக்கமுறைமையை கட்டணத்துடன் வெளியிட்டுகொண்டே இருப்பதால் கட்டணத்தை செலுத்திதான் புதிய இயக்கமுறைமையை பயன்படுத்தமுடியும் என்ற நெருக்கடி எதுவுமில்லாமல் கட்டணமில்லாத லினக்ஸ் இயக்கமுறைமை பயனுள்ளதாக அமைகின்றது

லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்தி கொள்வதற்காக புதிய செயல்முறைகளை வழிமுறைகளை அறிந்துகொள்ளவேண்டுமா ஆம் நம்மில் ஒருசிலர் புதிய செயல்முறைக்கு வழிமுறைக்கு செல்லாமல் இயந்திரம் போன்று செய்த செயலையை திரும்ப திரும்ப செய்துகொண்டு இருக்கவிரும்புவார்கள் அவ்வாறானவர்கள் விண்டோ இயக்கமுறைமையை தொடர்ந்து பின்பற்றலாம் புதியதை கற்று செயல்படுத்திடவிரும்புவோர் லினக்ஸ் அடிப்படையிலான இயக்கமுறைமையினை அறிந்து கொண்டு தமக்கு தேவையானவாறு இயக்கமுறைமையையே மாற்றியமைத்து பயன்படுத்திகொள்ளலாம்

விண்டோவில் செயல்படும் பயன்பாட்டினை லினக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படுத்தி பயன்பெறமுடியுமா விண்டோவில் செயல்படும் பயன்பாட்டிற்கு இணையான பயன்பாடுகள் லினக்ஸ் இயக்கமுறைமையில் உள்ளன இவை கட்டணமற்ற கட்டற்ற பயன்பாடுகளாகும் இவைகளை பயன்படுத்தி பயன்பெறலாம் அல்லது Windows emulator என்பதை லினக்ஸ்இயக்கமுறைமை பயன்படுத்திடும் கணினியில் நிறுவுகை செய்து செயல்படுத்தி விண்டோவில் செயல்படும் பயன்பாடுகள் அனைத்தையும் லினக்ஸிலும் செயல்படுமாறு செய்து பயன்பெறலாம்

மேலும் இந்த லினக்ஸ் அடிப்படையிலான இயக்கமுறைமைகள் அவ்வப்போது அல்லது ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய மேம்பட்ட பதிப்புகள் தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப செயல்படுமாறு வெளியபட்டுகொண்டேயுள்ளன என்ற செய்தியையும் மனதில் கொள்க

4.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: