தற்போது நாம் பயன்படுத்திவரும் அனைத்து பயன்பாடுகளுக்கும் இணையான பயன்பாடுகளை பரிந்துரைக்கும் AlternativeTo.net எனும் தனத்தின் சேவையை பயன்படுத்தி பயன்பெறுக

பல்வேறு பயனாளர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது நம்மால் பயன்படுத்தி கொள்ளப் பட்டு வரும் எந்தவொரு பயன்பாடுகளுக்கும் மாற்றாக ஏராளமான வகையில் சிறந்த பயன்பாடுகளை இந்த தளம் நமக்காக பரிந்துரைக்கின்றது அவைகளுள் நமக்கு பிடித்த சிறந்த பொருத்தமான பயன்பாட்டினை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த தளமானது நம்முடைய கணினி, மடிக்கணினி(tabelet) அல்லது செல்பேசிகளில் பயன்படுத்தி கொள்வதற்காக பொருத்தமான மிகச்சரியான வகையில் ஏராளமான அளவில் பல்வேறு பயன்பாடுகளை பரிந்துரைக்கின்றது ஆயினும் இந்த பயன்பாடுகள் அனைத்தும் தற்போது எந்தநிலையில் இருக்கின்றனவோ அதேநிலையில் பயன்படுத்தி கொள்ளமுடியும்என பரிந்துரைக்கப்படுகின்றது இந்த தளத்தின் இந்த சேவைக்காக கட்டணம் எதுவும் நம்மிடமிருந்து வசூலிக்கப்படுவதில்லை. அதற்குபதிலாக வழக்கம்போன்று இந்த தளத்தின் சேவையை பயன்படுத்தி கொள்வதற்கு முதலில் இந்த தளத்தில் நமக்கென தனியானதொரு பயனாளர் பெயர் (முகநூல் அல்லது ட்விட்டர் பயனாளர் பெயரை கூட அப்படியே பயன்படுத்திகொள்ளலாம்) கடவுச்சொற்களுடன் பதிவுசெய்துகொண்டு உள்நுழைவு செய்திடுக. அதன்பின்னர் what app do you want to replace? என்ற உரைப்பெட்டியில் தற்போது நாம்பயன்படுத்திகொண்டுவரும் பயன்பாட்டிற்கு பதிலீடாக மாற்றிட விரும்பும் பயன்பாட்டின் பெயரை தட்டச்சுசெய்துகொண்டு FIND APPS என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் பயன்படுத்திவரும் பயன்பாட்டிற்கு இணையான ,பதிலீடான, பதிலான பயன்பாடுகள் ஏராளமான அளவில் பட்டியலாக திரையில் விரியும் அவைகளுள் நம்முடையகணினி, மடிக்கணினி(tabelet) அல்லது செல்பேசிகளில் பயன்படுத்தி கொள்வதற்கான பொருத்தமான ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க மேலும் விவரங்களுக்கு .http://alternativeto.netஎன்ற இணைய பக்கத்திற்கு சென்று அறிந்துகொண்டு இந்த தளத்தின் சேவையை பயன்படுத்திகொள்க.

1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: