விண்டோ10  இயக்கமுறைமைக்கு மேம்படுத்தி கொள்ளுங்கள் என்ற தொல்லையை தவிர்த்திட  Never10 என்ற பயன்பாட்டினை உபயோகபடுத்திகொள்க

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோ7 விண்டோ8.1 ஆகிய இயக்கமுறைமைகளை பயன்படுத்தி இணையத்தை தொடர்பு கொள்ளும் அனைவரின் கணினியிலும் உங்களுடைய கணினியின் இயக்கமுறைமையை உடனடியாக விண்டோ10  இயக்கமுறைமைக்கு மேம்படுத்தி கொள்ளுங்கள் என்ற தொல்லையானவிளம்பமானது தாங்கமுடியாத அளவு நமக்கு எரிச்சலுட்டுவது அனைவரும் அறிந்ததே அஞ்சற்க இவ்வாறான தொல்லைகளிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காகவே Never10 என்ற பயன்பாடானது பாதுகாப்பு கவசமாக விளங்குகின்றது  இந்த பயன்பாடானது நாம் நம்முடைய இயக்கமுறைமைய விண்டோ10 ஆக மேம்படுத்திட விரும்ப வில்லை எனில் இவ்வாறான தொல்லையை முடக்கிவிடவும் (disabled)  மேம்படுத்திகொண்டால் நல்லது அதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் எனில் செயலில்  கொண்டுவரவும்    முடியும் . இந்த பயன்பாடானது  விண்டோ7 விண்டோ8.1 ஆகிய இரு இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது நம்முடைய கணினியில் தனியாக இதனை நிறுவுகை செய்திடதேவையில்லை அதற்குபதிலாக நம்முடைய கணினியில் செயல்படும் இயக்கமுறைமையின் அமைவில் திருத்தம் செய்து  புதிய சான்றிதழை கையொப்பம் இடுவதன் வாயிலாக மிக பாதுகாப்பாக செயல்படுத்திடபடுகின்றது

2

இது எவ்வாறு செயல்படுத்தபடுகின்றது எனில் HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows\Gwx எனும் இயக்க முறைமையின் முதல் திறவுகோளில்  32-bit DWORD என்பதின் மதிப்பான DisableGwx என்பது 1 என அமைத்து கொள்ளபடுகின்றது

அவ்வாறே  HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows\WindowsUpdate எனும் இயக்க முறைமையின் இரண்டாவது திறவுகோளில்  32-bit DWORD என்பதின் மதிப்பான DisableOSUpgrade என்பது 1என அமைத்து கொள்ளபடுகின்றது தேவையில்லையெனில் இதனை நீக்கம் செய்தால் போதும்.

தேவையெனில்முதல் திறவுகோளான 32-bit DWORD என்பதின் மதிப்பான DisableGwx என்பதை நீக்கம் செய்தால் போதும் அவ்வாறே இரண்டாவது திறவுகோளான 32-bit DWORD என்பதின் மதிப்பான DisableOSUpgrade என்பதை நீக்கம் செய்தால் போதும் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: