லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-52.வரைபடத்தின் இடஅமைவையும் அளவையும் மாற்றிமைத்தல்

  வரைபடத்தில் வரைவதற்கான கருவிகளை கொண்டு கோடு ,முக்கோணம், வட்டம், உரைபொருட்கள், குறியீடுகள், குழுவான அம்புக்குறியீடுகள் போன்றஉருவங்களை சேர்க்கமுடியும் இதன்வாயிலாக வரைபடத்தினை பற்றிய விளக்கக்குறிப்புகளையும் முக்கியமான கருத்துகளையும் வழங்கமுடியும் மேலும் விவரங்களுக்கு வரைகலை வழிகாட்டியில் காண்க.

 ஒரேநேரத்தில் இடைமுகம் செய்தல், Position and Sizeஎனும் உரையாடல் பெட்டியை பயன்படுத்துதல்  ஆகிய இருவழிமுறைகளில்  வரைபடத்தின் அளவை மாற்றி யமைத்திடவும் இதன் அனைத்து உறுப்புகளை இடமாற்றியமைக்கவும் முடியும். இவையிரண்டு வழிமுறைகளையும் ஒன்றாக இணைத்து  அதாவது முதலில் இடைமுகம் செய்தலின் வாயிலாக  விரைவான எளிதான மாறுதலையும்  பின்னர் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டியை பயன்படுத்தி நல்ல சரியான அளவையும் இடத்தையும் அமைத்திடமுடியும்  இதற்காக தேவையான வரைபடத்தினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வரைபடத்தின் நான்கு மூலைகளிலும் கைப்பிடிபோன்ற அமைப்புடன் வரைபடம் தெரிவு செய்யபட்டுவிடும்  அந்த கைப்பிடியில் தேவையானதைமட்டும் தெரிவுசெய்து பிடித்து இழுத்து சென்று வரைபடத்தின் அளவை கூட்டவோ குறைக்கவோ முடியும்  அதுமட்டுமல்லாது இவ்வாறு வரைபடத்தினை தெரிவுசெய்தநிலையில்  வரைபடத்தின்மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்து குறிப்பிட்ட பகுதியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பிடித்து இழுத்து சென்று தேவையான இடத்தில் விட்டிடுக

  அதன்பின்னர் தேவையான வரைபடத்தினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வரைபடத்தின் நான்கு மூலைகளிலும் கைப்பிடிபோன்ற அமைப்புடன்  வரைபடம் தெரிவு செய்யப் பட்டுவிடும் பின்னர் வரைபடத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில்  Position and Sizeஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்  அதிலுள்ள Position and Sizeஎனும் தாவியின் பக்கத்தில்  Position , Size,Protect,Adaptபோன்றவைகளின் கீழுள்ள வாய்ப்புகளில் தேவையானவாறும் அவ்வாறே   Rotation எனும் தாவியின் பக்கத்தில் Pivot point,Rotation angle போன்றவைகளின் கீழுள்ள வாய்ப்புகளில் தேவையானவாறும்  அவ்வாறே Slant & Corner Radius எனும் தாவியின் பக்கத்தில் Corner Radius,Slantபோன்றவைகளின் கீழுள்ள வாய்ப்புகளில் தேவையானவாறும் தெரிவுசெய்துகொண்டுOkஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 வரைபடத்தினை பதிவேற்றம் செய்தல் தேவையான வரைபடத்தினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வரைபடத்தின் நான்கு மூலைகளிலும் கைப்பிடிபோன்ற அமைப்புடன்  வரைபடம் தெரிவுசெய்யபட்டுவிடும் பின்னர் வரைபடத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில்  Export as graphicஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Graphics Exportஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் இந்த வரைகலைக்கு ஒரு பெயரை உள்ளீடு செய்துகொண்டு சேமிக்கவேண்டிய இடத்தினையும்  வரைகலையின் எந்த வடிவமைப்பில் சேமிக்க வேண்டும் எனவும்  தெரிவுசெய்துகொண்டு Saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

வரைபடவகைகளின் தொகுப்புபார்வையாளருக்கு நாம் வழங்கும் வரைபடத்தின் வாயிலாக எவ்வாறான தகவலை வழங்கவிருக்கின்றோம் என்பதற்கேற்ப அதற்கேற்ற  வரைபடத்தின் வகையை தெரிவுசெய்து கொள்க அதன்வாயிலாக மிகச்சரியாக பார்வையாளர்கள் நாம் கூறவிழையும் செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்  இதற்காக லிபர் ஆஃபிஸ் கால்க்கில் ஏராளமான வகையான வரைபடங்கள்உள்ளன அவைகள் பின்வருமாறு

1 நெடுவரிசை வரபடங்கள்(Column charts)   சிறிய அளவு தரவுகளின் போக்கினை அறிந்துகொள்ள இந்த வகையானவரைபடங்கள் பயன்படுகின்றன இதில்Normal,  Stacked,  Percent ஆகிய மூன்று வகைகள் உள்ளன மேலும் இந்த  வரைபடத்தின் தரவுகளைகொண்டு Box, Cylinder, Cone, Pyramidஆகிய வடிவமைப்புகளில் நாம் தெரிவுசெய்வதற்கேற்றமுப்பரிமான வரைபடத்தோற்றத்தினையும் வழங்கிடமுடியும்

2.பட்டைவரைபடங்கள் (bar charts) நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை ஒப்பீடு செய்வதற்கு இந்த வகையானவரைபடங்கள் பயன்படுகின்றன இதில் Xஅச்சு பொருட்களின் அளவையும்  Y அச்சு பொருட்களின் வகைகளையும் குறிக்கின்றன வரைபடவழி- காட்டியின் உதவியுடன்  Insert => Grids=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர்  Y அச்சினை தெரிவுசெய்யாதுவிட்டிட்டு  Insert => Mean Value Lines=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த பட்டை வரைபடத்தினை திரையில் கொண்டுவர முடியும் மேலும் இந்த  வரைபடத்தின் தரவுகளை கொண்டு Box, Cylinder, Cone, Pyramidஆகிய வடிவமைப்புகளில் நாம் தெரிவு செய்வதற்-கேற்றமுப்பரிமான வரைபடத் தோற்றத்தினையும் வழங்கிடமுடியும்

12.1

1

3வட்டவரைபடங்கள் (Pie Charts) இதுஒருவட்டத்திற்குள் நாம் ஒப்பிடும் பொருட்கள் அனைத்தையும் அதன் அளவிற்கேற்ப குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டு தனித்தனி வண்ணங்களில் காண்பிக்க பயன்படுகின்றது  இதில் Die,Exploded pie,Donut,Exploded donutஆகிய வகைகள் உள்ளன இதனை Format => Data Ranges => Data Series=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக நம்மிடம் உள்ள தரவுகளை கொண்டு ஒரு வட்டவரை படத்தினை உருவாக்கிடமுடியும் அதுமட்டுமல்லாது Insert => Legend=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக நம்மிடம் உள்ள தரவுகளை கொண்டு இருபரிமான வட்டவரைபடத்தினை உருவாக்கிடமுடியும் அதில் Insert => Data Labels=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக  வரைபடத்தினை தரவுகளோடு காண்பிக்குமாறு செய்திடமுடியும் மேலும்  இதே வரைபட வழிகாட்டியின் உதவியுடன் அல்லது Format => 3D view =>Illumination=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுவதன் வாயிலாக முப்பரிமான வரைபடமாக மேம்படுத்தி கொள்ளமுடியும்

12.2

2

4.பரப்புவரைபடங்கள் (Area charts) கோட்டு வரைபடமும் நெடுவரிசை வரைபடமும் இணைந்து உருவானதே பரப்புவரைபடமாகும் இந்த வரைபடத்தின் X, Y அச்சுகளில் தரவுகளின் மதிப்பை குறிப்பிட்டு காண்பிக்கின்றன.அதாவது  Y அச்சில் அந்தந்த தரவிற்கேற்ப கோட்டினையும்   X அச்சிற்கும் அந்தந்த கோட்டிற்குமிடையே வண்ணத்தையும் நிரப்பி இந்த பரப்புவரைபடம் காண்பிக்கின்றது இதில் Normal, Stacked,Percentஆகிய வகையான வரைடங்கள் உள்ளன   Y அச்சின்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Delete Major Gridஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இந்த Y அச்சில் உள்ள ஒவ்வொரு தரவுதொடருக்கும் சூழ்நிலைபட்டியை தோன்ற செய்து அதில் FormatData Seriesஎன்றவாறு கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து ஒன்றுக்கொன்று மேலேறாமல் தெளிவாக தெரியுமாறு செய்திடுக இவ்வாறே  Xஅச்சின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Format Axis என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் உரையாடல் பெட்டியில்  அமைவுகளை தேவையானவாறு அமைத்து கொள்க மேலும் இதே வரைபடத்தின்மீது இடம்-சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் முதலில் ChartType.என்பதையும் பின்னர் 3D Look என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முப்பரிமான பரப்பு வரைபடத்தை திரையில் பிரதிபலிக்கச்செய்திடுக

12.3

5.கோட்டுவரைபடங்கள்(Line charts) தொடர்ச்சியான தரவுகளின் போக்கினை அறிந்துகொள்ள இந்த கோட்டுவரைபடங்கள் உதவுகின்றன இதிலுள்ள Xஅச்சில் வகையையும் Y அச்சில் புள்ளியையும் குறிக்கின்றன இதில் Points only,Lines only,Points and lines,  3D lines ஆகியவகைகள் உள்ளன வரைபடத்தின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் முதலில் Stack seriesஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக  இது தொடர்ச்சியான தரவுகளை  குறிக்கபயன்படுகின்றது  இதிலுள்ளPropertiesஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து  இதன்பண்பியல்புகளையும்  Percentஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தரவுகளை சதவிகிதத்திலும்  அறிந்துகொள்க.

12.4

4

6.விரிந்த (Scatter)அல்லது  X Y வரைபடங்கள்  தொடர்புடைய இரண்டு தொகுப்பான தரவுகளை ஒருவரைபடத்தில் காண்பிக்க இந்த வரைபடங்கள் பயன்படுகின்றன  இதில் XY (Scatter),XY chart variantsஆகிய வகைகள் உள்ளன வரைபட வழிகாட்டியின் Chart Wizardவாயிலாக அல்லது Format =>Chart Type=> என்றவாறுகட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக  இதனை உருவாக்கிடமுடியும்  இதனுடைய இருபரிமான வரைபடங்களில் திரையின் மேலே கட்டளை பட்டையில் Insert => Y Error Bars=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து  சொடுக்குதல் செய்து பிழைபட்டைகளை உருவாக்கமுடியும் மேலும் மேலே கட்டளை பட்டையில் Tools => Options =>Charts => Default Colors=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து  சொடுக்குதல் செய்து ஒவ்வொருதரவுபுள்ளியையும் தனித்தனி உருவபொத்தானாக காண்பிக்குமாறு செய்திடமுடியும்.

12.5

5

7.குமிழ்வரைபடங்கள்(Bubble charts) இது விரிந்த வரைபடத்தின் மிகமுன்னேறிய   வரைபடங்களாகும்  இந்த விரிந்த வரைபடத்தில் புள்ளிகளில் குமிழாக தோன்றிடுமாறு செய்யபடுகின்றது ஒப்பீட்டு தரவுகளை எளிதாக அறிந்தகொள்ள இவை உதவுகின்றன.

12.6

6

8.வலைவரைபடங்கள்(Net charts) சிலந்தியின் வலைபின்னல் போன்று தரவுகளுக்கிடையேயுள்ள தொடர்புகளை குறித்திட இவை பயன்படுகின்றன மிகமுக்கியமாக தொடர்ச்சியற்ற தரவுகளை ஒப்பீடு செய்வதற்கு இவை பயன்படுகின்றன

12.77

9.முதலீட்டுவரைபடங்கள் (Stock charts)  பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளின் மதிப்பை  அதாவது முதலீட்டின் ஆரம்பவிலை அதிகபட்சவிலை முடிவுவிலை என அந்தந்த நிறுவனங்களின் முதலீடுகளின் விலைநிலவரங்களை அறிந்துகொள்ள இந்த   முதலீட்டு வரைபடங்கள் பயன்படுகின்றன

12.8

8

10.நெடுவரிசையும் கோடும்சேர்ந்த வரைபடங்கள் (Column and line charts)  நெடுவரிசை, கோடு ஆகிய இருவகை வரைபடங்களையும் சேர்த்து உருவாக்கபட்டதுதான் இந்தவகையான வரைபடங்களாகும் இதில் Columns and Lines,Stacked Columns and Linesஆகிய இருவகைகள் உள்ளன .

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: