Grinder எனும் கையடக்க இணையபயன்பாட்டு மென்பொருளின் திறனை பரிசோதிக்க உதவும் கருவி

இ ன்றைய காலகட்டத்தில் மின்வணிகம் என்றும் மின்வியாபாரம் என்றும் மின்வருமாணம் என்றும் மின் ஆளுமை என்றும் கணினியும் இணையமும் சேர்ந்த ஏராளமான பயன்பாடுகள் உச்சகட்டத்தில் உள்ளன ஆயினும் அவையனைத்தும் மிகச்சரியாக செயல்படுகின்றனவா என குறைவான முயற்சியில் பரிசோதித்து பார்ப்பதற்காக Grinder எனும் கையடக்க கட்டற்ற திறனை பரிசோதிக்க உதவும் கருவி உள்ளது இது ஜாவாவின் அடிப்படையிலான வரைச்சட்டம் ஆகவும் பீஸ்டி பாவணையின் கீழான திறமூல அனுமதியையும் கொண்டுள்ளது இது விண்டோ இயக்கமுறைமை சூழலிலும் செயல்படும் திறன்கொண்டது இதனை நம்முடைய கணினியில் செயல்படுத்துவதற்காக முதலில் ஜாவா வரைச்சட்டம் நிறுவுகை செய்யப்பட்டுள்ளதாவென சரிபார்த்து கொள்க இல்லையெனில் அதனை பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க பின்னர் இந்த Grinder எனும் கையடக்க கருவி மென்பொருளை http://sourceforge.net/projects/grinder/ எனும் தளத்திலி்ருந்து பதிவிறக்கம் செய்து கொள்க

6

அதன் பின்னர்நம்முடைய கணினியில் C:/Testing. என்றவாறு பொருத்தமான இடத்தில் இதனை வைத்துகொள்க. பின்னர் jython என்பதையும் http://jython.org/download.html/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க பிறகு இவைகளை அவைகளின் கோப்புகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துநம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க மிகமுக்கியமாக இதிலுள்ள TCPproxy எனும் கருவி பரிசோதனைக்கு உதவுகின்றது அதனால் அதனை கட்டமைவு செய்திடவேண்டும் அதனால் நம்முடைய இணைய உலாவியான ஃபயர்ஃபாக்ஸினை proxy சேவையாளராக பயன்படுத்திகொள்க அதற்காக Fire Fox இன் பட்டியலை திறந்து அதில் optionsஎனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் optionsஎனும் சாளரத்தில் advancedஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில்network எனும் தாவியின் திரையை தோன்றசெய்திடுக அதன்பின்னர் இந்த network எனும் தாவியின் திரையைலுள்ள connection எனும் பகுதியிலுள்ள settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் connection settings என்றசாளரத்தில் Manual proxy configuration என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க மேலும் இதில் HTTP proxyஎன்பதற்கு localhostஎன்றும் port என்பதற்கு 8001 என்றும்அமைத்துகொண்டு use this proxy server all protocols என்றவாய்ப்பை தெரிவுசெய்துகொள்க அதுமட்டுமின்றிno proxy for the text box என்றவாய்ப்பினை தெரிவுசெய்யாதுஉள்ளதாவென உறுதிபடுத்திகொண்டுconnection seetings என்ற சாளரத்திலும் optionsஎன்ற சாளரத்திலும் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் கட்டமைவுசெய்ததை சேமித்துகொள்க அதன்பின்னர் நாம் இந்த TCPproxy எனும் கருவியை கொண்டு இணைய பயன்பாடுகளை பரிசோதித்து பார்த்திடலாம் பரிசோதனை முடிவில் Stopஎனும் பொத்தானை அழுத்தி பரிசோதிப்பு செயலைநிறுத்தம் செய்துகொள்க புதியதாக இணையபயன்பாடுகளை உருவாக்குபவர்கள் இந்த Grinder எனும் கையடக்க கருவியிலுள்ள Grinder Analyserஎன்பதை பயன்படுத்தி பரிசோதித்து பார்த்து கொள்க என பரிந்துரைக்கபடுகின்றது.

6.1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: