லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-51 வரைபடத்தையும் வரைகலையையும் கையாளுதல்2

தரவு சீட்டுகள்(Data Labels)

 இந்த தரவு சீட்டுகள்  ஒரு வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு தரவுபுள்ளியை பற்றிய தகவல்-களையும் பிரதிபலிக்கசெய்வதாகும்  அதன்மூலம் மிகவிரிவான தகவல்களை சமர்ப்பிக்க ஏதுவாக இருக்கும் ஆனாலும் படிப்பதற்கு அதிக குழப்பமான ஒருவரைபடத்தினை தயார்செய்திடவேண்டாம்

 குறிப்பு தரவு சீட்டுகளின் உரையானது விரிதாளிலிருந்து கொண்டுவரப்படுகின்றது அதனால்  இந்த  தரவு சீட்டுகளில் உள்ள விவரங்களை நம்விருப்பபடி மாற்றிகொள்ளமுடியாது அவ்வாறு நாம் மாற்றியமைத்திடவேண்டும் என விரும்பினால் விரிதாளிலேயே மாற்றியமைத்துகொள்க.

  தரவு சீட்டுகளை நம்முடைய வரைபடத்தில் சேர்த்திடுவதற்காக   முதலில் அவ்வாறு விரும்பும் வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்து பதிப்பித்தல் நிலைக்கு வரைபடத்தை கொண்டுவருக  உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும் .பின்னர் தரவுச்சீட்டாக தரவிரும்பும் தரவுகளில் தேவையானவைகளை மட்டும் தெரிவுசெய்துகொள்க  இல்லையெனில் அனைத்து தரவுகளும் இந்த தரவு சீட்டுகளுக்காக எடுத்துகொள்ளும்  அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert => Data Labels=> என்றுவாற கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தரவுச்சீட்டுகள்(Data Labels)  என்ற உரையாடல் பெட்டிய திரையில் தோன்றிடும்

1

1

  பின்னர் இந்த உரையாடல் பெட்டியில் உள்ளShow value as number(இதனருகிலுள்ள Number format எனும் பொத்தான் செயலில் இருக்கும்), Show value as percentage( இதனருகிலுள்ள Percentage formatஎனும் பொத்தான் செயலில் இருக்கும்),Show category,Show legend keyஆகிய வாய்ப்புகளில் நமக்குத்தேவையான -வற்றையும் கூடுதலாக Separator,Placement,Rotate Text,Text Directionஆகிய வாய்ப்புகளில் தேவையானதைமட்டும் தெரிவுசெய்துகொண்டுOKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

    அல்லது இதற்கு பதிலாக  தேவையான தரவுகளில் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  Insert Data Labelsஎன்ற கட்டளையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக இந்த வழிமுறையானது தரவு சீட்டுகளின் இயல்புநிலை அமைவில் மட்டும் பின்பற்றபடும். அதன்பின்னர் வரைபடத்தினை விட்டு வெளியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து வரைபடத்தின் பதிப்பித்தல் நிலைக்கு பதிலாக வழக்கமான நிலைக்கு மாறிவிடுக.

    வரைபடத்தின் தரவுச்சீட்டுகளை நீக்கம் செய்திடுவதற்காக    வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின்  பொத்தானை சொடுக்குதல் செய்து வரைபடத்தினை பதிப்பித்தல் நிலைக்கு கொண்டுவருக. உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும்.பின்னர் வரைபடத்தில் நீக்கம் செய்திடவிரும்பும்  தரவுச்சீட்டினை தெரிவு செய்து கொள்க அதன்பின்னர்  திரையின் மேலே கட்டளைபட்டையில்  Insert => Data Labels=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது    தேவையான தரவுசீட்டின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  Format Data Labelsஎன்ற கட்டளையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக.  பின்னர் தரவுச்சீட்டுகள்(Data Labels)  என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்  அதில் தெரிவுசெய்யபட்டுள்ள அனைத்து வாய்ப்புகளையும் தெரிவுசெய்யாதுவிட்டிட்டு  OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

  அல்லது இதற்கு பதிலாக  தேவையான தரவுகளில் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  Delete Data Labelsஎன்ற கட்டளையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு   வரை படத்தில் எத்தனை தரவுசீட்டுகளை நீக்கம் செய்திடவிரும்புகின்றோமோ அத்தனை முறை இதே வழிமுறையை பின்பற்றிடுக .அதன்பின்னர் வரைபடத்தினை விட்டு வெளியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து வரைபடத்தின் பதிப்பித்தல் நிலைக்கு பதிலாக வழக்கமான நிலைக்கு மாறிவிடுக.

போக்குகோடுகள்(Trend lines)

 ஒரு வரைபடத்திலுள்ள குழுவான விரிந்து பரந்துள்ள தரவுகளை அவைகளுக்கு இடையே உள்ள தொடரினை குறித்திட  போக்குகோடுகள் எனும் வசதி பயன்படுகின்றது இந்த போக்கு கோடுகளை குறிப்பிடுவதற்காக linear, logarithm, exponential,  powerஆகிய பின்னோக்கும் வகையை  லிபர் ஆஃபிஸ் கால்க்கானது வைத்துள்ளது  இந்த புள்ளிகளை குறிப்பிடுவதற்காக அவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய வகையை மட்டும்  தெரிவுசெய்தால் போதுமானதாகும்  இந்த போக்குகோடுகள் pie-charts  , stock charts ஆகியவகையை தவிர மிகுதி அனைத்தையும் இருபரிமானவரைபடத்தில் சேர்த்துகொள்ள முடியும்.  பொதுவாக வரைபடத்திலுள்ள தரவுகளை தெரிவுசெய்தவுடன் அந்த தரவுகளுக்கான போக்குகோடுகள் உடன் உள்ளிணைக்கப்படும்  குறிப்பிட்ட தரவுகளை தெரிவுசெய்யவில்லையெனில் வரைபடத்திலுள்ள அனைத்து தரவுகளுக்குமான போக்குகோடுகள் உள்ளிணைக்கப்படும் .பின்னர் இவ்வாறு போக்குகோடுகள் உள்ளிணைக்கபட்டவுடன்  தானாகவே இவை திரையில் காண்பிக்கபடும்

 இவைகளை வரைபடத்தில் இணைப்பதற்காக . முதலில் அவ்வாறு விரும்பும் வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்து பதிப்பித்தல் நிலைக்கு வரைபடத்தை கொண்டுவருக  உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும் .பின்னர் போக்குகோடுகளாக தரவிரும்பும் தரவுகளில் தேவையானவைகளை மட்டும் தெரிவுசெய்துகொள்க  இல்லையெனில் அனைத்து தரவுகளையும் இந்த போக்குகோடுகளுக்காக எடுத்துகொள்ளும்  அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert => Trend Lines=>என்றுவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் போக்குகோடுகள்(Trend lines)  என்ற உரையாடல் பெட்டிய திரையில் தோன்றிடும்   அல்லது இதற்கு பதிலாக  தேவையான தரவுகளில் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  Insert Trend Linesஎன்ற கட்டளையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக

குறிப்பு குறிப்பிட்ட தரவுகள் அல்லது அனைத்து தரவுகளுக்கும் ஒரே மாதிரியான உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும்  ஆனால் இரண்டாவது வகைக்கு மட்டும் style, color, width, and transparencyஆகிய வாய்ப்புகளுள்ள இதே உரையாடல் பெட்டியின் Lineஎனும் அடுத்த இரண்டாவது தாவிப்பக்கம் தோன்றிடும்

2.

2

  பின்னர் இந்த உரையாடல் பெட்டியில் Regression Type என்பதன் கீழுள்ளLinear, Logarithmic, Exponential, Powerஆகியவகைக்கான வாய்ப்புகளுள் தேவையான வாய்ப்பினைமட்டும் தெரிவுசெய்துகொண்டு Equation என்பதன் கீழுள்ள Show equation / Show coefficient of determination (R2).ஆகியவற்றில் ஒன்றினை தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு வரைபடத்தினை விட்டு வெளியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து வரைபடத்தின் பதிப்பித்தல் நிலைக்கு பதிலாக வழக்கமான நிலைக்கு மாறிவிடுக.

குறிப்பு  போக்குகோடுகளை வரைபடத்தில் உள்ளிணைத்திடும்போது அதனுடைய வண்ணமானது தரவுகளின் வண்ணமே இருக்கும்  போக்குகோடுகளின் வண்ணத்தினை மாற்றியமைத்திட அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்  Format Trend Lineஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Trend Linesஎனும் உரையாடல் பெட்டியின் Lineஎனும் தாவியின் திரையில் வண்ணத்தை தேவையானவாறு மாற்றியமைத்துகொள்க

  மிகமுக்கியமாக equation அல்லது the coefficientஎனும் தகவல் இந்த போக்குகோடுகளின் மீது தெரியவேண்டும் என எண்ணிடுவோம் ஆனால் இந்த உரையாடல் பெட்டியில் Equation என்பதன் கீழுள்ள இருவாய்ப்புகளுள் ஒன்றினை தெரிவுசெய்யாதுவிட்டிட்டால் பரவாயில்லை  அதற்காக போக்குகோடுகளின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்  Insert Trend Line Equation அல்லது Insert R2 and Trend Line Equationஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.  இதன்பின்னர் நாம் இந்த போக்கு கோடுகளை தெரிவுசெய்தவுடன் அதனைபற்றிய விவரங்களை திரையின் கீழே உள்ள நிலைபட்டையில் காண்பிக்கும்.

 நம்முடைய வரைபடத்தில் இந்த போக்குகோடுகளை நீக்கம் செய்திடுவதற்காக தேவையான வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின்  பொத்தானை சொடுக்குதல் செய்து வரைபடத்தினை பதிப்பித்தல் நிலைக்கு கொண்டுவருக.உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும்  பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert => Trend Lines=>என்றுவாற கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் போக்குகோடுகள்(Trend lines)  என்ற உரையாடல் பெட்டிய திரையில் தோன்றிடும் அதில் Noneஎனும் வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்துகொண்டு  OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  அல்லது இதற்கு பதிலாக  தேவையான தரவுகளில் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  Delete Trend lineஎன்ற கட்டளையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக  உடன் நாம் நீக்கம் செய்திடவிரும்பும் போக்குகோடு வரைபடத்திலிருந்து நீக்கபட்டுவிடும்.அதன்பின்னர் வரைபடத்தினை விட்டு வெளியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து வரைபடத்தின் பதிப்பித்தல் நிலைக்கு பதிலாக வழக்கமான நிலைக்கு மாறிவிடுக.

சராசரிமதிப்பு கோடுகள் (Mean value lines)

 இவை சராசரி மதிப்பை காண்பிக்கும் இருபரிமான வரைபடங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் சிறப்புவகை போக்குகோடுகளாகும். இதற்காக ஒரு வரைபடத்திலுள்ள தரவுகளை தெரிவுசெய்தவுடன் அந்த தரவுகளுக்கான சராசரிமதிப்புகோடுகள் உடன் உள்ளிணைக்கப்படும்  குறிப்பிட்ட தரவுகளை தெரிவு செய்யவில்லையெனில் வரைபடத்திலுள்ள அனைத்து தரவுகளுக்குமான சராசரிமதிப்புகோடுகள் உள்ளிணைக்கப்படும் .பொதுவாக சராசரிமதிப்புகோடுகள் உள்ளிணைக்க பட்டவுடன்  தானாகவே இவை திரையில் காண்பிக்கபடும் இதனை வரைபடத்தில் இணைப்பதற்காக  லிபர் ஆஃபிஸ் கால்க் ஆனது நாம் தெரிவுசெய்த தரவுகளின் சராசரி மதிப்பை ஒவ்வொரு தரவுதொடருக்கும் கணக்கிட்டு வண்ணக்கோட்டினை  இதற்கான சரியான அளவில்  வரைந்து கொள்கின்றது  அந்த தரவுத்தொடருக்கு இதே வண்ணத்தை வழங்குகின்றது.

 இந்த சராசரி மதிப்புகோட்டினை வரைபடத்தில் உள்ளிணைப்பு செய்வதற்காகமுதலில் அவ்வாறு விரும்பும் வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்து பதிப்பித்தல் நிலைக்கு வரைபடத்தை கொண்டுவருக  உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும் .பின்னர் சராசரிமதிப்புகோடாக தரவிரும்பும் தரவுகளில் தேவையானவைகளை மட்டும் தெரிவுசெய்துகொள்க  இல்லையெனில் அனைத்து தரவுகளும் இந்த சராசரிமதிப்பு கோடுகளுக்காக எடுத்துகொள்ளும்  அதன்பின்னர் திரையின் மேலே கட்டளை பட்டையில் Insert => Mean Value Lines=>என்றுவாற கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக     அல்லது இதற்கு பதிலாக  தேவையான தரவுகளில் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  Insert Mean Value Linesஎன்ற கட்டளையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக  உடன் வரைபடத்தில் சராசரிமதிப்பு கோடுகள் (Mean value lines)  உள்ளிணைக்கபட்டுவிடும்.

 இந்த  சராசரிமதிப்பு கோடுகளை (Mean value lines)   வரைபடத்திலிருந்து நீக்கம் செய்திடுவதற்காக தேவையான வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின்  பொத்தானை சொடுக்குதல் செய்து வரைபடத்தினை பதிப்பித்தல் நிலைக்கு கொண்டுவருக.உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும் பின்னர் நீக்கம் செய்திடவிரும்பும்  சராசரிமதிப்பு கோடுகளை (Mean value lines)  இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு விசைப்பலகையிலுள்ள Deleteஎனும் விசையை அழுத்துக அல்லது  சராசரிமதிப்பு கோடுகளை (Mean value lines)  இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Delete Mean Value Lineஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  சராசரிமதிப்பு கோடுகளை (Mean value lines)  வரைபடத்திலிருந்து நீக்கபட்டுவிடும் .அதன்பின்னர் வரைபடத்தினை விட்டு வெளியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து வரைபடத்தின் பதிப்பித்தல் நிலைக்கு பதிலாக வழக்கமான நிலைக்கு மாறிவிடுக.

X அல்லது Y பிழைபட்டிகள்

இவைஇருபரிமான வரபடங்களில் மட்டும் அவைகளிலுள்ள பிழைகளை  பிதிரையில் ரதிபலிக்க செய்ய பயன்படுத்தபடுகின்றன குறிப்பிட்ட தரவுதொடருக்குமட்டும் X அல்லது Y பிழை பட்டி உள்ளிணைக்கபடும்  தெரிவுசெய்தால் அந்த தொடரில்   மட்டும் அல்லது  அனைத்து தரவு தொடர்களுக்கும் X அல்லது Y பிழைபட்டிஉள்ளிணைக்கபடும் சமூக ஆய்விற்கான குறிப்பிட்ட மாதிரி வழிமுறை அல்லது நம்முடைய ஆய்விற்கான தரவுகள் மிகத்துல்லியமாக உள்ளன என நிரூபிப்பதற்காகவும் இந்த X அல்லது Y பிழைபட்டிகள் வரைபடத்தில் பெரிதும்  பயனுள்ளதாக உள்ளன

 இதனை நம்முடைய வரைபடத்தில்  உள்ளிணைத்திடுவதற்காக முதலில் அவ்வாறு விரும்பும் வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்து பதிப்பித்தல் நிலைக்கு வரைபடத்தை கொண்டுவருக  உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும் .பின்னர் சராசரிமதிப்புகோடாக தரவிரும்பும் தரவுகளில் தேவையானவைகளை மட்டும் தெரிவுசெய்துகொள்க  இல்லையெனில் அனைத்து தரவுகளும் இந்த சராசரிமதிப்பு கோடுகளுக்காக எடுத்துகொள்ளும்  அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert => X Error Bars=> அல்லது Insert => Y Error Bars=>என்றுவாற கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக   அல்லது  இதற்கு பதிலாக  தேவையான தரவுகளில் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  Insert  X Error Bars அல்லது Insert  Y Error Barsஎன்ற கட்டளையை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக  உடன்Error Bars  எனும் உரையாடல் பெட்டித்திரையில் தோன்றிடும் இதில் Error Category என்பதன்கீழுள்ள Consent value,Percentage,Standard deviation, cell Range என்பவைகளில் எந்தவகையென்றும் Parametersஎன்பதன்கீழ் Positive(+) அல்லத Negative(-) ஆகியஇரண்டில் எந்த அளவுஎன்றும் Error indicator என்பதன்கீழ் Positive and Negative, Positive, Negative ஆகியவற்றில் எந்தவாய்ப்பு என்றும்  தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு oKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் வரைபடத்தினை விட்டு வெளியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து வரைபடத்தின் பதிப்பித்தல் நிலைக்கு பதிலாக வழக்கமான நிலைக்கு மாறிவிடுக.

3.

3

   இந்த பிழைபட்டிகோடுகளை நீக்கம் செய்வதற்காக தேவையான வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின்  பொத்தானை சொடுக்குதல் செய்து வரைபடத்தினை பதிப்பித்தல் நிலைக்கு கொண்டுவருக.உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும் பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert => X Error Bars =>அல்லது Insert => Y Error Bars=>என்றுவாற கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Error Bars என்ற உரையாடல் பெட்டிய திரையில் தோன்றிடும் அதில் Noneஎனும் வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்துகொண்டு  OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  அல்லது இதற்கு பதிலாக  தேவையான வரபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  Delete X Error Bars அல்லது Delete Y Error Barsஎன்ற கட்டளையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக  உடன் நாம் நீக்கம் செய்திடவிரும்பும் பிழைபட்டிகள் வரைபடத்திலிருந்து நீக்கபட்டுவிடும்.அதன்பின்னர் வரைபடத்தினை விட்டு வெளியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து வரைபடத்தின் பதிப்பித்தல் நிலைக்கு பதிலாக வழக்கமான நிலைக்கு மாறிவிடுக.

வரைபடங்களையும் வரைகலையையும் வடிவமைத்தல்

நம்முடைய வரைபடம் நல்ல தொரு திரைகாட்சியாக அமைவதற்கென வடிவமைப்பு செய்வதற்காக லிபர் ஆஃபிஸ் கால்க்கானது ஏராளமான வாய்ப்புகளை நமக்கு வழங்குகின்றது  இவ்வாறு வரைபடத்தினை வடிவமைப்பு செய்திடுவதற்காக  முதலில் அவ்வாறு விரும்பும் வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்து பதிப்பித்தல் நிலைக்கு வரைபடத்தை கொண்டுவருக  உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும் .பின்னர் வரைபடத்தின் உள்ளுறுப்புகளை தெரிவுசெய்துசொடுக்குக உடன் அவைகளை மேம்படுத்தி காண்பிக்கும்  அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Formatஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  Formatஎனும் கட்டளைபட்டியில்உள்ள  Format Selection,Position and Size, Arrangement, Title, Legend, Axis,Grid,Chart Wall, Chart Floor, or Chart Area,Chart Type,Data Ranges,3D Viewஆகியவற்றில் தேவையான வாய்ப்பு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது வரைபடத்தின் உள்ளுறுப்புகள்மீது சுட்டியை வைத்திட்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்   உள்ள  Format Selection,Position and Size,Arrangement,Title,Legend,Axis,Grid,Chart Wall, Chart Floor, or Chart Area,Chart Type,Data Ranges,3D Viewஆகியவற்றில் தேவையான வாய்ப்பு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

 குறிப்பு இங்கு வரைபடத்தின் உள்ளுறுப்புகள் தெளிவாக நாம் அறிந்துகொள்ளவேண்டுமெனில் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools =>Options =>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் Options எனும் உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் LibreOffice => General=>என்றவாறு வாய்ப்பினை  தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வரைபடத்தின்மீது இடம்டசுட்டியை மேலூர்தல் செய்தால் தொடர்புடைய உறுப்புகளை பற்றிய விவரம் திரையின் கீழுள்ள நிலைபட்டியில் தோன்றிடும்

 வரைபடங்களிலுள்ள உறுப்புகளை நகர்த்துதல்  வரைபடத்திலுள்ள  தனித்தனிஉள்ளுறுப்புகளை நகர்த்திடவும் அவைகளுடைய அளவை மாற்றியமைத்திடவும் விரும்புவோம்  ஆயினும் தனிப்பட்ட புள்ளிகளைஅல்லது தரவுத்தொடரை நகர்த்திடமுடியாது. முதலில் அவ்வாறு விரும்பும் வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்து பதிப்பித்தல் நிலைக்கு வரைபடத்தை கொண்டுவருக  உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும் .பின்னர் நகர்த்த விரும்பும் உள்ளுறுப்புகள் இருக்கும் இடத்திற்கு இடம்சுட்டியை நகர்த்திசென்று அதனை தெரிவுசெய்து பிடித்து இழுத்து சென்று தேவையானஇடத்தில்விட்டிடு.

 வரைபடத்தின் பகுதியின் பின்புலத்தினை மாற்றுதல்  இதற்காகமுதலில் அவ்வாறு விரும்பும் வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்து பதிப்பித்தல் நிலைக்கு வரைபடத்தை கொண்டுவருக  உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும் .பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Chart Area=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது வரைபடத்தின் மீது சுட்டியை வைத்திட்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்   உள்ள  Format Chart Areaஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்Chart Area எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதிலுள்ள Borders, Area , Transparencyஎன்பவைகளுள்  தேவையான தாவியின் பக்கத்திற்கு சென்று சரிசெய்து அமைத்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

4

4

 வரைபடங்களிலுள்ள வண்ணத்தை மாற்றியமைத்தல் வரைபடத்தில் இயல்புநிலையிலுள்ள வண்ணத்திற்கு பதிலாக நாம் விரும்பும் வண்ணத்தை  கொண்டுவரலாம் இதற்காக   திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Options => Charts => Default Colors=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து வரைபடத்தில் மாற்றியமைத்துகொண்டுOK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

முப்பரிமான வரைபடங்கள் இந்த வரைபடத்தின் முப்பரிமான காட்சியில் Perspective, Appearance,Illuminationஆகிய மூன்று தாவிப்பக்கங்கள் உள்ளன

   வரைபடத்தை சுழற்றியமைத்தலும் அதன் தோற்றமும்   இதற்காகமுதலில் அவ்வாறு விரும்பும் வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்து பதிப்பித்தல் நிலைக்கு வரைபடத்தை கொண்டுவருக  உடன் வரைபடத்தினை சுற்றி சாம்பல் வண்ண எல்லைக்கோடு பிரதிபலிக்கும் .பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Format > 3D View=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது வரைபடத்தின் மீது சுட்டியை வைத்திட்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்   உள்ள  3D Viewஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் 3D Viewஎனும் உரையாடல் பெட்டியில் Perspectiveஎனும் தாவிப்பக்கத்திற்கு செல்க  அதில் Right angled axesஎன்பதன் கீழ்உள்ள X rotation,Y rotation,Z rotation, Perspective ஆகியவற்றில் தேவையானவாறு மாற்றியமைத்துகொண்டுOK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதுமட்டுமல்லாது இதே வரைபடத்தினை நேரடியாக கூட சுழற்றி யமைத்திடமுடியும் அதற்காக  வரைபடத்தினை பதிப்பித்தல் நிலைக்கு கொண்டுசென்றபின்னர வரைபடத்தினை சுற்றி் கைப்பிடியுடன் தோன்றிடும் வரைபடசுவற்றினை தெரிவுசெய்துகொண்டு  கைப்பிடி ஓரம் இடம்சுட்டியை மேலூர்தல் செய்தவுடன் சுட்டியானது சுழலும் உருவமாக மாறிவிடும் அப்படியை பிடித்து இழுத்தசென்று தேவையான திசையில் அமையுமாறு வைத்து விட்டிடுக.

5

5

 தோற்றத்தை மாற்றியமைத்தல் இதற்காக வரைபடத்தினை பதிப்பித்தல் நிலைக்கு கொண்டுசென்றபின்னர்  திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => 3D View=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது வரைபடத்தின் மீது சுட்டியை வைத்திட்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்   உள்ள  3D Viewஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் 3D Viewஎனும் உரையாடல் பெட்டியில் Appearanceஎனும் தாவிப்பக்கத்திற்கு செல்க  அதில் Schemeஎன்பதிலுள்ள கீழிறங்கு பட்டியின் வாய்ப்பில் தேவையானதையும்  Shading, Object borders,  Rounded edges ஆகிய வாயப்புகளில்  தேவையானவாறு மாற்றியமைத்துகொண்டுOK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

6

6

ஒளிரும் தன்மையை மாற்றியமைத்தல் இதற்காக வரைபடத்தினை பதிப்பித்தல் நிலைக்கு கொண்டுசென்றபின்னர்  திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => 3D View=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது வரைபடத்தின் மீது சுட்டியை வைத்திட்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்   உள்ள  3D Viewஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் 3D Viewஎனும் உரையாடல் பெட்டியில் Illuminationஎனும் தாவிப்பக்கத்திற்கு செல்க  அதில் Light sourceஎன்பதன் கீழுள்ள  எட்டு பொத்தான்களில் தேவையானதையும் Ambient lightஎன்பதன் கீழிறங்கு பட்டியின் வாய்ப்பில் தேவையானதையும்    தேவையானவாறு மாற்றியமைத்துகொண்டுOK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7

7

கட்டங்கள்(Grids) Xஅச்சினையும் Y அச்சினையும் கட்டகோடுகளுடன் பிரித்திடும்போது வரைபட தோற்றமானது மேலும் துல்லியமாக தோன்றிடும் இயல்புநிலையும் Y அச்சுமட்டும் கட்டக் கோடுகளால் பிரிக்கபட்டிருக்கும்   Xஅச்சிலும் இவ்வாறு கட்டக்கோடுகளால் பிரிப்பதற்காக Grids எனும் உரையாடல் பெட்டியை பயன்படுத்தி line style, color, width and transparencyஆகியவற்றை தேவையானவாறு மாற்றியமைத்து கொள்க

X Y அச்சுகள் இந்த இருஅச்சுகளையும் சிறப்பு அளவீடுகளால் மாற்றியமைத்திடவிரும்புவோம் அதற்காகஇதற்காக வரைபடத்தினை பதிப்பித்தல் நிலைக்கு கொண்டுசென்றபின்னர்  திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Y Axis => or X Axis=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது வரைபடத்தின் மீது சுட்டியை வைத்திட்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்   உள்ள  Format  Axis எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த அச்சுக்கு ஏற்ப விரியும் Y Axis or X Axisஎனும் உரையாடல் பெட்டியில் Scale,  Positioning,Line,Label, Numbers, Font and Font Effects, Asian Typographyஆகியவற்றுள் தேவையான தாவிப்பக்கத்திற்கு செல்க   அவைகளில் தேவையானவாறு மாற்றியமைத்து கொண்டுOK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

8

8

  மிகமுக்கியமாக Asian Typographyஎனும் தாவிப்பக்கத்தில் திருத்தம் செய்திடுமுன் திரையின்மேலை கட்டளைபட்டையில் Tools => Options => Language Settings => Asian Layout.=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்தசொடுக்குதல் செய்தபின்விரியும் உரையாடல் பெட்டியில்Allow hanging punctuation,  Apply spacing between Asian, Latin and Complex textஆகிய வாய்ப்புகளில் தேவையானவாறு அமைத்துகொள்க

 படிநிலை அச்சுகளின் பட்டிகள் நம்முடைய வரைபடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நெடுவரிசைஇருந்தால் அவைகள் படிநிலையில் வரிசையாக தோன்றிடவேண்டும் உதாரணமாக ஒரு ஆண்டில் மாதவாரியாக  அல்லது காலாண்டு வாரியாக ஒவ்வொரு பொருளின் விற்பனை வருமானம்  கணக்கிடுவதற்கு அந்தந்த மாதத்தினையும் காலாண்டினையும் வரைபடத்தில் படிநிலையில் குறிப்பிடுவது.

9

 9

வரைபடத்தின் குறியீடுகளை வடிவமைத்தல் வரியும் புள்ளிகளுமான வரைபடங்களில் குறியீடுகள் மிக அதிகமுக்கியத்துவம் பெறுகின்றனஇதனை திருத்தியமைத்திடமுதலில் வரைபடத்தினை பதிப்பித்தல் நிலைக்கு கொண்டுசென்றபின்னர்  திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Format Selection=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது வரைபடத்தின் மீது சுட்டியை வைத்திட்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்   உள்ள   Format Selection எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்  விரியும் Data Seriesஎனும் உரையாடல் பெட்டியில்Line எனும் தாவியின் திரையில் உள்ள Iconஎனும் பகுதியில் Selectஎனும் கீழிறங்கு பட்டியில் உள்ளNosymbol, Automatic, From file, Gallery or Symbols ஆகியவாய்ப்புகளில் தேவையானதை தெரிவுசெய்துகொள்க மேலும் Width, Height ஆகியவற்றில் தேவையானவாறும் LineProperties எனும் பகுதியில் உள்ள Style, Color, Width Transparancy ஆகிய வாய்ப்புகளில் தேவையானவாறும் தெரிவுசெய்துகொண்டு  OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

10

10

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: