F-Droid ஒரு அறிமுகம்

தற்போது ஸ்மார்ட்ஃபோன்கள் நம்முடைய நெருங்கிய நண்பனாக ஆகிவிட்டதால் அதனுடைய  அனைத்து செயல்களுக்குமான பயன்பாடுகளும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது அதுமட்டுமின்றி நம்முடைய அன்றாட பணிகளுக்காக ஏராளமான வகையில் ஆண்ட்ராய்டு சாதனத்தின் பயன்பாடுகளும் தயாராக உள்ளன  அதிலும் கூகுளின் ப்ளேஸ்டோரானது மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது  ஆனால் அவைகளுள் கட்டணத்துடன் அல்லது கட்டணமில்லாத என இருவாய்ப்புகள் நம்முன் கடைவிரிக்கின்றன. இந்நிலையில் கட்டணமற்ற கட்டற்ற ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான பயன்பாடுகளை தன்னகத்தேகொண்ட    F-Droid என்பது பேருதவியாய் அமைகின்றது. இந்த F-Droid ஐ கூகுளின் ப்ளேஸ்டோரின் பயன்பாடுகளுடன் ஒப்பிடும்போது பின்வரும் நன்மைகள் கூடுதலாக இதில் உள்ளன.

1  F-Droid பயன்பாடுகளானது தனித்தனியாக  வழக்கமான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை போன்று கிடைப்பதால் இவைகளை எப்போது வேண்டுமானாலும் நமக்குத்தேவையில்லை என எண்ணிடும்போது நீக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நமக்கு தேவைப்படும்போது இதனுடைய இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனங்களில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

2. இதனுடைய தளத்திற்கு எப்போது சென்றாலும் திரையில் நம்முன் கட்டணத்துடன்கூடியது கட்டணமில்லாதது என இரண்டுவாய்ப்புகளை கடைவிரிப்பது இல்லை ஒரே வாய்ப்பாக கட்டற்ற கட்டணமில்லாத பயன்பாடுகளை மட்டுமே திரையில் அவைகளை தொகுப்பாக  காண்பிக்கும் அவைகளுள் நம்முடைய செயல்பாட்டிற்கு தேவையானவற்றை மட்டும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம்

3இதிலுள்ள பயன்பாடுகளில் பல்வேறு பதிப்புகள் நாம் பதிவிறக்கம் செய்யதயாராக இருக்கின்றன அவைகளுள் நமக்குதேவையான பதிப்புகளை மட்டும்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

4 இந்த  F-Droid இன் முகப்பு பக்கத்திலேயே அனைத்து பயன்பாடுகளுக்குமான அனுமதி தயாராக உள்ளன அவைகளை எப்போதும் பெற்றுகொள்ளமுடியும்

5 ஒவ்வொரு பயன்பாட்டிற்குமான மூலக்குறிமுறைவரிகளின் இணைப்பு அதனுடைய இணையதளமுகவரி அந்தந்த பயன்பாடுகள் தொடர்புடைய இரதரவிவரங்கள் நாம் அறிந்து பயன்படுத்தி கொள்வதற்கேதுவாக தயாராக உள்ளன.

6 இதனுடைய எந்தவொரு பயன்பாட்டினையும் நமக்கு தேவையில்லை என எண்ணிடும்போது நேரடியாக அந்தந்த பயன்பாட்டின்முகப்பு திரைக்கு சென்று trashஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நீக்கம்செய்துகொள்ளலாம்

7 பயன்பாட்டாளர்கள் ஏதேனும் முக்கியமான பணியை இந்த பயன்பாடுகளை கொண்டு ஆழ்ந்து செயற்படுத்திகொண்டிருக்கும் நிலையில்   கட்டணத்துடன்கூடிய பயன்பாடுகள் ஏதேனும் இதனை இடைமுகப்பு  செய்தால்  அதனைபற்றிய எச்சரிக்கை செய்தியை பயனாளர்களுக்கு உடனுக்குடன் வழங்குகின்றது

8 இதனுடைய சமீபத்திய Swap Appsஎனும்வாய்ப்பின் வாயிலாக  நம்முடைய நண்பர்களுடன் நம்முடைய பயன்பாடுகளை சேர்ந்து பயன்படுத்திகொள்ள முடியும்.

 9 இதில் உள்ள SicMu playerஆனது இசைப்பிரியர்களுக்கு பெரிதும் பயன்படுகின்றது Pedometer எனும் பயன்பாடானது நம்முடைய உடல்நிலையை அறிந்தகொள்ள பயன்படுகின்றது Wallabag எனும் பயன்பாடானதுஇணைய பக்கங்களை இணையஇணைப்பு இல்லாத போதும் படித்தறிந்துகொள்ள உதவுகின்றது .Telegram எனும் பயன்பாடானது பாதுகாப்புடன் செய்தியை அனுப்பவும் குழுவிவாதம் செய்திடவும் நண்பர்களுடன் விவாதம் செய்திடவும் உதவுகின்றது, SMSsecurஎனும் பயன்பாடானது பாதுகாப்பாக குறுஞ்செய்திகளை அனுப்பிட பயன்படுகின்றது FBReaderஎனும் பயன்பாடானது ஆண்ட்ராய்டு சாதனங்களில் மின்புத்தகங்களை படித்திட பயன்படுகின்றது  K-9Mail எனும் பயன்பாடானது ஆண்ட்ராய்டு சாதனங்களில் பாதுகாப்பான மின்னஞ்சல் சேவையாளராக பயன்படுகின்றது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: