எளிதாக பயன்படுத்திகொள்ள உதவிடும் கட்டற்ற இசை இயக்கிகளின் பயன்பாடுகள்

கணினியை பற்றிய அடிப்படையான தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள்கூட கட்டற்ற பயன்பாடுகளை பற்றி விவாதிக்கும் இன்றைய காலகட்டத்தில்  பொதுவாக இவ்வாறனவர்கள் இந்த  கட்டற்ற பயன்பாடுகளை பயன்படுத்திகொள்வது மிக கடினமான பணியாக இருக்கும் என தவறாக முடிவுசெய்து கொள்கின்றனர். உண்மையில் அவைகளை பற்றி அறியாமலேயே தற்போது நாமனைவரும் பயன்படுத்தி வருகின்றோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும் அதாவது ஆங்கிலமொழிபற்றி் அறியாதவர்கள்கூட தங்களுடைய வழக்கமான உரையாடல்களில் ஆங்கில சொற்களை பயன்படுத்தி கொள்வதை போன்றே இந்த கட்டற்ற பயன்பாடுகளையும் நாமெல்லோரும் பயன்படுத்தி வருகின்றோம். அவ்வாறே  நம்முடைய கணினியிலும் செல்லிடத்து பேசிகளிலும் VLC, MPV, MPPlayer, SMP, Tomahawk போன்ற கட்டற்ற பயன்பாடுகளை அவைகளை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளாமலேயே பயன்படுத்திவருகின்றோம். பொதுவாக அனைத்து கட்டற்ற பயன்பாடுகளும் சி, சி++, ஆப்ஜெக்ட்டிவ்சி ஆகிய கணினிமொழிகளில்  எழுதப்பட்ட பெரும்பாலான அனைத்து ஒலி , ஒளிஒலிப்பட கோப்புகளின் வடிவமைப்புகளை  ஆதரிக்ககூடியதாக பயன்படுபத்துவதற்கு எளிதான கண்ணைகவரும் இடைமுகப்புடன் விளங்குகின்றன. இவ்வாறான  கட்டற்ற இசைஇயக்கிகளின் பயன்பாடுகளை சிலவற்றைபற்றி இப்போது காண்போம் .

1.VLC இசை இயக்கிகள் என்றவுடன் நம்முடைய அனைவரின் நினைவிலும் வரும் முதல் கட்டற்ற பயன்பாடு எதுவென்றால்  VLC மட்டுமே அந்தஅளவிற்கு நம்முடைய அன்றாட பயன்பாடுகளில் இந்த  VLC எனும் கட்டற்ற பயன்பாடானது இரண்டற கலந்துவிட்டது  இது மிகச்சாதாரண MP3 video வடிவமைப்பில் இருந்தாலும் அனைத்துவகையான   ஆடியோ விடியோ டிவிடி களையும் இயக்கும் திறன்மிக்கது அதனோடு அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது

2.  அடுத்ததாக இந்த  Tomahawk எனும்  சமூக இசை இயக்கியாகும் இது  உள்ளூர் நூலகம் முதல் இணையத்தின் Sound Cloud, Spotify, Groove shark ஆகியவை வரை செயல்படுத்திடும் வல்லமைகொண்டது அதிலும் இந்த பயன்பாடானது சமீபத்திய கூகுள்ப்ளே மியூசிக் என்பதைகூட கையாளும் திறன்கொண்டதாக உள்ளது

3. மூன்றாதாக Music Beeஎன்பது இசையில் எதையும் செயல்படுத்திடும் வல்லமை கொண்டதாக உள்ளது.  இதுஒரு சிறந்த இசைமேலாளர் எனும் வசதியை கொண்டு எந்தவொரு வகையான இசையையும் செயல்படுத்திடும் திறன் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது லிரிக்ஸின் பாதைக்காக ஒருபலகம்என்றும் , இணையத்தை தொடர்புகொண்டு தேவையான இசைகளை தேடிப்பிடத்திட மற்றொருபலகம் என்றும் , இணையத்தின் வானொலி போட்காஸ்ட் போன்றவைகளை செயல்படுத்திட மற்றொரு பலகம் என்றும் இது பல்வேறு பலகங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது.

4.MediaMonkey இதுவும் MusicBee போன்ற அனைத்து வசதிகளைகொண்டது மேலும் இது ஐட்யூன்ஸ் போன்ற அனைத்து வகையான வடிவமைப்புகளையும் ஆதரிக்கின்றது

5.FooBar2000எனும் கட்டற்ற இசைய இயக்கியானது எப்போதாவது இசையை பயன்படுத்திடு-வோர்களுக்கு  இதனை பற்றி ஒன்றும் தெரியாமலேயே உபயோகபடுத்திகொள்வதற்கு இது பெரிதும் பயன்படுகின்றது. இது மிககுறைந்த அளவே நினைவகத்தை பயன்படுத்தி கொள்கின்றது. கணினியின் வல்லுநர்கள்  தாம் விரும்பும்  வகையில் மாற்றியமைத்துகொள்ள இது அனுமதிக்கின்றது..

 வாருங்கள் இவ்வாறான கட்டற்ற இசை இயக்கி பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ளுங்கள் அதனோடு நீங்களும் இதில் பங்கெடுத்துகொண்டு இவைகளின் வசதிகளை  மேம்படுத்திட உதவிடுங்கள் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: