ஜிம்ப் எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி எந்தவொரு நிகழ்விற்கான சான்றிதழ்களையும் தானியங்கியாக உருவாக்கலாம்

நம்முடைய நிறுவனத்தில் நடைபெற்றமிகமுக்கியமான நிகழ்வில் ஏராளமான நபர்கள் பங்கு கொண்டனர்.அதில்  பங்கு கொண்ட அனைவரும் வெறும் கையுடன் சென்றிடாமல் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிட நம்முடைய நிறுவனம் விரும்புகின்றது எனும் நிலையில் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவருக்கும்  எவ்வாறு தானியங்கியாக சான்றிதழ்களை உருவாக்குவது என்பதே நம்முன் உள்ள மிகமுக்கிய பிரச்சினையாகும்.  தற்போது விண்டோ இயக்கமுறைமையிலும் இணையத்திலும் இதற்காகவென ஏராளமான மென்பொருள் கருவிகள் கட்டணத்துடன் கிடைக்கின்றன ஆயினும் கட்டணமில்லாத கட்டற்ற மென்பொருட்கள ஏதேனும் உள்ளதா வென தேடுபவர்கள் முதலில் நம்பகமான Latex எனும் கட்டற்ற மென்பொருள் இருக்கின்றதே என கூறிடுவர் ஆனால்  அது தட்டச்சு செய்து இயக்குவதற்கானதாகும் நாம் தேடுவதை போன்ற தானியங்கியாக இதுசெயல்படாது அதனால் அதற்காக ஜிம்ப் என்பது பொருத்தமாக இருக்கும் எனஒருசிலர் கூறுகின்றனர் சரிதான் இப்போது அதனையும்தான் சரிபார்த்திடுவோமே  இவ்வாறான தானியங்கியாக சான்றிதழ்களை உருவாகுவதற்காக  ஜிம்ப் எனும்  கட்டற்ற வரைகலை மென்பொருளும் அதனுடன் பைத்தான்2.7 எனும் கணினிமொழியும் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்ய பட்டிருக்க வேண்டும்.  அடுத்ததாக சான்றிதழின் பின்புல உருவப் படத்திற்கான மாதிரி படிமத்தை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க அல்லது  நாம் விரும்பியவாறு முயன்றுஉருவாக்கி கொள்க. பின்னர் இதனை இடம்சுட்டியால் தெரிவு செய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில GNU image manipulation என்ற வாய்ப்பினை தெரிவு செய்து சொடுக்குக அல்லது ஜிம்ப் எனும் பயன்பாட்டினை திரையில் தோன்றசெய்து அதன் திரையின் மேல்குதியில் உள்ள கட்டளை பட்டையில File=Open==> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த பின்புல உருவபடத்திற்கான மாதிரிபடிமத்தை  திரையில் தோன்ற செய்திடுக. அதில் நம்முடைய நிறுவனத்தில் நடைபெறும் நிழ்வின்பெயர், அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர் போன்ற விவரங்களை <name> என்பதில் போலியாக தட்டச்சு செய்துகொள்க பின்னர் GIMP திரையின் இடது புறமுள்ள கருவிபெட்டியில் Aஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பிடித்து  நம்முடைய உருவப்படத்தின் மீது இழுத்து ஒரு  செவ்வக உரைபெட்டியை உருவாக்கி கொள்க  . அதன் பின்னர் வலதுபுறம் layerஎனும்  கருவிபெட்டி உள்ளதா வென சரிபார்த்திடுக இல்லையெனில்  திரையின் மேல்குதியில் உ்ள்ள கட்டளைபட்டையில Window=>dockable Dialog=>Layers=> என்றவாறு கட்டளைகள தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து திரையில்  வலதுபுறம் தோன்ற செய்திடுக  அதில் <Background> என்றும் <name> என்றும் இரண்டடுக்கு உள்ளதாவென சரிபார்த்திடுக பின்னர் விசைப்பலகையில் Ctrl+S  ஆகிய விசைகளை அழுத்தி இதனை சேமித்துகொண்டு ஜிம்ப் திரையிலிருந்து  வெளியேறிடுக. அதன் பின்னர் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்களின் பட்டியலை இதில் ஒவ்வொன்றாக உட்செலுத்தி அச்சிடவேண்டும் இதற்காக  பைத்தான் 2.7 கணினி நிரல் தொடர்மொழியில் பின்வரும் குறிமுறைவரிகளை தவறில்லாமல் தட்டச்சு செய்திடுக

from gimpfu import*

Import os

def run(*args):

   Templae_file, list_file, output_folder =args

 output_folder = os.path.expanduser(‘~/’ + output_folder)

If not os.path.exists(output_folder):

os.makedirs(output_folder)

     i=0

with open(list_file, ‘r’) as list:

    i+=1

bg_image = pdb.gimp_file_load(template_file,template_file)

name_layer = filter(lambda x: x.name = = ‘<name=>’, bg_image.layers)[0]

pdb.gimp_text_layer_set_font(name_layer, ‘comic Sans Ms’)

pdb.gimp_text_layer_set_font_size(name_layer,20.0)

mereged = pdb.gimp_image_merge_visible_layers(bg_image,0)

output_filename = name + str(i) + “.png”

output_filemname=os.path.join(output_folder, output_filename)

pdb.file_png_save_defaults(bg_image,merged,output_filename,output_filename)

print “Finished”

 register(

    “certificate_generator” , “ “ , “ “ , “ “  ,” “ , “ “,

“Toolbox=>xtns/Languages/Python-Fu/Cerficate-Generator”,  “ “ ,

  [

  ( PF_FILE, “arg0”, “Certificate Template file”, “ “),

  (PF_FILE, “arg1” , Data File”, “ “),

  (PF_STRING, “arg2”, “output directory (created relative to user home)” , “ “),

],

[ ],

Run

)

main()

 இந்த குறிமுறைவரிகளை < your scriptname>.pyஎன்ற பெயரில் /usr/lib/gimp2.X/plug-ins/ என்ற கோப்பகத்தில் சேமித்திடுக. பின்னர்  பின்வரும் கட்டளைவரிகளை தட்டச்சு செய்து செயற்படுத்தி மேலே தட்டச்சு செய்த குறிமுறைவரிகளை செயற்படுத்திடுவதற்கான அனுமதியை பெற்றிடுக

//வேறு கோப்பகத்திற்கு மாறிசெல்வதற்காக(switch to the directory)

cd/usr/lib/gimp/2.x/plug-ins

//அனுமதி பெறுவதற்காக (givepermissions)

 sudo chmod +x < your scriptname=>.py

 அதன்பின்னர் ஜிம்ப் பயன்பாட்டினை திரையில் தோன்றச்செய்து அதன்திரையின் மேல்குதியில் உள்ள கட்டளைபட்டையில Filter=>Python-fu=>Certificate Generator=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் சாளரம் ஒன்று திரையில தோன்றி நம்முடைய சான்றிதழின் மாதிரி படிமம் இருக்கும் இடத்தினையும் அச்சிடவேண்டிய பெயர்பட்டியல்  கோப்பினையும் கோரும் அவ்விரண்டையும் அளித்து run எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் குறிப்பிட்ட கோப்பகத்தில்  அனைத்துசான்றிதழ்களும் உருவாகி சேமிக்கபட்டுவிடும். மேலும் விவரங்களுக்கு http://cpderazzi.net/python/gimp/pythonfu.html/   எனும் இணைய பக்கத்திற்கு செல்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: