உள்நுழைவு செய்வதற்காக பாதுகாப்பானவலுவான கடவுச்சொற்களை எவ்வாறு உருவாக்குவது?

 நம்மில் பெரும்பாலானோர் கடவுச்சொற்களை உருவாக்குதல் என்றவுடன் சோம்பேறிதனமாக யாரும் எளிதில் யூகிக்கும்படியான  எண்களால் 12345என்றும்,  எழுத்துகளால் abcd,password, welcome, qwertyuiop, asdfghjkl, zxcvbnm, என்றவாறும் உருவாக்கிகொள்வார்கள் 2015 ஆம் ஆண்டில் அமைக்கபட்டிருந்த கடவுச்சொற்களை ஆய்வு செய்ததில்  பெரும்பாலானவர்கள் கடவுச்சொற்களை இவ்வாறாகவே அபத்தமாக அமைத்திருப்பதுதெரியவந்துள்ளது  இவ்வாறான கடவுச்சொற்கள் பாதுகாப்பானவை அல்ல   பொதுவாக கடவுச்சொற்களானது குறைந்த பட்சம் பன்னிரண்டு எழுத்துகளால் கட்டமைக்கபட்டிருக்கவேண்டும் அவைகள்பெரிய எழுத்துகளும் சிறிய எழுத்துகளும் கலந்து உருவாக்கபட்டிருக்கவேண்டும் மேலும் குறைந்தது ஒரு சிறப்புக்குறியீடும், ஒரு எண்ணும் இதில் கலந்துஇருக்கவேண்டும்  எழுத்துகள் எனில்   நம்முடைய நினைவில் வைத்துகொள்வதற்கு எளிதான நமக்கு பிடித்தமான கவிதைகளில் உள்ள சொற்களின் முதலெழுத்தாகவும்  உதாரணமாக Rain rain go away come again another day என்ற கவிதைகளின் வரிகளிலுள்ள சொற்களின் முதலெழுத்துகளால் Rrgacaad என்றவாறும் , சிறப்புக்குறியீடுகளுக்கு புன்னகை , வருத்தம் போன்ற உணர்வுகளை குறிக்கும் என்பன :- ( போன்ற குறியீடுகளையும் ,எண்களுக்காக நம்முடைய பிறந்த ஆண்டு அல்லது நாம் முதன்முதல் பள்ளியில் சேர்ந்த ஆண்டு அல்லது கல்லூரியில் சேர்ந்த ஆண்டு 1978என்றவாறும் சேர்த்து அமைத்துகொண்டால்  நாம் உருவாக்கிய நம்முடைய கடவுச்சொற்களானது  Rrgacaad😦1978 என்றவாறு நாம் எளிதில் நினைவில் கொள்வதாகவும்  வலுவானதாக அமைந்திருக்கும் மேலும் http://blog.kaspersky.com/password-check/ , https://haveibeenpwned.com/  ஆகிய தளங்களுக்கு சென்று   நாம் உருவாக்கிய நம்முடைய கடவுச்சொற்களைின்  வலுத்தன்மையை சரிபார்த்து கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: