நாம் பயன்படுத்தும் கணினியில் எந்த இயக்கமுறைமை செயல்படுகின்றது என எவ்வாறு அறிந்துகொள்வது?

 பொதுவாக கணினியை பயன்படுத்தும் நாமெல்லோரும் கணினி வல்லுநர் அன்று இருந்தாலும் கணினியை பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வது சிறுசிறு பிரச்சினைகளை சரிசெய்வதற்கு நமக்கு உதவுமல்லவா அவ்வாறான அடிப்படை தகவலாக  அனைவரையும் எந்த வகையான இயக்கமுறைமையை  நம்முடைய கணினியில் பயன்படுத்துகின்றோம் அதன்பதிப்புஎண் என்ன ஆகிய கேள்விகளுக்கான பதில் தெரிந்துகொள்வது நல்லது

 விண்டோ7 இயக்கமுறைமையெனில் Computer என்பதை இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Properties என்ற கட்டளையைதெரிவுசெய்து சொடுக்குக உடன் Properties எனும் உரையாடல் பெட்டி கணினியில் பயன்படுத்தபடும் இயக்கமுறைமையின் பெயர் அதன் பதிப்பு எண் இதில்பயன்படும் செயலி, ரேமின் நினைவகம் ஆகியவிவரங்களுடன் திரையில் பிரதிபலிக்கும்

   நாம் பயன்படுத்துவது  விண்டோ8.1 எனில்  தேடிடும் பெட்டியில் அல்லது துவக்கதிரையில் PC Settings என தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்திய பின்னர் விரியும் திரையில்  PC Info எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடு்க்குக உடன் திரையில் விரியும் சிறு பட்டியில் கணினியில் பயன்படுத்தபடும் இயக்கமுறைமையின் பெயர் அதன் பதிப்பு எண் இதில்பயன்படும் செயலி, ரேமின் நினைவகம் ஆகியவிவரங்களுடன் திரையில் பிரதிபலிக்கும்

   நாம் பயன்படுத்துவது  விண்டோ10 எனில் துவக்கத்திரையில்  About PC என தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்திய பின்னர்  திரையில்விரியும் சிறு பட்டியில் கணினியில் பயன்படுத்தபடும் இயக்கமுறைமையின் பெயர் அதன் பதிப்பு எண் இதில்பயன்படும் செயலி, ரேமின் நினைவகம் ஆகியவிவரங்களுடன் திரையில் பிரதிபலிக்கும் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: