கல்வி நிறுவனங்கள்  தாம் நடத்தும் தேர்வுகளுக்காக open judge எனும் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி கொள்க

தற்போது பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் கணினி அறிவியலை அல்லது தகவல் தொழில்நுட்பத்தை ஒருபாடமாக வைத்துள்ளன   இந்தக்கல்வி நிறுவனங்களின் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்ப  துறையானது வினாடி வினா ,  கொள்குறிவினா விடை ஆகிய தேர்வுகளைளை நடத்துகின்றன.

இந்ததேர்வுகளில் 80 சதவிதம் கைகளாலேயே திருத்தி மதிப்பெண் வழங்கப்படுகின்றன  அதனால் அதிகஅளவிற்கு  மக்களை இந்த தேர்வுத்தாட்களை திருத்தும் பணிக்காக பயன்படுத்தி கொள்ளபடுகின்றது  ஆனால் இந்த தேர்வுத்தாட்களைதிருத்தும்பணியில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் codechef.comபோன்று இணையத்தில் நேரடியாக இந்த தேர்வினை நடத்தினால் நல்லது எனவிரும்புகின்றார்கள்     இந்நிலையில் open judge  ஆனது இவர்களுக்கு கைகொடுக்கின்றது

 இதனை பயன்படுத்தி கொள்ள நம்மிடம் உபுண்டு இயக்கமுறைமை, பைத்தான்3 கணினிமொழி, கிட், கம்பியில்லா அல்லது கம்பியுடன்கூடிய வளாக பிணையம்  ஆகியவை அடிப்படை தேவையாகும் இது பல்வேறு மொழிகளையும் ஆதரிக்கின்றது இது மிக விரைவாக வினாவிற்கான விடையை சரிபார்த்திட உதவுகின்றது இணையமில்லாமல் வாளாக பிணையத்தில் நடத்தபடும் கொள்குறிவினாத் தேர்வுகளைகூட இணையத்தின் வாயிலாக விரைவாக விடையை சரிபார்த்து உடனடியாக தேர்வுமுடிவுகளை அறிவிக்க பேருதவியாக இருக்கின்றது  இது பயன்படுத்த எளிமையானது  இதனை  http://thesage21.github.io/openjudge/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொண்டு இதனுடைய முனைமத்திற்கு சென்று மேலும் விவரங்களை அறிந்துகொண்டு இதனை உங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்க.

FFMPEG எனும்  திறமூல மென்பொருளை கானொளி காட்சிகளை கையாளுவதற்காக பயன்படுத்தி கொள்க

 இதுபல்லூடக கோப்புகளையும் தரவுகளையும் கையாளும் திறன்வாய்ந்ததொரு  திறமூல மென்பொருளாகும்  ஒருசில நேரங்களில் மிகமேம்பட்ட தொழில்நுட்படங்கள்கூட நன்றாக இயங்காமல் சண்டித்தனம் செய்துவிடும் அதாவது இணையத்தின் வாயிலாக நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பானது சமயத்தில் செயல்படாது நிலையாக நின்றுவிடும் ஆனால் தொலைக்காட்சிபெட்டிகளில்  கணினியின் வாயிலாக தொலைக்காட்சிகளை காணுவதற்காக  கூடுதலாக தேவையான உறுப்புகள் எதுவுமில்லாமல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பினை மிகபிரமாதமாக செயற்படுத்திடுகின்றன. அதிலும் கானொளி காட்சி படங்களை  கணினியில் காண்பிப்பது என்பது ஹெச்டிஎம்எல்5 வருவதற்குமுன் மிகச்சிரமமான பணியாக இருந்தது. அதன்பின்னர் கானொளி காட்சி படங்கள் கணினியில் எளிதாக செயற்படுத்தமுடிந்தது ஆனாலும் கணினியில் நேரடி ஒளிபரப்பு பணியானது மிகச்சிரமமான பணியாகவே இருந்துவந்தது.You Tube Live  என்ற தளமானது FFMPEG  எனும்  திறமூல மென்பொருளை பயன்படுத்தி இந்த பிரச்சினையை தீர்வுசெய்தது.  இந்த  FFMPEGஆனது இயக்குவதற்கு எளிதானது கையடக்கமானது அனைத்து லினக்ஸ் இயக்கமுறைமைகளிலும்முன்கூட்டியே நிறுவுகை செய்யபட்டு கிடைக்கின்றது

7

நமக்கு இதனை செயற்படுத்திட  You Tube   என்ற தளத்தில் கணக்கு ஒன்று இருக்கவேண்டும்  அதனை தொடர்ந்து பொதுச்சேவை யூஆர்ல் முகவரியுடன் You Tube Live செயல் பக்கத்தினை (dashboard) நமக்கு கிடைக்கும்  பிறகுநம்முடைய கானொளி காட்சி படக்கோப்புகளை இந்த மென்பொருளானது முதலில் You Tube Live Dashboard வாயிலாக யூட்யூபில் இயங்கும் கோப்பாகEncoder மூலம் உருமாற்றம் செய்கின்றது  அதன்பின்னர் வழக்கமான தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்று ஒளிபரப்ப படுகின்றது மேலும் விவரங்களுக்கு https://ffmpeg.com/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க.

Impress Remote எனும் ஆண்ட்ராய்டின் பயன்பாட்டின் வாயிலாக லிபர் ஆஃபிஸின் இம்ப்ரஸ் எனும் பயன்பாட்டினை கணினியில் இயக்கலாம்

இதற்காக நம்மிடம் லிபர் ஆஃபிஸ் 4.1 பதிப்பும் அதற்கு பிந்தைய பதிப்பும்  அதனுடன் புளூடூத் அல்லது வொய்பீ வாயிலாக கணினியுடன் இணையும் வசதியும் தேவையாகும்.  முதலில்  லிபர் ஆஃபிஸை திறந்து அதன் முகப்பு திரையில் மேல்பகுதியின் கட்டளை பட்டையில் Tool=>Options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக  உடன் விரியும் பலகத்திரையில் LibreOfficeImpress => General=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.  பின்னர் விரியும் திரையில் presentation என்பதன்கீழ் Enable Remote control என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க  அவ்வாறே மீண்டும்  மேல்பகுதியின் கட்டளை பட்டையில் Tool=>Options=> LibreOffice => Advanced=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக   அதன்பின்னர் விரியும் திரையில் Enable experimental features என்ற வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்கி இயலுமை செய்துகொள்க.  பின்னர் நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு வந்து அங்கு Impress Remote என்ற பயன்பாட்டினை திறந்துகொள்க அதில்    Blue Toothஅல்லது  Wi-Fi ஆகிய இரண்டில் ஒரு இணைப்பை தெரிவுசெய்துகொள்க அதன் பின்னர் LibreOffice Ipமுகவரியிட்டு அதனை இணைத்து கொள்க பின்னர்   Libre Office முகப்புதிரைக்கு சென்று அதன் திரையின் மேலே SlideShow =>ImpressRemote=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் திரையில் preview ,timer, submenu போன்றவாய்ப்புகளை சரியாக அமைத்து  படவில்லை காட்சியை இயக்கி  காட்சியை திரையில் காண்க இந்த வழிமுறையில் லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை படிக்கமட்டுமேமுடியும் திருத்தம் செய்யமுடியாது .

7

விண்டோ இயக்கமுறைமையில் மெய்நிகர் பெட்டி(virtualbox)

8

நாமனைவரும் பல்வேறு இயக்கமுறைமைகளையும் உண்மையில் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்த தயங்கிடுவோம் ஆனால் அவ்வாறு பயன்படுத்தினால் எப்படி நம்முடைய அனுபவம் இருக்கும் என தெரிந்து கொள்ள விழைவோம் இந்நிலையில்  விண்டோ இயக்கமுறைமை செயல்படும்  கணினியில் மற்ற இயக்கமுறைமைகளையும் இணையாக செயல்படுத்தி பயன்பெறுவதற்காக  திறமூலமெய்நிகர் பெட்டிபெரிதும் உதவுகின்றது இது GNU GPLv2  என்ற அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்ட விண்டோ மேக்,லினக்ஸ் ஆகிய பல்வேறு இயக்கமுறைமைகளும் இதன்மீது செயல்படஅனுமதிக்கும் ஒரு திறமூலபயன்பாடாகும் .  இதனை நம்முடைய கணினியில் பயன்படுத்தி கொள்வதற்காக https://virtualbox.org/wiki/Downloads/       என்ற தளத்திற்கு சென்று  இதனுடைய .exe என்றபின்னொட்டுடன் உள்ள செயலிகோப்பை பதிவிறக்கம்செய்து இந்த கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இதனை நிறுவுகை செய்வதற்கான முகப்பு பக்கம் திரையில் தோன்றிடும்  அதில் நாம் நிறுவுகை செய்யவிரும்பும் கோப்பகத்தை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக இவ்வாறு மெய்நிகர் பெட்டியை நிறுவுகை செய்திடும்போது இணைய இணைப்பு ,வளாக பிணைய இணைப்பு வாயிலாக செய்யபடும் செயல்களை சேமித்து கொள்க  ஏனெனில் அவைகளின் செயல்களை இந்நிலையில் தற்காலிகநிறுத்திவிடும்  ஒருவழியாக இந்த மெய்நிகர் பெட்டியை நிறுவுகைசெய்தவுடன்  இதனுள் மெய்நிகர் கணினைய நிறுவுகை செய்திடவேண்டும் அதனால் இந்த மெய்நிகர் பெட்டியின்மேலே இடதுபுறமூலையில் உள்ள new  எனும் பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்கி இதனை செயற்படுத்திடுக  உடன் விரியும் திரையில் இதற்கு ஒரு பெயரையும் என்னவகையான இயக்கமுறைமையை இதில் நிறுவுகை செய்யபோகின்றோம் எவ்வளவு ரேம் நினைவகம் தேவை என்பதையும்  அமைத்திடுக அதற்கடுத்ததாக  Virtual Hard Disk உருவாக்குக அதற்கு எவ்வளவு நினைவகம் தேவையென ‘Fixed-size’ ,‘Dynamic’ ஆகிய இரண்டுவகையில் ஒன்றினை தெரிவுசெய்து  என்னவகையான கோப்புஇந்த வன்தட்டை அமைத்திட தேவையென அமைத்திடுக. அடுத்ததாக இந்த மெய்நிகர் கணினியின் பெயர் ,அமைவிடம் ஆகியவற்றை குறிப்பிட்டு மெய்நிகர் கணினியை உருவாக்கும் பணியை முடிவிற்கு கொண்டுவருக

வெறும் மெய்நிகர் கணினியை மட்டுமே நிறுவுகை செய்தோம் அதில் இயக்கமுறைமையெதுவும் நிறுவுகை செய்திடவில்லை அதனால் startஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து மெய்நிகர்கணினியை செயல்படுத்திடுக பின்னர் விரியும் ‘First Start Wizard’ எனும் திரையில் எந்த வாயிலின் வழியாக இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடவிருக்கின்றோம்என தெரிவுசெய்துகொள்க . அதன் பின்னர் தோன்றிடும் திரையானது நாம் வழக்கமாக புதிய கணினியை இயங்கதுவங்கும்போது இயக்கமுறைமையை நிறுவுகை செய்வதை போன்றே அதில்கோருமாறு செய்துவருக முதலாவதாக புதிய இயக்கமுறைமையை செயல்படுத்திடுவதற்கான பயனாளரின் பெயரையும் கடவுச்சொற்களையும் கோரும் அதனை உள்ளீடு செய்து அடுத்ததிரைக்கு செல்க  அங்கு Better video support, Seamless windows, Automated logons, Time synchronization போன்றவைகளை நிறுவுகை செய்திடவேண்டும் அதற்காக   மெய்நிகர் கணினியை நாம் நிறுவுகைசெய்துள்ள புதிய இயக்கமுறையில் செயல்படுத்திடுக  உடன்தோன்றிடும் திரையில் Devices என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் திரையில்‘Insert Guest additions CD image’  என்பதை தெரிவுசெய்துசொடுக்குக உடன் மேல்மீட்பு பட்டி தோன்றி நம் அனுமதியை கோரும் அதனை run எனும் பொத்தானை தெரிவுசெய்து ஆமோதித்திடுக  உடன் அனைத்தும் கூடுதல் வசதியும் நிறுவுகை செய்யபட்டுவிடும் இதன் பிறகு வழக்கமான கணினிபோன்று இந்த மெய்நிகர்கணியை அதில் நாம் நிறுவுகை செய்யப்பட்ட புதிய இயக்கமுறைமையின் வாயிலாக செயல்படுத்தி சரிபார்த்து பயன்படுத்தி கொள்ளலாம்

Barcodeஎனப்படும் பட்டைகோடுகளை உருவாக்குவதற்காக உதவிடும் கட்டற்ற மென்பொருட்கள்

 தற்போது நாம் கொள்முதல் செய்திடும் அனைத்து பொருட்களும் நன்கு கட்டப்பட்டு நமக்கு வழங்கப்படுகின்றன அவ்வாறான பொருட்களின் கட்டுகளின் சிறுசிறுகோடுகள் இணைந்த சிறிய பட்டையான கோடுகள் அச்சிடப்பட்டு உள்ளன அது அந்த பொருளின் பெயர் அளவு அதன்விலை போன்ற விவரங்களை அடங்கிய பகுதியாகும் அதனை தனியானதொருசிறு கருவி படித்தறிந்து எளிதாக நாம் வாங்கிடும் பொருட்களுக்கான பட்டியலை விற்பணை நிலையங்கள் தயார்செய்வதற்கு பயன்படுகின்றன இந்த பட்டைக்கோடுகளை உருவாக்குவதற்காக பின்வரும் கட்டற்றமென்பொருட்கள் பயன்படுகின்றன.

1.GNU barcode என்பது  உரைகுறியீடுகளை அச்சுப்பொறியில் பட்டைக்கோடுகளாக உருமாற்றி அச்சிடஉதவிடும் ஒருகருவியாகும் இது UPC, EAN, ISBN, CODE39 என்பன போன்ற பல்வேறு வகையான செந்தர குறியீடுகளை ஆதரிக்கின்றது  இதனை கொண்டுநம்முடைய பயன்பாடுகளிலேயே  பட்டைக்கோடுகளை அச்சிடமுடியும் இது  Postscript , encapsulated postscript போன்ற பின்புல செயலை ஆதரிக்கின்றது இது இஞ்ச்,மில்லிமீட்டர் ,சென்டிமீட்டர் போன்ற நாம் ஏற்றுக்கொள்கின்ற அளவுகளில் பட்டைகோடுகளை உருவாக்கி அச்சிடஉதவுகின்றது   ஒரு பக்கத்தில் ஸ்டிக்கர்களை போன்று இந்த பட்டைக்கோடுகளை மொத்தமாக அவைகளின் அட்டவணையை உருவாக்கிட அச்சிட்டுகொள்ள இது அனுமதிக்கின்றது இதனை http://directory.fsf.org/wiki/Barcode/ என்ற தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துபயன்படுத்திக்கொள்க

2.Barcode Writer இது முழுமையாக அச்சுப்பொறியே பட்டைக்கோடுகளின் வடிவமைப்பிற்கு உருமாற்றி அச்சிடும் கட்டளையை நிலை2இல் செயற்படுத்திடும் திறன்கொண்டதாகும்  அதாவது இதனுடைய கட்டளைகளானது குறியீடுகளை பட்டைகோடுகளாக அச்சுப்பொறியை உருமாற்றி அச்சிடுமாறு செய்திடுகின்றது அதனால் தேவையெனில் நாம் விரும்பியவாறு குறியீடுகளை மாற்றியமைத்து கொண்டபின் இதன்வாயிலாக பட்டைக்குறியீடுகளை அச்சுபொறியின் வாயிலாக அச்சிடமுடியும்  இது   UPC, EAN, ISBN, CODE39 என்பனபோன்றஅனைத்து முதன்மையானசெந்தர குறியீடுகளை ஆதரிக்கின்றது . இதனை http://directory.fsf.org/wiki/BarcodeWriter/ என்ற தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துபயன்படுத்திக்கொள்க.

3.Bookland Py என்பது ஒரு பைத்தான் நிரல்தொடராகும் இது  Bookland EAN-13 + 5-digit எனும் கூடுதல் இணைப்பின் வாயிலாக  ISBN பட்டைக்குறியீடுகளை   EPSஎனும் வடிவமைப்பில் உருவாக்குகின்றது இது UPC-A and EAN-13 ஆகியஇணங்களையும்  உள்ளடக்கியதாகும்  அதானால் மற்ற பட்டைக்குறியீடுகளை உருவாக்கும் பயன்பாட்டு மென்பொருளிற்கு   மிகப்பெரிய போட்டியாளராக விளங்குகின்றது  நம்மிடம் முழுமையான ISBN எண் இல்லையென்றாலும் பட்டைக்குறியீடுகளை நாம் இதன்மூலம் உருவாக்கிடமுடியும் அதன்பின்  bookland என்பது நமக்காக check digit என்பதை  சரிபார்த்து கொள்கின்றது   இந்த நிரல்தொடரானது EAN13 number , check digit ஆகியவற்றை உருவாக்கி  parity patterns , bit encodings.ஆகியவற்றை முடிவுசெய்து பட்டைக்குறியீடுகளை அச்சிடசெய்கின்றது .இதனை http://directory.fsf.org/wiki/Bookland.py/ என்ற தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துபயன்படுத்திக்கொள்க.

எழில் எனும் கணினி நி்ரல் மொழி ஒரு அறிமுகம்

 ஆங்கிலத்தில் ஏராளமான கணினி மொழிகள் உள்ளன. உலகெங்கும் லட்சக்கணக்கானோர் இதனைப் பயன்படுத்திக் கணினிக்குக் கட்டளையிடுகிறார்கள், கணினியும் அதன்படி செயல்பட்டு நமக்கு தேவையான பயனை வழங்குகின்றது. இப்போது, ஆங்கிலம் அறியாதவர்களும் கணினி நிரல் எழுதக் கற்கவேண்டும் என்ற எண்ணத்துடன், தமிழில் “எழில்” என்ற  கணினிமொழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .அதாவது நம்முடைய தாய்மொழியான தமிழிலேயே கணினி மென்பொருள் நிரல் (Computer Software Program) எழுதக் கற்றுக்கொண்டு தமிழிலேயே நிரல்தொடர் குறிமுறைவரிகளை எழுதவேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ள அனைவருக்கும் உதவ வருவதுதான்  “எழில்” எனும் இணையதளமாகும் இதனுடைய இணைய தளமுகவரி http://ezhillang.org/     என்பதாகும் .

இந்த “எழில்” மொழியைப் பயன்படுத்துவதற்கான பல்வேறுநுட்பங்களை நமக்கு இந்த தளமான கூறுகின்றது அதனை தொடர்ந்து சென்றால்  நாமும் ஒவ்வொரு படியாக முன்னேறி, மிக விரைவில் “எழில்”மூலம் நினைத்ததையெல்லாம் செய்யத் தெரிந்துகொள்வோம் என்பது திண்ணம். இந்த “எழில்” மொழியைக் கொண்டு நாம்  பின்வரும் செயல்களை செய்து பயன்பெறலாம்

1.நாம் விரும்பும் செய்திகளைத் திரையில் அச்சிடலாம் 2.எளிய, சிக்கலான கணக்குகளைப் போடலாம் 3.தர்க்க அடிப்படையிலான (Logical) தீர்மானங்களில் விரைவாகமுடிவெடுக்கலாம் 4.படம் வரையலாம் 5.ஒரே செயலை பல்வேறு முறை திரும்பத் திரும்பச் செய்யலாம் 6.மிகமுக்கியமாக, இதன்மூலம் கற்றுக்கொண்ட செய்திகளை அடிப்படையாக கொண்டு, மற்ற கணினி மொழிகளையும், இதைவிடப் பெரிய, பயனுள்ளவற்றையும் தெரிந்துகொள்ளலாம்

இந்த எழில் என்பது, தமிழில் உருவாக்கப்பட்ட கணினி நிரல் மொழியாகும். இதுமிகவும் எளிமையானது, திறமூல (Open Source) அடிப்படையில் வெளியிடப்படுவதாகும் .தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் சுலபமாகக் கணினி நிரல் எழுதவும், தர்க்கரீதியில் சிந்திக்கவும், கணக்குகளை போடவும், கணினியியல் போன்றவற்றை ஆங்கிலத்தின் துணை இன்றியே அறியவும் இதன்மூலம் முடியும்

இந்த எழில் நிரல் மொழியில், தமிழ்ச் சொற்களும், இலக்கணமும் மிக எளிமையாக அமைக்கப்பட்டுள்ளன. எழில் மொழியினுடைய இலக்கணமானது தமிழின் எழுத்து இலக்கணத்தை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழில் பேசுகிற, எழுதுகிற எவரும் இதனைச் சுலபமாக அறிந்துகொண்டு பின்பற்றலாம் அதேசமயம் மற்ற நவீன கணினி நிரல் மொழிகளில் (ஆங்கிலம் அடிப்படையிலானவை) உள்ள எல்லா வசதிகளும் இதிலும் உள்ளன.

பயனுள்ள இந்த எழில் கணினி நிரல் மொழியானது இலவசமாகவே வழங்கப்படுகிறது. இது 2007ம் ஆண்டுமுதல் உருவாகிவருகின்றது இந்த  எழில் கணினி நிரல் மொழியானது 2009ம் ஆண்டு முறைப்படி வெளியிடபட்டது.இந்த எழில் மொழியில் நிரல் எழுதுவதற்கான வழிமுறைகள், கிட்டத்தட்ட BASIC கணினி மொழியைப்போலவே அமைந்திருக்கும். நாம் எழுதும் நிரல்கள் ஒன்றபின் ஒன்று என்றவரிசையில் இயக்கப்படும். அல்லது, Functions எனப்படும் ‘நிரல் பாக’ங்களை$ கூட நாம் பயன்படுத்திகொள்ளலாம். இந்தஎழில் கணினி நிரல் மொழியில் எண்கள், எழுத்துச் சரங்கள், தர்க்கக் குறியீடுகள், பட்டியல்கள் போன்ற வகைகள் உள்ளன. நாம் பயன்படுத்தும் மாறி(Variable)களைத் இதில் தனியே அறிவிக்க(Declaration)த் தேவையில்லை. அதற்குபதிலாக நேரடியாக நிரலில் பயன்படுத்தத் தொடங்கலாம்  ஆயினும் ஒரு வகை மாறியை இன்னொரு வகை மாறியாக மாற்றுவது எனில், அதற்கு உரிய குறிச்சொற்களை மட்டும் பயன்படுத்தவேண்டும்

இந்த எழில் கணினி நிரல் மொழியில் உள்ள வசதிவாய்ப்புகள் பின்வருமாறு

1.கணிதகுறியீடுகளும் தர்க்கரீதியிலான குறியீடுகளும் இதில்  உள்ளன2..முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நிரல் $libraryfcns$ பாகங்கள் இதில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு நாம் பயன்படுத்துவதற்காக தயார்நிலையில் உள்ளன . 3.தேவையெனில் நாமும்  புதிய நிரல் பாகங்களை எழுதிச் இந்த தளத்தில் சேர்க்கலாம் 4. Notepad++ , Emacs  ஆகியவற்றை பயன்படுத்துகின்றவர்கள், தங்களது நிரல்களுக்கு ஏற்ற வண்ணக் குறியீடுகளை அமைத்துக்கொள்ளும் வசதி இந்த எழில் கணினி நி்ரல் மொழியில் உள்ளன.  5.எழில் மொழியில் நிரல் எழுதுவதற்கு ஏராளமான குறிச் சொற்கள் .

இந்தஎழில் மொழியில் உள்ள முக்கியமான குறிச் சொற்கள் , அதற்கு இணையான ஆங்கிலச் சொற்களின் பட்டியல் (சிறப்புசொற்கள்(keywords))பின்வருமாறு

1ஆக :- for,  2.நிறுத்து:-break ,3.தொடர்:- continue ,  4. பின்கொடு:- return,5.ஆனால் :-if, 6.இல்லைஆனால் :- elseif, 7.இல்லை :-else, 8.தேர்ந்தெடு :-select, 9.தேர்வு :- case, 10.ஏதேனில் :- otherwise,11.வரை:- while,12.செய் :- do,13.முடியேனில் :- until,14. பதிப்பி :- print,15.நிரல்பாகம் :- function,16.முடி :-end

முதலில் http://ezhillang.org/  எனும் தளத்திலிருந்து சென்றஇதனை பதிவிறக்கம்  செய்து நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்க அதன்பின்னர் எழில் கணினித் திரையில் “ez” என்று தட்டச்சு செய்துகொண்டு விசைப்பலகையில் உள்ள “Enter” விசையைத் தட்டுக.  உடன் திரையில் நிரல் மேசை தோன்றும். இதில்தான் நாம் நம்முு டைய நிரல்களை எழுதப்போகின்றோம். இப்போது, ஒரு மிக எளிய நிரல் எழுதுவோம். இதன் பெயர், ‘வணக்கம்’  எனக்கொள்க இந்த திரையில்  பதிப்பி ” அனைவருக்கும்வணக்கம் !” என்றவாறு கட்டளைவரியை தட்டச்சு செய்துகொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக  உடன் கணினியின் திரையில்  அனைவருக்கும்வணக்கம் ! என்ற வரவேற்பு தோன்றிடும்

 இதன்பின்னர்  exit() என்ற  கட்டளைவரியை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக  உடன் கணினியின் திரையில் எழில் எனும் கணினிமெழியின் நிரல் திரைமறைந்துவிடும் இதன்பிறகு, நமக்கு தேவையானபோது கணினியின் திரையில்ez என்று தட்டச்சு செய்து மீண்டும் “Enter” விசையை அழுத்தினால் போதும், மீண்டும் நிரல் மேசை தோன்றும், அடுத்த நிரலை எழுதத் தொடங்கலாம்.

10

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-46-வாடிக்கையாளர்விரும்பியவாறு லிபர் ஆஃபிஸ்ரைட்டரில் மாற்றியமைத்தல்

 லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரின் திரையில் நடப்பில் இருக்கும் பட்டியல்களின் பட்டிகள் , கருவிகளின் பட்டிகள்,குறுக்குவழி விசைகள் போன்றவைகளையும் புதிய பட்டியலின் பட்டி,புதிய கருவிகளின் பட்டி,தானியங்கி செயலியைஒதுக்கீடு செய்தல் போன்றவை களையும் லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரில் வாடிக்கையாளர் தாம் விரும்பியவாறு சேர்க்கவோ மாறுதல் செய்துகொள்ளவோ முடியும் . இவையல்லாது வேறுஏதேனும் வேண்டுமெனில் அவை லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரில் விரிவாக்க செயலிகளாக சேர்த்து கொள்ளமுடியும்.

 இவ்வாறான பட்டியல்களின் உள்ளடக்கங்களை வாடிக்கையாளர் தாம் விரும்பியவாறு மாற்றியமைத்திட முதலில் லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டியில் Tools => Customize=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்திடுக உடன்விரியும் Customizeஎனும் உரையாடல் பெட்டியில் Menusஎனும் தாவிப்பொத்தானின் திரைக்கு செல்க

46.1

1

 அங்கு Save Inஎனும்கீழிறங்கு பட்டியிலிலிருந்து for the application (Writer) அல்லது for a selected documentஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்துகொள்க அவ்வாறே Menu எனும்கீழிறங்கு பட்டியிலின் முதன்மை பட்டி, துனைபட்டி ஆகியவற்றில் தேவையான வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்துகொள்க பின்னர் Menu அல்லது Modifyஆகிய இரு பொத்தான்களில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குக அதுமட்டு மல்லாது தேவையெனில் Addஎனும் பொத்தானைகூட தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் எந்தவிடத்தில் இந்த பட்டியலின் பட்டி அமைந்திருக்க வேண்டும் என்பதற்காகmenu content entries என்ற உரைபெட்டிக்கு அருகிலுள்ள நகரும் பெட்டியை பிடித்து இழுத்துசென்று சரிசெய்து அமர்த்திகொள்க. இறுதியாக இந்தபணிஅனைத்தும் முடிந்தபின்னர் OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 புதியபட்டியலின்பட்டியை உருவாக்குவதற்காக இதே Customizeஎனும் உரையாடல் பெட்டியில் Menusஎனும் தாவியின் திரையில் New எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் New Menuஎனும் உரையாடல் பெட்டியில் இதற்கொரு பெயரை Menu Name என்ற உரைபெட்டியில் உள்ளீடு செய்துகொள்கபின்னர்menu position என்ற உரைப்பெட்டிக்கு அருகிலுள்ள மேல்நோக்கு அல்லது கீழ்நோக்குஅம்புக்குறிகளில் தேவையானதை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து சரிசெய்து அமர்த்திகொண்டபின்னர் OK எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்புதிய பட்டியலின் பட்டி Customizeஎனும் உரையாடல் பெட்டியில் சேர்ந்து தோன்றிடும்.

46.2

2

 இதன்பின்னர் நடப்பிலுள்ள நாமேமுயற்சிசெய்து உருவாக்கியஅல்லது ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள பட்டியல்களின் பட்டியை மாறுதல் செய்வதற்காக முதலில் தேவையானதை Menuஎனும் பட்டியலில் தெரிவுசெய்துகொண்டபின்னர் Menuஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் Move, Rename, Deleteபோன்ற கட்டளை வாய்ப்புகளில் தேவையானதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சரிசெய்துகொள்க

 எச்சரிக்கை ஏற்கனவே முன்கூட்டியே கட்டமைக்கபட்டு வருகின்ற பட்டிகளை Rename, Delete ஆகிய இருக்கட்டளைகளை பயன்படுத்தி மாறுதல்கள் செய்யமுடியாது அவ்வாறே துனைப்பட்டிகளை Move எனும் கட்டளையை பயன்படுத்தி மாறுதல்கள் செய்ய முடியாது எனும் செய்தியை மனதில் கொள்க

 புதியதாக உருவாக்கிய பட்டியை நாம் விரும்பும் இடத்திற்கு நகர்த்தி சரிசெய்து அமரச்செய்வதற்காக திரையின் மேல்பகுதியிலுள்ள Menu => Move=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Menuஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில்menu position என்ற உரைப்பெட்டிக்கு அருகிலுள்ள மேல்நோக்கு அல்லது கீழ்நோக்குஅம்புக்குறிகளில் தேவையானதை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து சரிசெய்து அமர்த்திகொண்டபின்னர் OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

 இதிலுள்ள துனைபட்டிகளை சரிசெய்திட முதன்மை பட்டியை முதலில் தெரிவுசெய்து கொள்க பின்னர் அதிலுள்ள நகரும் முக்கோன அம்புக்குறி பொத்தானை பிடித்து கொண்டு அதனை மேலும் கீழும் நகர்த்தி சென்று தேவையான துனைபட்டியை தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் Menuஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் Rename எனும் கட்டளையை பயன்படுத்தி மாறுதல்கள் செய்துகொள்க

 இவைமட்டுமல்லாது இந்த பட்டிகளின் கட்டளைகளுக்கு அடிக்கோடிடுதல் போன்றசெயலை செய்வதற்காக தேவையான கட்டளைகளை தெரிவுசெய்துகொண்டு (~)என்ற குறியீட்டை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்துகொள்க

 இவ்வாறு கட்டளைகளை மட்டும் அமைத்தால் போதாது அதனை செயல்படுமாறு செய்திடவேண்டுமல்லவா அதற்காகCustomizeஎனும் உரையாடல் பெட்டியில் Menusஎனும் தாவியின் திரையில் நாம் புதியதாக சேர்த்த அல்லது மாறுதல் செய்த பட்டியை தெரிவு செய்து கொண்டு Addஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Add Commandsஎனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில்Category என்ற பெட்டியின் கீழுள்ளவைகளில் தேவையானவகையையும் அதுதொடர்பான கட்டளை செயல்களைcommands என்பதிலிருந்தும் தெரிவுசெய்துகொண்டுAdd என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக மேலும்தேவையானவைகளையும் இவ்வாறே தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து அமைத்தபின்னர் இறுதியாக closeஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவெளியேறுக.

46.3

3

 இந்த கட்டளைபட்டியை வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல்கள் செய்வதை போன்று கருவிகளின் பட்டிகளையும் நாம் விரும்பியவாறு மாறுதல்கள் செய்து கொள்ள முடியும் அதற்காக தேவையான கருவிகளின் பட்டியை தெரிவசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில்Customize என்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது திரையின் மேலே கட்டளைபட்டையில் View => Toolbars => Customize=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுTools => Customize => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுஇதேCustomizeஎனும் உரையாடல் பெட்டியில் Toolbarsஎனும் தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 பின்னர் இந்ததிரையில்முன்பு கட்டளை பட்டிகளுக்கு செய்ததைபோன்று புதிய கருவிபட்டியை சேர்க்கலாம் நடப்பிலிருப்பதை மாறுதல்கள் செய்துகொள்ளலாம் இறுதியாக okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து இந்த பணியை முடிவுக்கு கொண்டுவந்தபின்னர் இந்த கருவிகளின் பட்டிகளை செயல்படுமாறு செய்வதற்காக கட்டளைபட்டிகளுக்கு செய்ததை போன்று Add Commandsஎனும் உரையாடல் பெட்டிதிரையின் துனையுடன் முன்பு மேலே கட்டளை பட்டிகளுக்கு கூறியவாறு செய்துகொள்க கூடுதலாக இங்கு கருவிகளின் பட்டியில் கருவிகளை அதற்கான உருவபொத்தானாக தோன்றிட செய்திடவேண்டும் அதற்காக இதேCustomizeஎனும் உரையாடல் பெட்டியில் தேவையான கருவிகளின் பெயரை தெரிவசெய்துகொண்டுModify => Change icon => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் Change iconஎனும் உரையாடல் பெட்டிதிரையில்தோன்றிடும் அதில் iconsஎனும் உரைபெட்டியில் தேவையான உருவத்தை தெரிவுசெய்துகொண்டுokஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து

  இந்த பணியை முடிவுக்கு கொண்டுவருக அல்லது நாமே வரைகலையில் இதற்கென தனியானதொரு உருவத்தை உருவாக்கி தனிக்கோப்பாக சேமித்துவைத்திருந்தால் இந்த Change iconஎனும் உரையாடல் பெட்டியின் திரையில் importஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து iconsஎனும் உரைபெட்டிக்குள் கொண்டுவந்து சேர்த்தபின் வழக்கம்போன்று மேலேகூறியவாறு தெரிவுசெய்து அமைத்துகொள்க

 குறுக்குவழிவிசைகளை வாடிக்கையாளர் விரும்பியவாறு ஒதுக்கீடு செய்து கொள்ளமுடியும் அதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Customize => Keyboard=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குக உடன் Customize எனும் உரையாடல் பெட்டியானது Keyboardஎனும் தாவியின் திரையாக தோன்றிடும்

46.4

4

 இதில் மேலே வலதுபுற மூலையிலுள்ளlibre office எனும் தேர்வுசெய்பொத்தானை தெரிவுசெய்துகொண்டுFunctions என்பதற்கு கீழுள்ளcategory என்ற பெட்டியின் கீழுள்ளவைகளில் தேவையான வகையையும் அதுதொடர்பான செயல்களைfunction என்பதிலிருந்தும் தெரிவுசெய்துகொண்டுModify என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக மேலும்தேவையானவைகளை இவ்வாறே தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து அமைத்தபின்னர் இறுதியாக Okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

46.5

5

 மிகச்சுலபமான வழிமுறையாக நாம் லிபர்ஆஃபிஸ் ரைட்டரில் செய்திடும் செயலை தானியங்கியாக செய்வதற்காக முதலில் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Options => LibreOffice => Advanced=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் Enable macro recordingஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்தானியங்கி செயலை இயலுமை செய்துகொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Macros => Record Macro=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் நம்முடைய கணினியின் செயலை சிறிய பதிவுசெய்திடும் Record Macroஎனும் உரையாடல் பெட்டி திரையின் மேலே வலதுபுறமூலையில் தோன்றிடும் அதன்பின்னர் திரையின் மேலே கட்டளை பட்டையில் Insert => Special Characters=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் Special Charactersஎனும் திரையில் தேவையான எழுத்துருக்களைen-dash (U+2013) and em-dash (U+2014) ஆகியவற்றிலிருந்து தெரிவுசெய்து கொண்டு Okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக இவ்வாறு பதிவு செய்திடும் பணி முடிவடைந்ததும் இந்த Record Macroஎனும் உரையாடல் பெட்டியின் திரையில் Stop Recording எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த செயலை சேமித்துகொள்க உடன் LibreOffice Basic Macros dialogஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் மேலே இடதுபுறமுள்ள Macro nameஎனும் உரைபெட்டியில் இதற்கொரு பெயரினை உள்ளீடு செய்துகொள்க பின்னர் அதன்கீழேsave macro in என்பதன்கீழுள்ள mymacro-standard என்பதில் துனைபெயராக module1என்பதை தெரிவுசெய்துகொண்டு save என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக

 அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Customize => Keyboard=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் Customize எனும் உரையாடல் பெட்டியின் Keyboardஎனும் தாவியின் திரையில் Short keys என்ற பெட்டியின் கீழுள்ளவைகளில் அதன் நகரும்பெட்டியை பிடித்து நகர்த்தி சென்று தேவையானவாறு Ctrl+Shift+M போன்ற இதுவரை பயன்படுத்தாத விசைகளின்குழுவை தெரிவுசெய்துகொண்டு Functions என்பதற்கு கீழுள்ளcategory என்ற பெட்டியின் கீழுள்ளவைகளில் தேவையானmodule1 என்பதுபோன்ற வகையையும் அதுதொடர்பான Emdashஎன்பன போன்ற செயல்களைfunction என்பதிலிருந்தும் தெரிவுசெய்துகொண்டு Modify என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் key என்பதன்கீழ் நாம் தெரிவுசெய்து Ctrl+Shift+M எனும்குறுக்குவழிவிசைகள் தோன்றிடும் மேலும் தேவையானவைகளை இவ்வாறே தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து அமைத்தபின்னர் இறுதியாக Okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

 பிறகுஇதனை ஒரு கோப்பாக சேமிக்கவேண்டுமல்லவாஅதற்காக Customize எனும் உரையாடல் பெட்டியில் saveஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Save Keyboard Configurationஎனும் உரையாடல் பெட்டியில் Save as Typeஎனும் வகைபட்டியில் All filesஎன்பதை தெரிவுசெய்துகொள்க File name எனும் உரைபெட்டியில் இதற்கொரு பெயரினை உள்ளீடு செய்துகொண்டு இந்த கோப்பினை சேமிக்க வேண்டியஇடத்தை தெரிவுசெய்துகொண்டு saveஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 தானியங்கி செயல்களை விரிவாக்கமாககூட சேர்த்து கொள்ளமுடியும் இதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Extension Manager=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் Add.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது*.oxt எனும் பின்னொட்டுடன் உள்ள தேவையான விரிவாக்க கோப்பினை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் Extension Managerஎனும் திரைதோன்றிடும் எச்சரிக்கை பெட்டியும் தோன்றிடும் அதில் okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து இதனை நிறுவுகை செய்திடும் பணியை தொடரச்செய்திடுக

 Extension Managerஎன்பதன்வாயிலாக நேரடியாக நிறுவுகை செய்வதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Extension Manager=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் Extension Manager எனும் உரையாடல் பெட்டியில் Addஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் கோப்பினை தேடிடும் உரையாடல் பெட்டியில் தேவையான விரிவாக்க கோப்பினை தெரிவுசெய்துகொண்டுவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் openஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

46.6

6

  பின்னர் விரியும் பெட்டியில்உள்ள “for all users” (shared) அல்லது “only for me” (user).ஆகிய இருபொத்தான்களில் “for all users” என்பதை தெரிவசெய்துகொள்க உடன் இந்த விரிவாக்க செயலிகள் நிறுவுகை செய்யப்படும் இந்த நிறுவுகை செயலின் போது license agreementதொடர்பாக நம்முடைய ஆமோதிப்பை தெரிவுசெய்துகொள்க மேலும் விரிவாக்க செயல் தேவையெனில் http://extensions.libreoffice.org/.எனும் இணையபக்கத்திற்குசென்று தேவையானதை பதிவிறக்கம்செய்துகொள்க.

Previous Older Entries Next Newer Entries