கணினியின் பயன்பாடுகளை செல்லிடத்துபேசியின்வாயிலாக நேரடியாக இடைமுகம் செய்து SignalR என்ற பயன்பாட்டின்மூலம் கட்டுபடுத்தலாம்

   நாம் அனைவரும் பயன்படுத்திடும் செல்லிடத்து பேசியில் தயார்நிலை தகவல்தொடர்பு, மிகவிரைவான இணையசேவை, சக்திவாய்ந்தசெயல், குறைந்தசெலவு  என்பனபோன்ற நவீண அறிவியல் பயன்பாடுகளை நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகின்றோம்  அதன் தொடர்ச்சியாக தற்போது SignalR என்ற பயன்பாட்டின் உதவியால் நம்முடைய செல்லிடத்து பேசிவாயிலாக கணினியின் பயன்பாடுகளை கட்டுபடுத்திடமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

இந்த  SignalR என்ற கணினி பயன்பாடானது ASP.NET அடிப்படையில் உருவாக்கபட்ட சேவையாளர் வாடிக்கையாளர் ஆகிய இருவழி கட்டற்ற பயன்பாடாகும்

 முதலில் இதனை http://www.asp.net/signalr/ எனும் இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் Tools=>Library Package Manager=> Package Manager Console => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி கட்டுகளை பிரித்து கொள்க.

 அதன்பின்னர்  Install-package Microsoft-Asp.Net.SignalR  என்றவாறு கட்டளைவரியின் வாயிலாக இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க .

 இதில் 1.Self-hosting in console application, 2.IIS-hosting, 3.Self-hosting in Windows Service ஆகிய  மூன்று வாய்ப்புகள் உள்ளன அவற்றுள் நமக்கு தேவையான வாய்ப்பினை மட்டும் செயற்படுத்தி பயன்பெறுக

இது மைக்ரோசாப்ட் லிவ், ஓப்பன்ஆத், கூகுள், ஃபேஸ்புக் ட்விட்டர்  ஆகியவற்றின் பாதுகாப்பினை கொண்டது ஜாவாஸ்கிரிப்ட் , .நெட், விண்டோஃபோன்,ஆண்ட்ராய்டு ஆகியவற்றை ஆதரிக்ககூடியது

மேலும் இது  சேவையாளர் வாடிக்கையாளர் ஆகிய இருவழி பயன்பாடு மட்டுமல்லாது இணையபக்கங்களை மேம்படுத்தவும் உதவுகின்றது

இது தொடுதிரை வாயிலாக தகவல்தொடர்பு கொள்வதையும் , ஆதரிக்ககூடியதாக உள்ளது தரவுகளை கடத்துவதற்காக web socket, serversent events, forever frame,long polling, ஆகியவற்றை கையாளுகின்றது

மேலும் விவரங்களுக்கு https://github.com/SignalR/SignalR/wiki/  எனும் தளத்திற்கு செல்க.

1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: