லிபர் ஆஃபிஸ் கால்க்-47 லிபர்ஆஃபிஸின் கால்க் அறிமுகம்

  தரவுகளை உள்ளீடு செய்து கணக்கீடு செய்யும் எம் எஸ் ஆஃபிஸ் எக்செல் போன்ற தொரு லிபர்ஆஃபிஸின் விரிதாள் தான் கால்க் ஆகும்.இதில் எண்களை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் அதன்விளைவான சில தரவுகள் நமக்குகிடைக்கும். அதற்குபதிலாக தரவுகளை இதில் உள்ளீடு செய்து what if போன்ற வாய்ப்பாடுகளை செயல்படுத்தி அதன் விளைவுகளையும் பெறமுடியும் ..

இந்த லிபர்ஆஃபிஸ் கால்க்கின் பயன் பின்வருமாறு

1.இதிலுள்ள செயலி(function) மூலம் தரவுகளின் சிக்கலான கணக்கீடுகளை செய்வதற்கான வாய்ப்பாட்டை உருவாக்கிட முடியும்

2.தரவுதளத்தின்  அடிப்படை செயல்களான தேக்கிவைத்தல், வடிகட்டுதல், பிரிதிபலிக்கசெய்தல் போன்றவைகளை இதில் செயல்படுத்திடமுடியும்

3.பல்வேறுவகையான இயக்கநேர வரைபடங்களை மிக முக்கியமாக இருபரிமான வரைபடங்கள், முப்பரிமான வரைபடங்கள் ஆகியவற்றினை இதில் உருவாக்கிட முடியும்

4.LibreOffice.org Basic, Python,Bean Shell,  JavaScript என்பன போன்ற உயர்நிலை மொழிகளை ஆதரிக்கின்ற  திரும்பதிரும்ப செய்யப்படும் செயல்களை தானாகவே செயற்படுத்து வதற்காக உருவாக்கப்படும் மேக்ரோக்களை இதில் எளிதாக உருவாக்கி செயற்படுத்த முடியும்

5.எம் எஸ் ஆஃபிஸ் எக்செல்லின் விரிதாளை லிபர்ஆஃபிஸ் கால்க்கில்  திறந்து பணிபுரிந்த பின்னர் நாம்விரும்பும் வகை கோப்பாக சேமிக்கமுடியும்.

6.நாம் பணிபுரிந்து வரும் இதனுடைய விரிதாளினை HTML, CSV, PDF,  Post Script என்பன போன்ற வகை கோப்புகளாக இதிலிருந்து பதிவேற்றும் செய்யவும் அவ்வாறே அவைகளின் பல்வேறு வகையான கோப்புகளை இதில் பதிவிறக்கம் செய்யவும்  முடியும்

பொதுவாக ஒருவர் லிபர்ஆஃபிஸ் கால்க்கில் பணிபுரிவதற்காக விரிதாட்கள் பயன்படு கின்றன இவை தனித்தனியான பல்வேறு விரிதாட்களை கொண்டவையாகும் இந்த விரிதாள் ஒவ்வொன்றும் எண்ணற்ற  கலன்களை(Cells) ஏறத்தாழ சுமார் 1,048,576 கலன்களை கொண்டதாகும் இந்த கலன்கள் 65536 கிடை வரிசைகளையும்(Row)   1024நெடுவரிசைகளையும் (Column)  கொண்டு கட்டமைக்க பட்டவையாகும் ஒரு கலனின் முகவரியானது நெடுவரிசையின் எழுத்தும் கிடை வரிசையின் எண்ணும் சேர்ந்து அவ்விரண்டும்  குறுக்காக வெட்டும் புள்ளியின் பெயராகும்  உதாரணமாக a12  என்றால் a நெடுவரிசையில் 12 ஆவது கிடைவரிசையின்  குறுக்காக வெட்டிடும் புள்ளி என இதற்கு அர்த்தமாகும்.

1

படம் 47.1

 லிபர் ஆஃபிஸ் கால்க் இயங்கத்துவங்கியவுடன் இதனுடைய முதன்மை சாளரம் திரையில் தோன்றிடும்  படம் 47.1 ஆனது  ஒரு சாதாரணலிபர் ஆஃபிஸ் கால்க்கின் முகப்பு தோற்றமாகும்

குறிப்பு.இந்த கால்க்கின் முகப்பு பக்கத்தில் ஏதேனும் ஒரு பகுதி திரையில் தோன்றவில்லை எனில் உடன் திரையின்மேலேயுள்ள கட்டளைபட்டையிலிருந்து View => Status Bar =>என்றவாறு தேவையான கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தோன்றசெய்திடுக

 இதன் மேல்பகுதியின் தலைப்பில் இருப்பது தலைப்பு பட்டையாகும்(Title bar) அதாவது இதுதான் இந்த விரிதாளின் பெயராகும். புதியதாக ஒரு லிபர் ஆஃபிஸ் கால்க்கினை உருவாக்கி திரையில் தோன்ற செய்யும்போது untitled  X என இது இருக்கும் இதிலுள்ள Xக்கு பதில் நாம்விரும்பும் பெயரை உள்ளீடு செய்து சேமித்து கொள்ளலாம்

 இரண்டாவதாக இருப்பது file, Edit, view ,insert, format, tools, data ,window, help ஆகிய கட்டளை கள் அடங்கிய மற்ற லிபர்ஆஃபிஸின் பயன்பாட்டை போன்றுள்ள கட்டளைகளின் பட்டையாகும் (Menu bar).இதில் ஏதாவதொருகட்டளையை தெரிவுசெய்தால் தொடர்புடையு கட்டளைகளின் பட்டி திரையில் பிரதிபலிக்கும்

 இதற்கடுத்ததாக  இருப்பது செந்தர கருவிபட்டை (Standard toolbar)வடிவமைப்பு கருவி பட்டை(formatting Tool bar) வாய்ப்பாடு கருவிபட்டை(Formula tool bar) ஆகிய மூன்று கருவி பட்டைகள்(tool bars) உள்ளன. இவை சிலநேரங்களில் மேல்பகுதியில் கட்டபட்டிருக்கும் அல்லது சிலநேரங்களில் மிதக்கும் கருவிபட்டிகளாக இருக்கும். தேவையெனில் இவைகளை மிதக்கும் பட்டிகளாகவோ அல்லது கட்டப்பட்ட பட்டிகளாகவோ நாம் செய்துகொள்ளலாம்.

 முதலிரண்டும் மற்ற லிபர்ஆஃபிஸின் பயன்பாட்டை போன்றுள்ள கருவிபட்டைகள்(tool bars) ஆகும் .இதில் மூன்றாவதாக உள்ள வாய்ப்பாடு கருவிபட்டை யானது லிபர்ஆஃபிஸ் கால்க்கில் மட்டும் தரவுகளை கணக்கிட உதவும் வாய்ப்பாடுகளை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகின்றது இந்த கருவிபட்டைகளில் பல்வேறு கட்டளைகளின் குறும்படங்கள்(Icons) பயனாளர்கள் எளிதில் அடையாளம் கண்டு பயன்படுத்துவதற்கேதுவாக உள்ளன.இந்த கருவிபட்டியிலுள்ள கருவிகளின்மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்தால் உடன் தொடர்புடைய கருவிகளைபற்றிய விவரங்கள் சிறுஆலோசனை குறிப்பாக தோன்றிடும்.

2

படம்-47.2

  இந்த வாய்ப்பாடு கருவிபட்டையின் ((Formula Tools bar)(படம்-47.2)) இடதுபுறம் இருப்பது தற்போது  இடம் சுட்டி இருக்கும் கலனின் பெயரை சுட்டிகாட்டுகின்ற பெயர் பெட்டியாகும் (name box). வலதுபுற மையத்தில் இருப்பது செயலியை உருவாக்கிட உதவும் செயலிவழிகாட்டிஅல்லது வித்தகர்பெட்டி (Function wizard),தரவுகளின் மொத்தத்தை காணஉதவும் கூடுதல்(sum), எந்தவொரு கலனிற்கும் தேவையான வாய்ப்பாட்டை உள்ளீடு செய்ய உதவிடும் சமக்குறி பொத்தான் (equal button ) ஆகிய மூன்று உள்ளன.

  வலதுபுறத்தில் இருப்பது நாம் உள்ளீடு செய்யும் தரவுகளை ,வாய்ப்பாடுகளை திரையில் காண்பிக்கும் உள்ளீட்டு வரி(input line) ஆகும்.

 எதேனும் தரவுகளை ஒருகலனிற்குள் உள்ளீடு செய்ய ஆரம்பித்தவுடன்   கூடுதல்(sum) சமக்குறி பொத்தான்(equal button ) ஆகிய இரண்டும்   தேவையில்லை எனில் நீக்குதல்(Cancel)செய்யவும்  சரியாக இருக்கின்றது எனில் ஏற்பு (accept) செய்யவும் உதவகூடிய  ஆகிய இரு 2.1குறும்பட(Icon)பொத்தான்களாக உருமாறிவிடும்

  இந்த லிபர்ஆஃபிஸ் கால்க்கின் மையத்தில் இருப்பதுதான் நாம்பணிபுரியவிருக்கும் 1,048,576  கலன்களை கொண்ட விரிதாளாகும்

 ஒரு விரிதாளிலிருந்து மற்றொன்றிற்கு சென்றிட  கீழ்பகுதியிலுள்ள தாளின் தாவி (sheet tab)உதவுகின்றது.இந்த விரிதாளின்  பெயரை நாம் விரும்பியவாறு மாற்றி யமைத்திடலாம் அதற்காக திரையின் கீழே தேவையான தாளின் தாவிப்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில்  Rename Sheetஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  உரையாடல் பெட்டியில் தேவையான பெயரை உள்ளீடு செய்துகொண்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இதே வழிமுறையில் நாம் பணிபுரியும் விரிதாளின் வண்ணத்தை கூட மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும்

 இதற்கும் கீழே நாம் பணிபுரியும் லிபர்ஆஃபிஸ் கால்க்கின்  தற்போதைய நிலையை காண உதவிடும் நிலைபட்டை(Status bar) இருக்கின்றது

3

படம்-47.3

  ஒரு நிலை பட்டையின் இடதுபுறத்தில் (படம்-47.3)தாளின் எண்,அந்த பக்கத்தின் பாவணை,உள்ளீட்டு நிலை ,தெரிவுசெய்யும் நிலை,சேமிக்கபடாத மாறுதல்கள் ஆகியவை அடங்கியுள்ளன

  ஒரு நிலை பட்டையின் வலதுபுறத்தில்(படம்-47.3) இலக்கமுறை கையொப்பம்  தெரிவு செய்யபட்ட கலன்களின் கூடுதல் காட்சியின்அளவை கட்டுபடுத்த உதவும் நகரும் பட்டை காட்சியின் அளவு ஆகியவை அடங்கியுள்ளன

விரிதாளினை(Spread sheet) ஆரம்பித்தல்

 லிபர்ஆஃபிஸின் துவக்க மையத்திலுள்ள இதற்கான 3.1 எனும் குறும்படத்தை(Icon) தெரிவு செய்து சொடுக்குதல், கட்டளைபட்டையிலுள்ள File => New=> Spread sheet=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் விசை பலகையிலுள்ள Ctrl + N என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துதல், கருவிபட்டையில் உள்ள இதற்கான குறும்படத்தை(Icon) தெரிவுசெய்து சொடுக்குதல் ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில்  புதிய காலியானதொரு விரிதாளினை(Spread sheet)  திரையில் பிரதிபலிக்க செய்யமுடியும்.

நடப்பிலுள்ள விரிதாளினை திறத்தல்

லிபர்ஆஃபிஸின் ஆரம்ப மையத்திலுள்ள இதற்கான 3.2திற (open)எனும் குறும்படத்தை(Icon) தெரிவுசெய்து சொடுக்குதல், கட்டளைபட்டையிலுள்ள File => open => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் ,விசைப் பலகையிலுள்ள Ctrl + o என்றவாறு  விசைகளை சேர்த்து அழுத்துதல் கருவிபட்டையில் உள்ள  திற (open)எனும் இதற்கான குறும் படத்தை(Icon) தெரிவுசெய்து சொடுக்குதல் ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில் ஒரு விரிதாளினை(Spread sheet)  திரையில்  பிரதிபலிக்க செய்யமுடியும்.

  உரைக்கோப்பாக இருக்கும் தரவுகளின் கோப்பினை லிபர் ஆஃபிஸின் விரிதாளில் திறக்கமுடியும்  அவ்வாறான உரைகோப்பினை கட்டளை பட்டையிலுள்ள File => open => என்றவாறு கட்டளைகளை செற்படுத்துவதன் வாயிலாக  திறக்கும்போது படம் 47.4 இல் உள்ளவாறு உரையாடல் பெட்டியொன்று தோன்றும் அதில் நெடுவரிசைகளை மிகசரியாக அமைத்து ok என்ற பொத்தானை சொடுக்குக.உடன் உரைக்கோப்பானது விரிதாளின் கட்டமைப்புடன் திறந்துவிடும் பின்னர் வழக்கமான விரிதாளில் பணிபுரிவதை போன்று பணிபுரியமுடியும்.

 4

படம்-47.4

Comma-separated-values (CSV) filesஎனும் கோப்புகளை திறத்தல்

திரையின் மேலேகட்டளை பட்டையிலுள்ள File => Open => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Openஎனும் உரையாடல் பெட்டியில் Text(CSV(*.csv)அல்லது (*.txt)) என்றவாறு இருக்கும் கோப்பின் வகையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  Text Importஎனும் உரையாடல் பெட்டி(படம்-47.5) திரையில் தோன்றிடும் அதில் தேவையான வகையை தெரிவுசெய்து கொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த வகை கோப்பு விரிதாளில் நாம் பணிபுரிவதறக்காக திறக்கபட்டுவிடும்.

5

படம்-47.5

பணிபுரிந்த விரிதாளினை  சேமித்தல்

 திரையின் மேலேகட்டளை பட்டையிலுள்ள File => save => அல்லது File => Save As => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல், விசைபலகையிலுள்ள Ctrl + s என்றவாறு  விசைகளை சேர்த்து அழுத்துதல்,      கருவிபட்டையில் உள்ள  சேமிக்க (save)எனும் இதற்கான குறும் படத்தை(Icon) தெரிவு செய்து சொடுக்குதல் ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில் நாம் பணிபுரிந்த ஒரு விரிதாளினை(Spread sheet) சேமிக்க முடியும். அவ்வாறு செயற்படுத்தியவுடன்  save எனும் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் இந்த லிபர் ஆஃபிஸ் தவிர வேறு வடிவமைப்புகளில் கோப்பினை சேமிப்பதாக தெரிவுசெய்திருந்தால் உடன் Confirm File Formatஎனும் சிறுஉரையாடல் பெட்டியொன்று படம்-47.6 திரையில் தோன்றிடும் அதில் தேவையானUse [xxx] Formatஅல்லது Use ODF Format ஆகிய வற்றில் ஒன்றினை தெரிவுசெய்துகொள்க.

 6

படம்-47.6

மிகமுக்கியமாக Text CSV format (*.csv) எனும்வடிவமைப்பை தெரிவுசெய்திருந்தால் உடன்Export Text File எனும் உரையாடல் பெட்டியொன்று படம்-47.7 திரையில் தோன்றிடும் அதில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக

7

படம்-47.7

இந்நிலையில் தேவையெனில் நம்முடைய கோப்பினை கடவுச்சொற்களுடன் பாதுகாத்து சேமித்திடலாம்

குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே கால்க்கின் ஒவ்வொரு விரிதாள் கோப்பினையும் சேமித்து கொள்ளும்படி அமைக்கமுடியும் அதற்காக மேலே கட்டளை பட்டையிலிருந்து Tools => Options => Load/Save => General => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும்  உரையாடல் பெட்டியில் Save AutoRecovery information every. என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து இதில் இயல்புநிலையில் 15minutes  என்பதை ஏற்று okஎன்ற பொத்தானை சொடுக்குக.

எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் கோப்பாக சேமித்தல்

 ஒரு சிலர் எம்எஸ் ஆஃபிஸில் லிபர்ஆஃபிஸின் கட்டமைப்பிலுள்ள கோப்புகளை கையாளுவதற்கு தயங்குவார்கள்.அவ்வாறானவர்கள் இயல்புநிலையில் லிபர்ஆஃபிஸ் கால்க் கோப்புகளை எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் கோப்பாக சேமிக்குமாறு அமைத்திடலாம் அதற்காக Tools=> Options => Load/Save => Microsoft office=> என்றவாறு  கட்டளைகளை  செயற்படுத்துக  உடன் விரியும்  உரையாடல் பெட்டியில்  Excel to libre office.org calc /libre office calc to excel என்றதேர்வுசெய் பெட்டியை (படம்-47.8 )தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக

8

படம்-47.8

  நாம்விரும்பும் கலனிற்கு இடம்சுட்டியை கொண்டு செல்லுதல்

குறிப்பிட்ட கலனிற்கு இடம்சுட்டியை கொண்டு செல்வதற்காகஇடம்சுட்டியை அக்குறிப்பிட்ட கலனில் வைத்து சொடுக்குதல்,  பெயர்பெட்டியில்(name box) குறிப்பிட்ட கலனின் பெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துதல்.,  F5 என்ற செயலிவிசையை அழுத்தியவுடன் தோன்றும் navigateஎன்ற பெட்டியில் படம்-4.9 கலனின் பெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துதல்.ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில் நாம்விரும்பும் கலனிற்கு செல்லமுடியும்  அம்புக்குறியை பயன்படுத்தியும் நாம் விரும்பும் கலனிற்கு செல்லமுடியும்

9

படம்-47.9

நாம் விரும்பும் விரிதாளிற்குஇடம்சுட்டியை கொண்டு செல்லுதல்

 குறிப்பிட்ட விரிதாளிற்கு இடம்சுட்டியை கொண்டு செல்வதற்கு Control+Page Down Control+Page upஆகிய விசைகளை சேர்த்து அழுத்துதல் இடம்சுட்டியை குறிப்பிட்ட தாளின் தாவியில் வைத்து சொடுக்குதல் அல்லது தேவையான தாவிபொத்தானை  சொடுக்குதல் (படம்-47.10) ஆகியவற்றின் வாயிலாக நாம்விரும்பும் விரிதாளிற்கு செல்லமுடியும்.

10

படம்-47.10

மேலும் விசைப்பலகையிலுள்ள அம்புக்குறிகளை மட்டும்அழுத்துதல் pgup ,pgdn ,Tab ,Shift, Enter ஆகிய விசைகளை தனித்தனியாக அழுத்துதல் அல்லது Ctrl Alt ஆகிய விசைகளுடன் சேர்த்து அழுத்துதல்   வாயிலாக விரிதாளில் நாம் விரும்பும் இடத்திற்கு  செல்லமுடியும்

அதுமட்டுமல்லாது இந்த உள்ளீட்டு விசையை Tools =>Options => LibreOffice Calc= > General=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திய உடன் தோன்றிடும் படம்-47.11 உரையாடல் பெட்டியின் வாயிலாக நாம் விரும்பியவாறான செயலை செய்திடுமாறு அமைத்திடமுடியும்

11

படம்-47.11

கலன்களை தேர்வு செய்தல்

தேவையான கலனில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் இடதுபுற பொத்தானை அழுத்தி பிடித்து கொண்டு இதனுடன்தெரிவுசெய்ய விரும்பும் கலன்கள் தொடர்ச்சியானவை எனில் Shift விசையை அழுத்தி பிடித்து கொண்டு அம்புக்குறி விசையை அழுத்தி தெரிவுசெய்க

  தெரிவுசெய்ய விரும்பும் கலன்கள் தொடர்ச்சியற்றவை எனில் Ctrl  விசையை அழுத்தி பிடித்து கொண்டு தெரிவுசெய்ய விரும்பும் கலன் ஒவ்வொன்றாக இடம் சுட்டியை வைத்து தெரிவு செய்து  இறுதியாக   அழுத்தி பிடித்து வைத்திருந்த விசையை விட்டிடுக.

  இவ்வாறே நெடுவரிசையை அல்லது கிடைவரிசையும் அதனதன் தலைப்பை பிடித்து தெரிவுசெய்வதன் வாயிலாக தெரிவுசெய்து கொள்ளமுடியும்.

  Ctrl + A  ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துதல் அல்லது விரிதாளின் ஆரம்ப முனை பகுதியை (படம்-47.12)தெரிவுசெய்து சுட்டியை சொடுக்குதல் செய்வதன்வாயிலாக விரிதாள் முழுவதையும் தெரிவுசெய்யமுடியும்

12

படம்-47.12

இவ்வாறே ஒன்றுக்கு மேற்பட்ட விரிதாள்களை sheet tab ஐ தெரிவு செய்வதன் வாயிலாக தெரிவுசெய்துகொள்ளமுடியும்.

 தரவுகளை நகலெடுத்து ஒட்டுதல்

 இவ்வாறு தெரிவுசெய்தபின்னர்  Ctrl + C ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் தெரிவுசெய்யபட்ட கலன்களில் உள்ள தரவுகள் நகலெடுக்கபட்டுவிடும்.

 பின்னர் தேவையான இடத்தில் இடம்சுட்டியை கொண்டுசென்று வைத்து Ctrl + v ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் நகலெடுக்கபட்ட தரவுகள் புதிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிடும்.

கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row) விரிதாளை(Sheet)

சேர்த்தல் நாம் பணிபுரியும் இடத்தில் புதிய கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row) விரிதாளை(Sheet) சேர்த்திட விரும்புவோம் அந்நிலையில்மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக. உடன்விரியும் insert என்ற பட்டியில் Cells, Row, Column ,Sheet ஆகியகட்டளைகளில் தேவையான கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக. அல்லது தேவையான இடத்தில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Insert என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் (படம்-47-13) insert என்ற பெட்டியில் selection என்பதன் கீழுள்ள தேவையான தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.

         13

படம்-47-13

கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row) விரிதாளை(Sheet) நீக்குதல்

 நாம் பணிபுரியும் கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row)  நீக்கம் செய்திட விரும்புவோம் அந்நிலையில் மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit என்ற கட்டளையை செயற்படுத்துக உடன் விரியும் Edit  என்ற கட்டளை பட்டியில் Delete cells என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது  தேவையான இடத்தில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Delete என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

 உடன் தோன்றும் Delete என்ற பெட்டியில் (படம்-47-14 )selection என்பதன் கீழுள்ள தேவையான தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.

 14

படம்-47-14

விரிதாளை(Sheet) நீக்குதல்  மறுபெயரிடுதல் (Rename) சேர்த்தல் (insert)

  தேவையான விரிதாளின் sheet tab -ல்  இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் நீக்குதல்  செய்வதற்கு Delete sheet என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த நீக்குதல் செயலை உறுதி செய்வதற்கான சிறுபெட்டியொன்று தோன்றும் ஏற்பதாயின் yes என்ற பொத்தானை சொடுக்குக.

  மறுபயரிடுவதற்கு rename sheet என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. sheet tab -ல் இடம்சுட்டி சென்று நிற்கும் தேவையான புதியபெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக . விரிதாளினை சேர்த்திட(Insert) insert sheet  என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் insert sheet என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-47.15) தோன்றும் அதில் position என்பதன் கீழுள்ள தேவையான தேர்வு செய்பெட்டியை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

15

படம்-47.15

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: