துவக்க நிலையாளர்களுக்கான லினக்ஸ் இயக்கமுறைமையின் கோப்பமைவு வழிகாட்டி

 பொதுவாக இயல்புநிலையில் லினக்ஸ் இயக்கமுறைமையானது  எதையும் கோப்பாகவே கருதுகின்றது  தரவுகள் நிரல்தொடர்கள் பயன்பாட்டுமென்பொருட்கள் வன்பொருள் சாதனங்கள் ஆகிய அனைத்தும் கோப்பாகவே கருதுகின்றது அதிலும் வன்பொருள் சாதனங்களான சுட்டி, விசைப்பலகை குறுவட்டுகளின் வாயில்கள்  ஆகியவைகூட கோப்பாகவே கருதுகின்றது  இந்த சாதனங்களை அனைத்தும் ஒரேமாதிரியான  கோப்புகளின் பெயர்களால் பராமரிக்கபடுகின்றன  இந்த சாதனங்களின் கோப்புகள் அனைத்தும்  /dev என்ற கோப்பகத்திற்குள் வைத்து பராமரிக்கபடுகின்றன இந்த சாதனங்களை உபுண்டு14.04 மேஜைக்கணினி இயக்கமுறையில் எவ்வாறு பாமரிக்கபடுகின்றன செயல்படுத்தபடுகின்றன இப்போது காண்போம்

சுட்டியை இயக்குதல் இதற்கான கோப்புகள்       /dev/psaux என்ற கோப்பகத்திற்குள்  இருக்கும்  முதலில் உபுண்டு14.04 மேஜைக்கணினி இயக்கமுறையின் முகப்புஅல்லது முனைம சாளரத்தை திறந்துகொள்க பின்னர்  sudo cat//dev/psaux என்றவாறு கட்டளைகளை  விசைப்பலைகயில்  தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக   அதன்பின்னர் விரியும் திரையில் நிருவாகியின் கடவுச்சொற்களை  உள்ளீடுசெய்துகொண்டு  உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் சிறிது நேரத்தில் சுட்டியானது செயல்பாட்டிற்கு வந்துவிடும் நாம் அதனை பயன்படுத்தி நம்முடைய வழக்கமான மற்ற செயலை செயற்படுத்தலாம்

இருமுகப்புஅல்லது முனைமங்களில் உள்ள சாதனங்களில் உள்ள கோப்புகளை செயற்படுமாறு செய்தல். இதற்காக இருமுகப்புஅல்லது முனைமங்களின் சாளரங்களை திறந்துகொள்க பின்னர் tty என்றவாறு கட்டளையை உள்ளீடு செய்து தொடர்புடைய சாதனங்களின்  கோப்பு பெயர்களை அறிந்து கொள்க உதாரணமாக dev/pts/2  ,  dev/pts/3 ஆகிய இரண்டும் குறிப்பிட்ட சாதனங்களின் பெயர்களாகும் எனக்கொள்க   பின்னர் முதல் முகப்பு சாளரத்திரையில் sudo cat> /dev/pts//3 என்றவாறு கட்டளைகளை  விசைப்பலைகயில்  தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக   அதன்பின்னர் விரியும் திரையில் நிருவாகியின் கடவுச்சொற்களை  உள்ளீடுசெய்துகொண்டு  உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் சிறிது நேரத்தில் முதல்முகப்பு பக்கத்தில் இரண்டாவது முகப்பு பக்கத்தின் பெயர்  தோன்றுவதை காணலாம் இவ்வாறே இரண்டாவது முகப்பு பக்கத்தில் முதல் முகப்பு பக்கத்தின் எனும் பெயரை ஒத்திசைவு செய்வதை செயற்படுத்தி காண்க

 கோப்பகளின் வகையை அறிந்துகொள்ளுதல்  லினக்ஸ் இயக்க முறைமையில் கோப்புகளின் பின்னொட்டினை வைத்து கோப்பின் வகையை அறிந்துகொள்ளாது அதற்கு பதிலாக கோப்பின் பயன்பாட்டினை வைத்தே கோப்பின் வகையை அறிந்துகொள்கின்றது  அதற்காக பின்வருமாறு கட்டளைகளை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

குறிப்பு பின்வருபவைகளில் முதல் வரிகள் கட்டளை வரியாகும் இரண்டாவது வரிகள் கோப்பகளின் வகையின் விளக்கங்களாகும்

file j.c

  j.c : C source, ASCII text

file index.jpeg

  index.jpeg : JPEG image data, JFIF stanard i.01

file  SysADM.pdf

   SysADM.pdf : pdf document, version 1.4

file SysADM.odp

   SysADM.dop : opendocument presendtation

file Infile

   Infile : symbolic link to ‘sqr.c’

file /dev/sda

   /dev/sda : block special

file /dev/tty1

   dev/tty1 : character special

-s எனும் வாய்ப்பினை கோப்பு கட்டளையை அவைகளுடயை சிறப்பு கோப்பகளை படித்தறிய பின்வருமாறு உள்ளீடு செய்து பயன்படுத்தி கொள்க

 file -s dev/sda

     dev/sda : x86 boot sector

 file -s  /dev/psaux

          dev/psaux : ISO-8859 text, with no line terminators

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: