விண்டோ இயக்கமுறைமையில் மெய்நிகர் பெட்டி(virtualbox)

8

நாமனைவரும் பல்வேறு இயக்கமுறைமைகளையும் உண்மையில் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்த தயங்கிடுவோம் ஆனால் அவ்வாறு பயன்படுத்தினால் எப்படி நம்முடைய அனுபவம் இருக்கும் என தெரிந்து கொள்ள விழைவோம் இந்நிலையில்  விண்டோ இயக்கமுறைமை செயல்படும்  கணினியில் மற்ற இயக்கமுறைமைகளையும் இணையாக செயல்படுத்தி பயன்பெறுவதற்காக  திறமூலமெய்நிகர் பெட்டிபெரிதும் உதவுகின்றது இது GNU GPLv2  என்ற அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்ட விண்டோ மேக்,லினக்ஸ் ஆகிய பல்வேறு இயக்கமுறைமைகளும் இதன்மீது செயல்படஅனுமதிக்கும் ஒரு திறமூலபயன்பாடாகும் .  இதனை நம்முடைய கணினியில் பயன்படுத்தி கொள்வதற்காக https://virtualbox.org/wiki/Downloads/       என்ற தளத்திற்கு சென்று  இதனுடைய .exe என்றபின்னொட்டுடன் உள்ள செயலிகோப்பை பதிவிறக்கம்செய்து இந்த கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இதனை நிறுவுகை செய்வதற்கான முகப்பு பக்கம் திரையில் தோன்றிடும்  அதில் நாம் நிறுவுகை செய்யவிரும்பும் கோப்பகத்தை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக இவ்வாறு மெய்நிகர் பெட்டியை நிறுவுகை செய்திடும்போது இணைய இணைப்பு ,வளாக பிணைய இணைப்பு வாயிலாக செய்யபடும் செயல்களை சேமித்து கொள்க  ஏனெனில் அவைகளின் செயல்களை இந்நிலையில் தற்காலிகநிறுத்திவிடும்  ஒருவழியாக இந்த மெய்நிகர் பெட்டியை நிறுவுகைசெய்தவுடன்  இதனுள் மெய்நிகர் கணினைய நிறுவுகை செய்திடவேண்டும் அதனால் இந்த மெய்நிகர் பெட்டியின்மேலே இடதுபுறமூலையில் உள்ள new  எனும் பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்கி இதனை செயற்படுத்திடுக  உடன் விரியும் திரையில் இதற்கு ஒரு பெயரையும் என்னவகையான இயக்கமுறைமையை இதில் நிறுவுகை செய்யபோகின்றோம் எவ்வளவு ரேம் நினைவகம் தேவை என்பதையும்  அமைத்திடுக அதற்கடுத்ததாக  Virtual Hard Disk உருவாக்குக அதற்கு எவ்வளவு நினைவகம் தேவையென ‘Fixed-size’ ,‘Dynamic’ ஆகிய இரண்டுவகையில் ஒன்றினை தெரிவுசெய்து  என்னவகையான கோப்புஇந்த வன்தட்டை அமைத்திட தேவையென அமைத்திடுக. அடுத்ததாக இந்த மெய்நிகர் கணினியின் பெயர் ,அமைவிடம் ஆகியவற்றை குறிப்பிட்டு மெய்நிகர் கணினியை உருவாக்கும் பணியை முடிவிற்கு கொண்டுவருக

வெறும் மெய்நிகர் கணினியை மட்டுமே நிறுவுகை செய்தோம் அதில் இயக்கமுறைமையெதுவும் நிறுவுகை செய்திடவில்லை அதனால் startஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து மெய்நிகர்கணினியை செயல்படுத்திடுக பின்னர் விரியும் ‘First Start Wizard’ எனும் திரையில் எந்த வாயிலின் வழியாக இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடவிருக்கின்றோம்என தெரிவுசெய்துகொள்க . அதன் பின்னர் தோன்றிடும் திரையானது நாம் வழக்கமாக புதிய கணினியை இயங்கதுவங்கும்போது இயக்கமுறைமையை நிறுவுகை செய்வதை போன்றே அதில்கோருமாறு செய்துவருக முதலாவதாக புதிய இயக்கமுறைமையை செயல்படுத்திடுவதற்கான பயனாளரின் பெயரையும் கடவுச்சொற்களையும் கோரும் அதனை உள்ளீடு செய்து அடுத்ததிரைக்கு செல்க  அங்கு Better video support, Seamless windows, Automated logons, Time synchronization போன்றவைகளை நிறுவுகை செய்திடவேண்டும் அதற்காக   மெய்நிகர் கணினியை நாம் நிறுவுகைசெய்துள்ள புதிய இயக்கமுறையில் செயல்படுத்திடுக  உடன்தோன்றிடும் திரையில் Devices என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் திரையில்‘Insert Guest additions CD image’  என்பதை தெரிவுசெய்துசொடுக்குக உடன் மேல்மீட்பு பட்டி தோன்றி நம் அனுமதியை கோரும் அதனை run எனும் பொத்தானை தெரிவுசெய்து ஆமோதித்திடுக  உடன் அனைத்தும் கூடுதல் வசதியும் நிறுவுகை செய்யபட்டுவிடும் இதன் பிறகு வழக்கமான கணினிபோன்று இந்த மெய்நிகர்கணியை அதில் நாம் நிறுவுகை செய்யப்பட்ட புதிய இயக்கமுறைமையின் வாயிலாக செயல்படுத்தி சரிபார்த்து பயன்படுத்தி கொள்ளலாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: