எழில் எனும் கணினி நி்ரல் மொழி ஒரு அறிமுகம்

 ஆங்கிலத்தில் ஏராளமான கணினி மொழிகள் உள்ளன. உலகெங்கும் லட்சக்கணக்கானோர் இதனைப் பயன்படுத்திக் கணினிக்குக் கட்டளையிடுகிறார்கள், கணினியும் அதன்படி செயல்பட்டு நமக்கு தேவையான பயனை வழங்குகின்றது. இப்போது, ஆங்கிலம் அறியாதவர்களும் கணினி நிரல் எழுதக் கற்கவேண்டும் என்ற எண்ணத்துடன், தமிழில் “எழில்” என்ற  கணினிமொழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .அதாவது நம்முடைய தாய்மொழியான தமிழிலேயே கணினி மென்பொருள் நிரல் (Computer Software Program) எழுதக் கற்றுக்கொண்டு தமிழிலேயே நிரல்தொடர் குறிமுறைவரிகளை எழுதவேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ள அனைவருக்கும் உதவ வருவதுதான்  “எழில்” எனும் இணையதளமாகும் இதனுடைய இணைய தளமுகவரி http://ezhillang.org/     என்பதாகும் .

இந்த “எழில்” மொழியைப் பயன்படுத்துவதற்கான பல்வேறுநுட்பங்களை நமக்கு இந்த தளமான கூறுகின்றது அதனை தொடர்ந்து சென்றால்  நாமும் ஒவ்வொரு படியாக முன்னேறி, மிக விரைவில் “எழில்”மூலம் நினைத்ததையெல்லாம் செய்யத் தெரிந்துகொள்வோம் என்பது திண்ணம். இந்த “எழில்” மொழியைக் கொண்டு நாம்  பின்வரும் செயல்களை செய்து பயன்பெறலாம்

1.நாம் விரும்பும் செய்திகளைத் திரையில் அச்சிடலாம் 2.எளிய, சிக்கலான கணக்குகளைப் போடலாம் 3.தர்க்க அடிப்படையிலான (Logical) தீர்மானங்களில் விரைவாகமுடிவெடுக்கலாம் 4.படம் வரையலாம் 5.ஒரே செயலை பல்வேறு முறை திரும்பத் திரும்பச் செய்யலாம் 6.மிகமுக்கியமாக, இதன்மூலம் கற்றுக்கொண்ட செய்திகளை அடிப்படையாக கொண்டு, மற்ற கணினி மொழிகளையும், இதைவிடப் பெரிய, பயனுள்ளவற்றையும் தெரிந்துகொள்ளலாம்

இந்த எழில் என்பது, தமிழில் உருவாக்கப்பட்ட கணினி நிரல் மொழியாகும். இதுமிகவும் எளிமையானது, திறமூல (Open Source) அடிப்படையில் வெளியிடப்படுவதாகும் .தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் சுலபமாகக் கணினி நிரல் எழுதவும், தர்க்கரீதியில் சிந்திக்கவும், கணக்குகளை போடவும், கணினியியல் போன்றவற்றை ஆங்கிலத்தின் துணை இன்றியே அறியவும் இதன்மூலம் முடியும்

இந்த எழில் நிரல் மொழியில், தமிழ்ச் சொற்களும், இலக்கணமும் மிக எளிமையாக அமைக்கப்பட்டுள்ளன. எழில் மொழியினுடைய இலக்கணமானது தமிழின் எழுத்து இலக்கணத்தை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழில் பேசுகிற, எழுதுகிற எவரும் இதனைச் சுலபமாக அறிந்துகொண்டு பின்பற்றலாம் அதேசமயம் மற்ற நவீன கணினி நிரல் மொழிகளில் (ஆங்கிலம் அடிப்படையிலானவை) உள்ள எல்லா வசதிகளும் இதிலும் உள்ளன.

பயனுள்ள இந்த எழில் கணினி நிரல் மொழியானது இலவசமாகவே வழங்கப்படுகிறது. இது 2007ம் ஆண்டுமுதல் உருவாகிவருகின்றது இந்த  எழில் கணினி நிரல் மொழியானது 2009ம் ஆண்டு முறைப்படி வெளியிடபட்டது.இந்த எழில் மொழியில் நிரல் எழுதுவதற்கான வழிமுறைகள், கிட்டத்தட்ட BASIC கணினி மொழியைப்போலவே அமைந்திருக்கும். நாம் எழுதும் நிரல்கள் ஒன்றபின் ஒன்று என்றவரிசையில் இயக்கப்படும். அல்லது, Functions எனப்படும் ‘நிரல் பாக’ங்களை$ கூட நாம் பயன்படுத்திகொள்ளலாம். இந்தஎழில் கணினி நிரல் மொழியில் எண்கள், எழுத்துச் சரங்கள், தர்க்கக் குறியீடுகள், பட்டியல்கள் போன்ற வகைகள் உள்ளன. நாம் பயன்படுத்தும் மாறி(Variable)களைத் இதில் தனியே அறிவிக்க(Declaration)த் தேவையில்லை. அதற்குபதிலாக நேரடியாக நிரலில் பயன்படுத்தத் தொடங்கலாம்  ஆயினும் ஒரு வகை மாறியை இன்னொரு வகை மாறியாக மாற்றுவது எனில், அதற்கு உரிய குறிச்சொற்களை மட்டும் பயன்படுத்தவேண்டும்

இந்த எழில் கணினி நிரல் மொழியில் உள்ள வசதிவாய்ப்புகள் பின்வருமாறு

1.கணிதகுறியீடுகளும் தர்க்கரீதியிலான குறியீடுகளும் இதில்  உள்ளன2..முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நிரல் $libraryfcns$ பாகங்கள் இதில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு நாம் பயன்படுத்துவதற்காக தயார்நிலையில் உள்ளன . 3.தேவையெனில் நாமும்  புதிய நிரல் பாகங்களை எழுதிச் இந்த தளத்தில் சேர்க்கலாம் 4. Notepad++ , Emacs  ஆகியவற்றை பயன்படுத்துகின்றவர்கள், தங்களது நிரல்களுக்கு ஏற்ற வண்ணக் குறியீடுகளை அமைத்துக்கொள்ளும் வசதி இந்த எழில் கணினி நி்ரல் மொழியில் உள்ளன.  5.எழில் மொழியில் நிரல் எழுதுவதற்கு ஏராளமான குறிச் சொற்கள் .

இந்தஎழில் மொழியில் உள்ள முக்கியமான குறிச் சொற்கள் , அதற்கு இணையான ஆங்கிலச் சொற்களின் பட்டியல் (சிறப்புசொற்கள்(keywords))பின்வருமாறு

1ஆக :- for,  2.நிறுத்து:-break ,3.தொடர்:- continue ,  4. பின்கொடு:- return,5.ஆனால் :-if, 6.இல்லைஆனால் :- elseif, 7.இல்லை :-else, 8.தேர்ந்தெடு :-select, 9.தேர்வு :- case, 10.ஏதேனில் :- otherwise,11.வரை:- while,12.செய் :- do,13.முடியேனில் :- until,14. பதிப்பி :- print,15.நிரல்பாகம் :- function,16.முடி :-end

முதலில் http://ezhillang.org/  எனும் தளத்திலிருந்து சென்றஇதனை பதிவிறக்கம்  செய்து நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்க அதன்பின்னர் எழில் கணினித் திரையில் “ez” என்று தட்டச்சு செய்துகொண்டு விசைப்பலகையில் உள்ள “Enter” விசையைத் தட்டுக.  உடன் திரையில் நிரல் மேசை தோன்றும். இதில்தான் நாம் நம்முு டைய நிரல்களை எழுதப்போகின்றோம். இப்போது, ஒரு மிக எளிய நிரல் எழுதுவோம். இதன் பெயர், ‘வணக்கம்’  எனக்கொள்க இந்த திரையில்  பதிப்பி ” அனைவருக்கும்வணக்கம் !” என்றவாறு கட்டளைவரியை தட்டச்சு செய்துகொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக  உடன் கணினியின் திரையில்  அனைவருக்கும்வணக்கம் ! என்ற வரவேற்பு தோன்றிடும்

 இதன்பின்னர்  exit() என்ற  கட்டளைவரியை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக  உடன் கணினியின் திரையில் எழில் எனும் கணினிமெழியின் நிரல் திரைமறைந்துவிடும் இதன்பிறகு, நமக்கு தேவையானபோது கணினியின் திரையில்ez என்று தட்டச்சு செய்து மீண்டும் “Enter” விசையை அழுத்தினால் போதும், மீண்டும் நிரல் மேசை தோன்றும், அடுத்த நிரலை எழுதத் தொடங்கலாம்.

10

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. நிமித்திகன்
    பிப் 09, 2016 @ 14:53:15

    நன்றி.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: