ஒன்றிற்குமேற்பட்ட இயக்கமுறைமைகளை மெய்நிகர்பெட்டியின்(virtual box) வாயிலாக ஒரே கணினியில் செயல்படுத்தி பயன்பெறமுடியும்

இந்த மெய்நிகர் பெட்டி(vetualbox)என்பது விண்டோ,லினக்ஸ்,ஐஓஎஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்ட விண்டோ,லினக்ஸ்,ஐஓஎஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளையும் தன்னுள் செயல்பட உதவும் ஒருதிறன்மிக்க நிருவாகியாக விளங்குகின்றது இதனை http://filehippo.com/download_virtualbox/ https://virtualbox.org/wiki/downloads/ ஆகியஇரு தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க. அதனை தொடர்ந்து நாம் வழக்கமாக மற்ற கணினியின் பயன்பாடுகளை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்வதைபோன்று நிறுவுகையின் வழிகாட்டி பெட்டியில் next, next , install இறுதியாக finish என்றவாறு பொத்தான்களை  தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால் மட்டும் போதுமானதாகும்

இந்த மெய்நிகர் பெட்டியை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடும்போது கூடுதலாக VboxUSB, VboxNetwork,VboxPythonபோன்ற சிறப்புஇயக்கிகளையும் சேர்த்து நிறுவுகை செய்து கொள்ளவா எனக்கோரும் ஆமோதித்தால் அவைகளையும் சேர்த்து மெய்நிகர்பெட்டியுடன் நிறுவுகை செய்துகொள்ளும் ,

இவ்வாறு இந்த மெய்நிகர்பெட்டியை நம்முடைய கணினியில் நிறுவுகைசெய்திடும்போது முதலில் இதனை நிறுவுகை செய்திடும் வழிகாட்டியின் உரையாடல் பெட்டியில் இதற்கொரு பெயரினை இடுமாறு கோரும்  அதில் விண்டோ,லினக்ஸ்,ஐஓஎஸ் ஆகிய இயக்கமுறைமையில் நாம் எந்த இயக்கமுறைமையை பயன்படுத்திடவிரும்புகின்றோமோ அதற்கேற்ப பெயரினை அமைத்துகொண்டு  next  எனும் பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக. அதற்கடுத்து திரையில் எவ்வளவு நினைவகம் தேவை என கோரும் திரையில் 1ஜிபி போன்று நமக்குஇந்த மெய்நிகர் கணினியில் தேவையான நினைவகத்தை குறிப்பிட்டு next  எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்அடுத்துதோன்றிடும் திரையில் donot add a virtual hard drive, create a virtual hard drive now, use an existing virtual hard drive ஆகிய மூன்று வாய்ப்புகளில் இரண்டாவது வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு next  எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் திரையில்  ஒன்றையும் தெரிவுசெய்யவேண்டாம்next  எனும் பொத்தானை மட்டும்தெரிவுசெய்து சொடுக்குக.அடுத்துதோன்றிடும் திரையில் வன்தட்டின் நினைவகத்தைdynamically allocated,fixed size ஆகிய இரு வாய்ப்புகளில் முதல் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டுnext  எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் திரையில் virtual hard disk driver location, size of the virtual disk drive  ஆகியவற்றைcreate எனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து உருவாக்கிடுக தொடர்ந்து  next  எனும் பொத்தானை மட்டும்தெரிவுசெய்து சொடுக்குகஅடுத்து தோன்றிடும் திரையில்  மெய்நிகர் பெட்டி(vetualbox) நம்முடைய கணினியில் உருவாகி நாம் பயன்படுத்தி தயாராகிவிடும் ஆயினும் இந்த மெய்நிகர்பெட்டியில் இயக்கமுறைமை எதனையும் நிறுவுகை செய்யவில்லை அதனால்  இந்த மெய்நிகர்பெட்டியை நாம் நிறுவுகை செய்யவிருக்கும் இயக்கமுறைமைக்கு ஏற்றவாறு கட்டமைவு செய்திடவேண்டும் அதற்காக இந்த மெய்நிகர்பெட்டியின் முகப்பு பக்கத்திற்கு சென்று அதில் settingsஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் நாம் விரும்பும் இயக்கமுறைமையை டிவிடிபோன்ற எந்த இயக்ககத்தின் வாயிலாக என்பதை தெரிவசெய்துகொள்க அடுத்த திரையில்storageஎன்பதை தெரிவுசெய்துசொடுக்குக. உடன் தோன்றிடும் திரையில் இந்த storage என்பதில் தேவையானதை தெரிவசெய்துகொள்க  அடுத்த திரையில்Controller IDE என்பதை தெரிவுசெய்துகொள்க அடுத்த திரையின்choose disk என்பதில்DVD என்றவாறு தெரிவுசய்துகொள்க அடுத்தsettings திரையில் systemஎன்பதை தெரிவுசெய்துகொள்க இறுதியாக ok  என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து இந்த மெய்நிகர் பெட்டியின் முதன்மைத்திரைக்கு வந்துசேருக  பிறகு இதில்உள்ள startஎனும்  பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. அடுத்துதோன்றிடும் திரையில் நாம் விரும்பும் இயக்கமுறைமையை நிறுவுகைசெய்துகொள்க.இந்த மெய்நிகர் பெட்டியில் manageability, Vmgroups,create snapshots,creatinga cloneஆகிய மேம்பட்ட வசதிகள் உள்ளன அவைகளையும் பயன்படுத்தி கொள்க.மேலும் விவரங்களுக்கு https://ww.virtualbox.org/maual/usermanual.html/ எனும் இணைய பக்கத்திற்கு சென்றறிந்துகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: