இணையத்தின் வாயிலாகஒலிஒலிபடக்காட்சிகளை காண உதவும் WRTCஎனும் பயன்பாடு

 இணையத்தின் வாயிலாகநேரடி தொடர்பு (Web Real time Communication) என்பதே சுருக்கமாக (WebRTC)என அழைப்பர்  இது கூகுள்நிறுவனத்தால்2011 ஆம் வெளியிடபட்ட ஒருகட்டற்ற பயன்பாட்டுமென்பொருளாகும்   கோப்புகளை பரிமாற்றம் செய்வதற்கும், விவாதங்கள் செய்வதற்கும், நேரடியாக விளையாடு வதற்கும், ஜாவாஸ்கிரப்ட் இடைமுகம் செய்வதற்கும், வலைபின்னலில் இடைமுகம் செய்வதற்கும், இணையஉலாவியுடன் அடுத்த இணையஉலாவி இடைமுகம் செய்வதற்கும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும்  இதனை கொண்டு நாம் இருந்த இடத்திலிருந்தபடியே ஒலி அல்லது ஒலிஒளி காட்சியின் வாயிலான விவாத மேடையாக   பயன்படுத்தி கொள்ளமுடியும்  மேலும் நிறுவனங்கள் தமக்கு தேவையான பணியாளர்களை அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே நேரடியாக நேர்முகத்தேர்வை நடத்துவதற்கு பயன்படுத்திகொள்ளமுடியும்.  அதுமட்டுமல்லாது தொழில்நுட்ப கானொளி மாநாடு நடத்திடவும்  இணையத்தின் வாயிலாக பொருட்களை கொள்முதல் செய்வதற்கும்  இந்த கட்டற்ற பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த பயன்பாட்டில் voice engineஎன்ற கருவியின் வாயிலாக உரையாடல்களையும் vedio engine  கானொளிகாட்சிகளையும் transport session வாயிலாக தரவுகளை பகிர்ந்துகொள்ளவும் அடிப்படை கட்டமைவைகொண்டு இந்த  WebRTC இன் கட்டற்ற பயன்பாடு பயனாளர்களுக்கு உதவுகின்றது  WebRTC இன் கட்டற்ற பயன்பாட்டினை வழங்குவதில் PubNub, Bistri ,ToolBox ஆகியவை முன்னனியில் உள்ளன  மேலும் விவரங்களுக்கு http://www.webrtc.org/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

8

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: