நாம் பார்வையிடும் இணையதளங்களில் நம்மை விளம்பரங்களால் அலைக்கழிக்காமல் பார்வையிடமுடியுமா

பல்வேறு இணையதளங்களை பார்வையிடுவதற்காக இணையத்தில் உலாவரும்போது banners, side bar ads, pop overs , random ads என்பன போன்ற வகையில் விளம்பரங்கள் நம்மை அதிக அளவு அலைக்கழிக்க செய்து இணைய உலாவலே நமக்கு தேவையில்லை என்ற வெறுப்பினை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன. ஒருசில இணையதளங்கள் மட்டுமே இவ்வாறு அதிகமாக அலைகழிக்கசெய்திடாமல் பார்வையாளர்களின் பணியை பிரச்சினை இல்லாமல் செய்துகொள்ள அனுமதிக்கின்றன அதனால் இவைகளை முழுவதுமாக தடைசெய்துவிடமுடியுமா என முயற்சிசெய்யலாம் எண்ணினால் இந்த விளம்பரங்கள்தான் அந்தந்த இணையதளங்களுக்கான மிகமுக்கிய வருவாய் இனங்களாக உள்ளன ஆகவே நமக்கும் பார்வையாளர்களுக்கும்அதிக தொந்திரவு இருக்ககூடாது கூடவே அந்தந்த இணையதளத்திற்கு போதுமான வருமானமும் கிடைத்திடுமாறு இருக்கவேண்டும் என்ற சிக்கலானநிலையிலதான் Adblock என்பன போன்றவை சிறந்த தீர்வாக அமைகின்றன இது பார்வையாளர்கள் இணைய உலாவலை தொந்தரவு இல்லாமலும் அதேசமயத்தில் இணையதளங்களுக்கு தேவையான வருமானமும் கிடைக்குமாறான வழிவகையையும் செய்கின்றன நம்முடைய இணைய உலாவியில் அல்லது எதிர்நச்சுநிரல் பயன்பாட்டில் malware/virusஆகியவற்றைபற்றிய எச்சரிக்கை செய்தி நமக்கு கிடைக்கபெறும் இணையத்தை பார்வையிடுவதை தவிர்த்திடுக இணையஉலாவி பயன்பாடுகளில் உள்ள கூடுதல் இணைப்புகளை Disconnect plugin கூடியவரை தவிர்த்திடுக இவை நம்முடைய இணைய உலாவியின் வேகத்தை மேம்படுத்துவதோடுமட்டுமல்லாமல் தேவையற்ற சமூகவலைதளங்களின் விளம்பரங்களை தவிர்த்திட உதவுகின்றது அதற்கடுத்ததாக இந்த Adblock பயன்பாட்டின் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் திரையில் Allow some non-intrustive advertising எனும் தேர்வுசெய்பெட்டியின் வாய்ப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாவென உறுதிபடுத்திகொள்க இது நமக்கு அதிகம் தொந்திரவு கொடுக்காத சிறுசிறு விளம்பரங்களை மட்டும் அனுமதிக்கசெய்கின்றது அதற்கடுத்ததாக இதிலுள்ள whitelist எனும் தாவியின்பக்கத்திற்கு சென்று Enabled on this site அல்லதுDisabled on this site.ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து அனுமதிக்கின்றீர்களா மறுக்கின்றீர்களா என முடிவுசெய்துகொள்க நம்முடைய இணைய உலாவி ஃபயர்ஃபாக்ஸ் எனில் அதன்வாயிலாக NoScript, QuickJava ஆகியஇரண்டையும் தெரிவுசெய்து நம்முடைய ஜாவா பயன்பாடுகளை பாதுகாத்து கொள்க நம்முடைய இணைய உலாவி குரோம் எனில் Settings=>Show Advanced Settings=>Content Settings =>Privacy=>Do not allow any site to run Javascript=> என்றவாறு ஜாவா பயன்பாடுகளக்காகவும் Let me choose when to run plugin content என்பதை கூடுதல் இணைப்பை தவிர்ப்பதற்காகவும் தெரிவுசெய்து செயற்படுத்திகொள்க இவ்வாறு தனித்தனியாக தடைசெய்வதற்கு பதிலாக Ghosteryஎன்றகூடுதல் இணைப்பை பயன்படுத்தி இணையஉலாவலில் விளம்பரங்களை தவிர்த்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: