திரைப்படங்களுக்கான திரைக்கதை வசனம் எழுதஉதவும் Trelby எனும்கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டு மென்பொருள்

ஒரு சிறந்த வெற்றிப்படங்களுக்கான திரைக்கதை வசனம் ஆகியவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதே அனைவரின் மனதிலும் உள்ள அடிப்படையான கேள்வியாகும் பொதுவாக திரைக்கதை வசனம் ஆகியவை சிறப்பானதொரு வடிவமைப்பில் இருப்பதால் மிகவியாபார தந்திரமாக அவை உருவாக்கபடுகின்றது அதிலும் சிறந்ததிரைக்கதை வசனம் உருவாக்குவதற்கான கணினியின் பயன்பாடுகள் மிகஅதிக கட்டணத்தில் தற்போது கிடைக்கின்றன. ஆயினும் இந்த செயலிற்காக Trelby எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டு மென்பொருள் கிடைக்கின்றது என்ற செய்தியை மனதில்கொள்க இந்த பயன்பாட்டினைநம்முடைய தேவைக்காக பயன்படுத்தி கொள்வதற்காக http://www.trelby.org/ எனும் இணையபக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

3.1

இந்த பயன்பாடானது திரைக்கதை வசனம் எழுதிடும் பணியை மிகச்சரியான வடிவமைப்பிலும் தானியங்கியாக மிகுதி எழுத்துகளை பூர்த்திசெய்துகொள்ளும் செயலையும் எழுத்துபிழையை சரிபார்த்திடும் செயலையும் மிகஎளிதாக செயற்படுத்துகின்றது மேலும் இந்த பயன்பாடானது நமக்கு திரையின் சாதாரண உரைநடை, நிலையின் காட்சி அல்லது WYSIWYG நிலையின் காட்சி ஆகிய இரண்டில் ஒன்றில்இதனை பயன்படுத்தி கொள்ளஅனுமதிக்கின்றது. இதில் நாம் விரும்பும் கதாபாத்திரங்களின் பெயர்களை தெரிவுசெய்வதற்காக தன்னிடமுள்ள 20000 இற்கும் அதிகமான பெயர்களை நமக்காக தயாராக வைத்துள்ளது

3.2மிகமுக்கியமாக திரைகாட்சிகளையும் அதன்சூழலையும் அதில் பயன்படும் கதாபாத்திரங்களையும் அவர்களிடையயான உரையாடல்களையும் மிகஎளிதாக இதிலுள்ள பல்வேறு வசதிகளை கொண்டு உருவாக்கமுடியும் அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட காட்சிக்கான பல்வேறு வகையான பதிப்புகளில்இந்த திரைக்காட்சிகளுக்கான சிறந்ததிரைக்கதை வசனம் உருவாக்கியபின் அவைகளில் சிறந்ததை நாம் தெரிவுசெய்துகொள்ளும் வசதியும் இதில் இருக்கின்றது

3.3

இதில் உருவாக்கபடும் திரைக்காட்சிகளுக்கான சிறந்ததிரைக்கதை வசனத்தை தெரிவுசெய்தபின் அதனை text, HTML, XML PDFஆகிய வடிவமைப்புகளில் இறுதியாக வெளியிடமுடியும்.இதில் ஏதேனும் சந்தேகம் எழுமானால் அதனை தீர்வுசெய்வதற்கான குழுவொன்று எப்போதும் தயாராக இந்த தளத்தில் இருக்கின்றது இது விண்டோ லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டதாகும்.

மேலும் விவரங்களுக்கு http://www.trelby.org/எனும் இணைய பக்கத்திற்கு செல்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: