செல்லிடத்து பேசியின்பின்புலசேவை(Mobile Backend as a Service(MBaaS))என்றால் என்ன?

 இணையத்திற்கும் செல்லிடத்து பேசிக்குமான பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குவது என்பது வாடிக்கையாளர்களும் சேவையாளர்களும் திருப்தியுறுமாறு உருவாக்கவேண்டிய மிகச்சிரமமான செயலாகும் தற்போது சேவையாளர்களை திருப்தியறசெய்வதற்கு மேககணினிசேவை போதுமானவையாக இருந்தாலும் வாடிக்கையாளரை திருப்தியுறசெய்வதற்கான செல்லிடத்து பேசியில் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்குவது மிகவும்கடினமான பணியாக இருக்கின்றது அதிலும் தற்போது செல்லிடத்துபேசியில் செயல்படும் பயன்பாடுகள் இணையத்தின் வாயிலாக செயல்படசெய்திடவேண்டும் எனும் நிலை சிக்கலிற்குள் சிக்கலாக இந்த பணியை மிகக்கடின மாக்குகின்றது இதனை எளிமையாக்க உதவுவதே செல்லிடத்து பேசியின் பின்புல சேவை(Mobile Backend as a Service(MBaaS))யாகும் இந்த சேவையானது செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளில் ஒவ்வொரு செயலிலும் அதிககாலவிரையத்தை தவிர்த்து தங்களின் செயலைமட்டும் கவணித்து மேம்படுத்த பேருதவியாக இருக்கின்றது மேலும் இந்தசேவையானது 2016 ஆம் ஆண்டில் 40 சதவிகிதம் அளவிற்கு இந்த MBaaS சேவை வளர்ந்துவிடும் என்றும் 2014ஆம் ஆண்டில்0.87 மில்லியன் அமெரிக்கடாலரில் இந்த சேவைக்காக கிடைத்தவருமானது 2019 ஆம் ஆண்டில் 29.16 மில்லியன் அமெரிக்கடாலராக உயரபோகின்றது என ஒரு ஆய்வு கூறுகின்றது இந்த சேவையில் Parse, Kumlos, BAASBOX, OpenKit, Kinvey, Open Master helios Strong Loop என்பன போன்ற பல்வேறு நிறுவனங்கள் முன்னனியில் தற்போது உள்ளன. இந்த MBaaS சேவையானது login, email-verification ,sign-ups போன்ற பயனாளிகளின் பயன்பாட்டு இடைமுகத்தை நிருவகிக்க பயன்படுகின்றது அதுமட்டுமல்லாது சமூக இணையதளத்தில் உள்நுழைவுசெய்வதற்காக பயன்படுத்தபடும் பல்வேறு வகையான உள்நுழைவுசெய்வதற்கான வேவ்வேறு அனுமதி தொழில்நுட்பத்தை இந்தMBaaS சேவையானது ஆதரிக்கின்றது. மேலும் செல்லிடத்து பேசிகளின் தரவுகளை இந்த MBaaS சேவையானது திறனுடன் கையாளுகின்றது கூடுதலாக இந்த MBaaS சேவையானது NoSQlஅல்லதுRelation போன்ற பல்வேறு வகையான தரவுகளை சேமித்திடும் திறனை கொண்டுள்ளது பயனாளர்களின் அதைவிட இந்த MBaaS சேவையானது பல்வேறு வகையான தரவுகளையும் ஆய்வுசெய்திடும் திறன்மிக்கது பயனாளிகளின் பயன்பாட்டு இடைமுக எண்ணிக்கை, தேக்கும் நினைவகவகையும் அளவும், கட்டமைக்கப்பட்ட பயன்பாடுகளின் எண்ணிக்கை, தரவுகளின் ஆய்வு தன்மையை பராமரித்தலும் ஆதரித்தலும் என்பனபோன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த சேவைக்கான விலை நிர்ணயக்கபடுகின்றது.மிகமுக்கியமாக Parse, எனும் நிருவனமானது இந்த MBaaS சேவைசெய்வதில்முன்னனி நிறுவனமாக இருந்தது தற்போது முகநூல் எனும் சமூக இணையதள சேவைநிறுவனமானது தன்னுடைய பின்புல சேவைக்காக இந்தParse எனும் நிறுவனத்தை கையகபடுத்தி கொண்டுவிட்டது இந்த Parse, நிறுவனத்தின் பின்புலசேவையானது 180000 ஆண்ட்ராய்டு,ஐஓஎஸ்,விண்டோவின் செல்லிடத்து பயன்பாடுகளின் சேவைதளமாக செயல்பட்டுவருகின்றது 200 மில்லியனிற்கு மேற்பட்ட செல்லிடத்து பேசிக்கான சேவையை இது வழங்குகின்றது இந்த Parse இன்MBaaS சேவையை பெறுவதற்காக முதலில் http://parse.com/ எனும் இணையதளத்திற்குள் உள்நுழைவுசெய்து அதனுடைய மாதிரி செயல்முறையை காணொளிகாட்சியின் வாயிலாக கண்டபின்னர் இதில் கோரும் விவரங்களை உள்ளீடுசெய்து பதிவுசெய்துகொள்க பின்னர் எந்தவகையான பயன்பாடு நமக்குத்தேவையென தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் எந்தவகையான சூழலில் நாம் உருவாக்கபோகும் இந்த பயன்பாடு செயல்பட வேண்டும் என தெரிவுசெய்துகொள்க பின்னர் எந்தவகையான இயக்கமுறைமை தளத்தில் இந்த பயன்பாடு செயல்படவேண்டும் என தெரிவுசெய்துகொள்க அதன் பின்னர் எந்த கணினிமொழியில் இந்த பயன்பாடு உருவாக்கபடவேண்டும்என தெரிவுசெய்துகொள்க பின்னர் எந்தவகையான செயல்திட்டம் நாம் உருவாக்க விருக்கின்றோம் என்பதற்காக அதாவது புதியதாகவா ஏற்கனவே இருப்பதிலிருந்து மாற்றியமைக்க போகின்றோமா எனதெரிவுசெய்துகொள்க அதாவது வழக்கமான முதல் செயல்திட்டம் என்பதால் new project எனதெரிவுசெய்தபின் எஸ்டிகே என்பதை அமைவுசெய்துகொண்டு காலியான புதிய செயல்திட்டம் பதிவிறக்கம் ஆகிவிடும் பிறகு strater application.java என்பதை தேடி கண்டுபிடித்திடுக பின்னர் oncreated எனும் வழிமுறையில் மேம்படுத்தி காண்பிக்கபட்ட குறிமுறைவரிகளை மட்டும் வெட்டி கொண்டுவந்த ஒட்டிகொள்க அதன்பின்னர் இந்த பயன்பாட்டினை செயல்படசெய்திடுக பின்னர் Testஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சரிபார்த்தபின்னர் சரியாக இருந்தால் சேமித்துகொள்க அதன்பின்னர் Dashboard என்பதன் வாய்ப்புகளை தெரிவுசெய்து மீண்டும் சரிபார்த்தபின்னர் Analysticsview எனும் திரைவிரியும் அதில்core எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக பின்னர்Test object எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் சேமிக்கப்பட்ட தரவுகள் திரையில்காட்சியாக தோன்றிடும்.

2

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: