வருக ஹேக்ஸ் (Haxe)எனும் கணினிமொழியை கற்று பயன்பெறுக

பல்வேறு வகையான சூழ்நிலைகளிலும் அல்லது தளங்களிலும் தாம் உருவாக்கும் மென்பொருளானது எவ்வாறு செயல்படவேண்டும் என்பதே தற்போதைய மென்பொருள் வல்லுனர்களின் முதன்மையான பிரச்சினையாகும். இந்த மென்பொருள் வல்லுனர்கள்உருவாக்கிய பயன்பாடுகளுக்கான குறிமுறைவரிகளானது குறிப்பிட்ட சூழலில் அல்லது தளங்களில் மட்டும் மிகஅழகாக செயல்பட்டு மிகச்சரியான விளைவை வழங்குகின்றன அவையே வேறொரு சூழலில் அல்லது தளங்களில் செயல்படுமாறுசெய்திட முயற்சித்தால் செயல்படாது முடங்கி விடுகின்றன அல்லது தவறான விளைவை வழங்கிவிடுகின்றன அதனால் ஒவ்வொரு சூழலிற்கும் அல்லது தளத்திற்குமான குறிமுறைவரிகளை எழுதும் திறன்கொண்ட தனித்தன்மைவாய்ந்த வல்லுனர்களாக செயல்படுமாறான சூழ்நிலை தற்போது உள்ளது இதனை தவிர்த்து எந்தவொருசூழலிலும் அல்லது தளங்களிலும் செயல்படும் திறன் வாய்ந்த நிரல்தொடர்களை உருவாக்கும் கணினிமொழி அல்லது உருமாற்றம் செய்திடும் கருவி தற்போதைய தேவையாகும்

இந்நிலையில் ஒரு கணினி மொழியில் எழுதப்பட்ட குறிமுறைவரிகளை மற்றொரு கணினிமொழிக்கு மொழிமாற்றம் செய்தாலும் முந்தைய கணினிமொழியில் கிடைத்த அதே விளைவு ஏற்படுமாறு செய்வதை மூலக்குறிமுறைவரியை வேருொரு மூலக்குறிமுறைவரியாக மொழிமாற்றம் செய்தல் என அழைப்பார்கள் அவ்வாறானவைகளில் ஹேக்ஸ், மங்க்கி ஆகிய இரண்டும் இவ்வாறான மூலக்குறிமுறைவரிகளை வேறொரு கணினிமொழிகளுக்கு மொழிமாற்றம் செய்வதிடுவதில் மிகப்பிரபலமானவையாகும் இவ்விரண்டிலும் மென்பொருள் வல்லுனர் ஒருவர் உருவாக்கிய பயன்பாட்டு குறிமுறைவரிகளை அவர்விரும்பும் கணினிமொழிக்கான குறிமுறைவரிகளாக மாற்றியமைத்து உருவாக்கபட்ட பயன்பாட்டினை குறிப்பிட்ட தளத்திள் செயல்படசெய்து பயனடையமுடியும். இதில் ஹேக்ஸ் (Haxe)எனும் பலதளங்களிலும் செயல்படும் கணினிமொழியை பற்றி மட்டும் இப்போது காண்போம் இது ஒரு கட்டற்றகணினிமொழியாகும் இதில் உருவாக்கிடும் பயன்பாட்டினை எந்தவொரு இயக்கமுறைமைதளத்திலும் பிரச்சினை எதுவமின்றி செயல்படுத்திடும் திறன்வாய்ந்ததாகும் இது மெய்நிகர் கணினியிலும் செயல்படும் வல்லமைகொண்டதாகும் சமீபத்திய கணினிமொழியான சி##, பைத்தான் போன்ற மொழிகளை இது ஆதரிக்ககூடியதாகும் இதில் உருவாக்கபடும் குறிமுறைவரிகளை ஜாவாஸ்கிரிப்ட் எனும் வாடிக்கையாளர் வகையிலும் ப்பிஹெச்ப்பி ஸ்கிரிப்ட் எனும் சேவையாளர் வகையிலும் இயந்திரமொழிக்கு மொழிமாற்றும் திறன் கொண்டதாகும் இந்த மொழியில் உருவாக்கபட்ட குறிமுறைவரியை JavaScript, PHP, C++,java, C#, Python, Neko,Fash ஆகிய எந்தவொரு மொழியின் குறிமுறைவரிகளாகவும் மாற்றியமைத்து இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்து பயன்படுத்திகொள்ளமுடியும் இதில்உருவாக்கிடும் கட்டளைவரிகளானது ECMA-262 ISO/IEC16262 ஆகிய செந்தரத்தினை கொண்டதாகும் இந்த கணினிமொழி செயல்படுவற்கு Haxe programe languagw cross-compiler, Haxe library, Haxe based framework,Additiional tools ஆகிய ஐந்த அடிப்படை உறுப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஹேக்ஸ் குறிமுறைவரிகளை எந்தவொரு உரைபதிப்பானிலும் உருவாக்கிகொண்டு அதன்பின்னர் நாம் விரும்பும் கணினிமொழிக்கு மொழிமாற்றம் செய்து கொண்டு இறுதியாக இயந்தரமொழிக்கு மொழிமாற்றம் செய்து சிறந்ததொரு பயன்பாடாக உருவாக்கி கொள்ளமுடியும் இந்த ஹெக்ஸ் எனும்பலதளங்களிலும் செயல்படும் கணினி மொழியின் பதிப்பு1 ஆனது 2006 ஆம் ஆண்டு வெளியிடபட்டது தற்போது பதிப்பு 2.3 வெளியிடப்பட்டுள்ளது இது விண்டோ, லினக்ஸ், மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமையிலும் இயங்கும் திறன்மிக்கதாகும். இதனை http://haxe.org/downlaod/ எனும் இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க. பின்னர் இதற்கான செயலி கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்த ஓரிரு நிமிடங்களிலேயே நம்முடைய கணினியில் நிறுவுகை செய்யபட்டு நாம் பயன்படுத்துவதற்காக தயாராகிவிடும் இதில் மாதிரி நிரல்தொடர் ஒன்றினை உருவாக்கி மற்றொரு கணினி மொழிக்கு உருமாற்றம் செய்து இறுதியாக செயலிகோப்பாக எவ்வாறு உருமாற்றம் செய்து பயன்படுத்திடுவது என இப்போது காண்போம்

நாம்வழக்கமாக முதன்முதல் எழுதிடும் பின்வரும் குறிமுறைவரிகளைஇந்த ஹேக்ஸ் எனும் கணினிமொழியில் எந்தவொரு உரைபதிப்பானிலும் உருவாக்கிகொள்க.

1

class HelloWorld {

static public function main() {

trace(“ ஹேக்ஸ் எனும் கணினிமொழி உங்களை வரவேற்கின்றது “);

}

}

பின்னர் இந்த குறிமுறைவரியை HelloWorld.hx எனும் பெயரில் ஒரு கோப்பாக சேமித்துகொள்க அதன்பின்னர் கட்டளைவரித்திரையில் பின்வரும் கட்டளைவரியை செயல்படுத்திடுக.

haxe -main HelloWorld -js Helloworld.js

உடன் HelloWorld.js எனும் பெயருடன் ஜாவாஸ்கிரிப்ட்டிற்கு மொழிமாற்றம் ஆகி பின்வரும் ஜாவாஸ்கிரிப்ட்டின் குறிமுறைவரியாக மாறியமைந்துவிடும்

(function (console) {“use strict”;

var HelloWorld = function() { };

HelloWorld.main = function() {

console.log(“ஹேக்ஸ் எனும் கணினிமொழி உங்களை வரவேற்கின்றது “);

};

HelloWorld.main();

})(typeof console != “undefine” ? Console : {log:function()

{});

அடுத்ததாக HelloWorld.hx எனும் பெயரில் உள்ள இதே ஹேக்ஸின் குறிமுறை வரிகளை பைத்தான் மொழிக்கு மாற்றியமைத்திட கட்டளைவரித்திரையில் பின்வரும் கட்டளைவரியை செயல்படுத்திடுக

haxe -main HelloWorld -python HelloWorld.py

உடன் HelloWorld.pyஎனும் பெயருடன் பைத்தான் மொழிக்கு மொழிமாற்றம் ஆகி பின்வரும் பைத்தான்மொழியின் குறிமுறைவரியாக மாறியமைந்துவிடும்

class HelloWorld:

@staticmethod

def main():

Print (“ஹேக்ஸ் எனும் கணினிமொழி உங்களை வரவேற்கின்றது “)

HelloWorld.main ()

அவ்வாறே C# சிஷார்ப்பிற்கு மொழிமாற்றம் செய்திடலாம் என முனைந்தால்

“Error:Library hxcs is not installed” எனும் பிழைச்செய்தியை திரையில் காண்பிக்கும் சோர்ந்துவிடாதீர்கள் உடன் haxelib install hxcs எனும் கட்டளைவரியை முதலில் செயல்படுத்திடுக அதன்பின்னர் பின்வரும் கட்டளைவரியை செயல்படுத்திடுக

haxe -main HelloWorld -cs HelloWorldCS

இங்கு HelloWorldCSஎன்பது கோப்பக பெயராகும் இதுவே பைத்தானிலும் ஜாவாஸ்கிரப்ட்டிலும் கோப்பின்பெயராகும் என்பதை மனதில் கொள்க. உடன் மேற்கண்ட கட்டளை வரியானது குறிமுறைவரிகளை HelloWorldCS எனும் இந்த கோப்பகத்திற்குள் மாற்றியமைத்து வைத்த பின்னர் HelloWorld.exe எனும் செயலிகோப்பாக உருமாற்றமாகிவிடும் இதனை பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள https://github.com/HaxeFoundation/HaxeManual/raw/master/HaxeManual/HaxeManual/pdf/ எனும் இணைய தளத்திற்கு செல்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: