லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-44-படிவங்களை உருவாக்கி பயன்படுத்துதல்

பொதுவாக லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் உருவாக்கப்படும் செந்தரமான உரைஆவணங்களான கடிதம், அறிக்கை, சிற்றேடு போன்றவைகளை படிக்கமட்டுமே முடியும். அதில் திருத்தம் எதுவும் செய்யமுடியாது .அதற்குபதிலாக வினாவங்கி போன்ற உரையை வாடிக்கையாளரிடம் வழங்கி அவர்கள் அதில்கோரியுள்ள கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை நிரப்புதல் செய்வதுதான் படிவமாகும் . லிபர் ஆஃபிஸில் தேர்வுசெய்பெட்டி, வாய்ப்பு பொத்தான்,கீழிறங்கு பட்டியல் என்பன போன்ற கட்டுப்பாடுகளை பயன்படுத்தி எளிமையான படிவத்தை வடிவமைப்பு செய்து உருவாக்கி பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவைத்திடமுடியும் .அதனை தொடர்ந்து வாடிக்கையாளர் அந்த படிவங்களில்  தேவையான விவரங்களை நிரப்புதல் செய்து சேமித்து நமக்கு அனுப்பி வைத்திடுவார்கள். பிறகு நாம் இவ்வாறு வாடிக்கையாளர் அனுப்பிவைத்த அனைத்து விவரங்களாலும் நிரப்பபட்ட படிவங்களை திறந்து படித்தறிந்து நம்முடைய தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளமுடியும். .இவ்வாறான படிவங்கள் குழுவான நபர்களிடம் தேவையான விவரங்களை கோரி பெறுவதற்கு வினாவங்கியாகவும்  தரவுதளங்களில் தரவுகளை இணைப்புகளுடன் உள்ளீடு செய்வதற்காகவும், நூலகங்களில் கையிருப்பில் உள்ள புத்தகங்களை பட்டியலாக காண்பிக்கச்செய்து விவரங்களை  அறிந்துகொள்வதற்காகவும் இந்த படிவம் பெரிதும் பயன்படுகின்றது. லிபர் ஆஃபிஸின் பேஸ் எனும் பயன்பாட்டிலும் இந்த படிவம் தரவுகளை அனுகுவதற்காக பயன்படுகின்றது.. மேலும் லிபர் ஆஃபிஸின் இதர பயன்பாடுகளான கால்க், இம்பிரஸ், ட்ரா ஆகியவைகூட இந்த படிவங்களை ரைட்டர் போன்று ஆதரிக்கின்றன என்ற செய்தியைும மனதில் கொள்க.

இந்த படிவத்தை லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் உருவாக்குவதற்காக முதலில் இந்த திரையின் மேலே உள்ள கட்டளை பட்டையில் File => New => Text  document => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி புதிய ஆவணத்தை உருவாக்கிடுக.பின்னர் இந்த லிபர் ஆஃபிஸின் புதிய ஆவணத்தில் புதியதாக படிவம் ஒன்றினை உருவாக்குவதற்காக Form Controls , Form Design ஆகிய இரண்டு கட்டுப்பாட்டு பட்டைகள் உதவுகின்றன  இவை திரையின் மேல்புறத்தில் தோன்றிடவில்லையெனில் View => Toolbars =>Form Controls =>, அல்லது View => Toolbars => Form Design =>என்றவாறு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து படிவத்தை திரைக்கு கொண்டுவருக. அல்லது Form Controls எனும் கருவிபட்டையிலிருந்தும் Form Design எனும் கருவிபட்டையை திரைக்கு கொண்டுவரலாம்.  மேலும் இந்த கருவிகளின் பட்டையை திரையில் எந்தஇடத்திலும் கொண்டுசென்று நிலையாக நிற்குமாறு கட்டிவைத்திடலாம். அல்லது அப்படியே மிதந்துகொண்டிருக்குமாறு  செய்திடலாம். .இவ்விரு கருவிகளின் பட்டைகளிலும் இதனுடைய மேல்பகுதியில் இடதுபுறமூலையிலுள்ள Controls Mode On/Off, Design Mode On/Off,ஆகிய பொத்தான்களை  தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக செயலிற்கு கொண்டுவரவும் அதன்பின்னர் செயல்படாது இருக்குமாறும் செய்திடமுடியும்.

இதன்பின்னர் ரைட்டர் ஆவணத்தின்  தேவையான பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு இந்த படிவங்களின் கட்டுபாடுகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக.உடன் சுட்டியானது கூட்டல் குறியீடுபோன்று உருமாறிவிடும். அதனை பிடித்து இழுத்துசென்று தேர்வுசெய்பெட்டி அல்லது வாய்ப்பு பொத்தான் போன்றவைகளாக உருவாக்கி கொள்க. அடுத்து கட்டுப் பாட்டின் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முன்பு கூறியவாறு பிடித்து இழுத்து உருவாக்கி கொள்க.  பின்னர் படிவங்களின் கட்டுபாட்டு பட்டையில் Selectஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தல் அல்லது  நாம் தெரிவுசெய்த கட்டுபாட்டு உருவப் பொத்தானையே மீண்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தல் ஆகியஇரு வழிகளில்  கட்டுப்பாட்டு பொத்தான்களை ரைட்டரில் உள்ளிணைப்பதை நிறுத்தம் செய்யலாம்   தனித்தனியாக தேர்வுசெய்பெட்டி, வாய்ப்பு பொத்தான் ஆகியவற்றின் உருவ பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அவைகளை உருவாக்குவதற்கு பதிலாக Wizards On/Offஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து குழுவான  group box, list box,  combo boxஆகியவற்றை  ஒட்டுமொத்தமாக  தொகுதியாக உருவாக்கலாம் என்ற செய்தியையும் மனதில் கொள்க. இவ்வாறு  வரைந்து  படிவத்தை வடிவமைப்பு மட்டுமே செய்துள்ளோம் இதனை செயலில் கொண்டுவரவில்லை அதற்காக அவைகளின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Control என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன்அல்லது  படிவங்களின் கட்டுப் பாடுகளின்மீது எங்குவேண்டுமானாலும் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  விரியும் திரையில் பண்பியல்பு எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் பண்பியல்பு பெட்டி திரையில் விரியும் அதில் தேவையான புலங்களை தெரிவுசெய்து இந்த கட்டுப்பாடுகளை கட்டமைவு செய்துகொள்க.  இந்த கட்டப்பாடுகளின் பெயர் அவைகளுடைய செயல்போன்ற விவரங்கள்  அட்டவணை1,2களில் வழங்கப்பட்டள்ளன அவைகளை படித்தறிந்து விவரங்களை அறிந்துகொள்க

 முதலில் File => New => Text Document => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதில் தேவையான விவரங்களை மட்டும் தட்டச்சு செய்து கட்டுப்பாடு பொத்தான்கள் எதுவுமில்லாத சாதாரணபடிவமாக உருவாக்கிகொள்க.

அதற்கடுத்ததாகView => Toolbars => Form Controls =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து கட்டுப்பாட்டு பட்டையை திரையில் தோன்றிட செய்க பின்னர் இதில் உள்ள Design Mode On/Offஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து இந்தகட்டுபாட்டுபட்டையை செயலிற்கு கொண்டுவருக.  பின்னர் Text Boxஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பிடித்துகொண்டு ஆவணத்தில் இடம்சுட்டியை வைத்து தேவையான உருவம் வரும்வரை பிடித்து இழுத்துசெல்க. அதன்பின்னர்  Wizards On/Offஎனும் உருவபொத்தான் செயலில் உள்ளதாவென சரிபார்த்து கொண்டு  More Controls எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மேலும் கூடுதலான கட்டுப்பாட்டு பட்டையை திரையில் கொண்டு வருக. அதில் Group Boxஎனும்  உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முன்புபோலவே உருவாக்கி கொள்க அதன்பின்னர் விரியும் வழிகாட்டித்திரையில் Male ,Femaleஆகிய இரு வாய்ப்பு பெயர்களில்  ஒவ்வொன்றையும் தெரிவுசெய்துகொண்டு >> என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Next >>.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

வழிகாட்டியின் அடுத்ததிரையில் No, one particular field is not going to be selected.என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Next >>.என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. அதற்கடுத்து தோன்றிடும் வழிகாட்டியின் திரையில் which value do you want to assign to each option?என்ற உரைபெட்டியில் நாம் இரண்டு வாய்ப்பு மட்டும் வைத்துள்ளோம் எனில் முதல் புலத்திற்கு 1 என்றும் அதற்கடுத்த புலத்திற்கும்2 என்றும் இதற்குமேல் வாய்ப்புகளை நாம் தெரிவுசெய்திருந்தால் தெரிவுசெய்த புலங்களின் அளவுகளுக்கேற்ப 3, 4  எனத்தெரிவுசெய்து கொண்டு Next >>.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .அதற்கடுத்து தோன்றிடும் வழிகாட்டிபெட்டியில்  Group Boxஎனும் பெட்டிக்கு தலைப்பு பெயர் புதியதாக உள்ளீடு செய்திடுக  அல்லது இருப்பதை நீக்கம் செய்தபின்னர்  Finish.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த வழிகாட்டித்திரையின் பணியை முடிவிற்கு கொண்டுவருக. அதற்கடுத்ததாக  Wizards On/Offஎனும் உருவபொத்தான் செயலை நிறுத்தம் செய்துகொண்டு List Boxஎன்ற   பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் பிடித்துகொண்டு நாம்விரும்பும் உருவம் வருமாறு பிடித்து இழுத்துசென்று பட்டிபெட்டியை வரைக. அதற்கடுத்ததாக  Check Box எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் பிடித்துகொண்டு நாம்விரும்பும் உருவம் வருமாறு பிடித்து இழுத்துசென்று தேர்வுசெய்பெட்டியை வரைக. இப்போது நாம் உருவாக்கிய இந்தபடிவமானது படத்தில் உள்ளவாறு இருக்கும்

1

1

   இதன்பின்னர் இந்த படிவத்தை வாடிக்கையாளர்களுக்கு படிக்கமட்டும் என்றவாறு அமைவில் அனுப்பிவைத்திடுக  பார்வையாளர்கள் இந்த படிவத்தில் காலியான இடத்தில் கோரும் விவரங்களை மட்டுமே உள்ளீடு செய்து நமக்கு அனுப்பிடமுடியும் இந்த படிவத்தை வாடிக்கையாளர்கள் மாறுதல் எதுவும் செய்திடமுடியாது.  அவ்வாறுஆவணத்தை படிக்கமட்டும் என்றவாறுகட்டமைவு செய்வதற்காக  திரையின்மேலே கட்டளை பட்டையில் File => Properties=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

2

2

பின்னர் விரியும் திரையில் Securityஎன்ற தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்து அதில் Open file read-onlyஎன்றவாய்ப்பினை தெரிவு செய்து சொடுக்குதல் செய்தபின்னர் இந்த படிவக்கோப்பினை சேமித்திடுக.

அட்டவணை 1.படிவ கட்டுப்பாட்டு கருவிகளின் பட்டை(Form Control toolbar)

வ.எண் கட்டுப்பாடுகளின்பெயர் அவைகளின் பயன்பாடு
1 Select மற்ற செயலினை செயற்படுத்துவதற்காக படிவத்தின் கட்டுப்பாடுகளை தெரிவு செய்தல்
2 Design mode on/off வடிவமைப்பு நிலையை செயல்படுத்துதல்,நிறுத்துதல்
3 Control வெவ்வேறு கட்டுப்பாடுகளை உருவாக்குதல்
4 Form படிவத்தின் பயன்பியல்களை கொண்டுவருதல்
5 Check Box தேர்வுசெய்பெட்டியை உருவாக்குதல்
6 Text Box உரை பெட்டியை உருவாக்குதல்
7 Formatted Field எண்களை உள்ளீடு செய்வதற்காக புலங்களை வடிவமைத்தல்
8 Push Button மேக்ரோவுடன்இணைப்பதற்கானபொத்தான்களைஉருவாக்குதல்
9 Option Button வாய்ப்புகளுக்கான பொத்தான்
10 List Box பட்டியலுக்கான பெட்டி
11 Combo Box ஒருங்கிணைந்த பெட்டி
12 Label Field புலங்களுக்கான பெயர்பட்டி
13 More Controls மேலும் கட்டுப்பாடுகளை திரைக்கு கொண்டுவருதல்
14 Form Design படிவடிவமைப்பு நிலை
15 Wizards On/Off வழிகாட்டி செயலில் செயலற்று இருத்தல்
16 Spin Button சுற்றிவரும் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தல்
17 Scrollbar நகரும் பெட்டி
18 Image Button உருவபொத்தான்
19 Image Control உருவத்தின் கட்டுபாடு
20 Date Field நாளினை குறிக்கும் புலம்
21 Time Field நேரத்தினை குறிக்கும்புலம்
22 File Selection கோப்பினை தெரிவுசெய்தல்

அட்டவணை 1.படிவ கட்டுப்பாட்டு கருவிகளின் பட்டை(Form Control toolbar)தொடர்ச்சி

வ.எண் கட்டுப்பாடுகளின்பெயர் அவைகளின் பயன்பாடு
23 Numeric Field எண்களுக்கான புலம்
24 Currency Field பணத்தொகையை குறிப்பதற்கான புலம்
25 Pattern Field தரவுதளத்துடன் இணைப்பதற்கான புலம்
26 Group Box குழுவான பெட்டி
27 Table Control தரவுதளத்திற்கான அட்டவணைகட்டுப்பாடு
28 Navigation Bar வழிகாட்டிடும் பட்டை

View=> Toolbars= > Form Navigation=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இதனை கொண்டுவரலாம்

அட்டவணை 2 படிவ வடிவமைப்பு கட்டுப்பாட்டு கருவிகளின் பட்டை(Form Design toolbar)

வ.எண் கட்டுப்பாடுகளின்பெயர் அவைகளின் பயன்பாடு
1 Add Field புலங்களை கூடுதலாக சேர்த்திட பயன்படுத்துதல்
2 Activation Order செயல்படுத்திடும் முன்னுரிமை வழிமுறை
3 Open in Design Mode வடிவமைப்புநிலையில் திறத்தல்
4 Automatic Control Focus தானியங்கிகட்டுப்பாட்டினைமுன்னுரிமை வைத்தல்
5 Position and Size நிலையையும் அளவையும்சரியாக வைத்தல்
6 Change Anchor நங்கூரத்தை மாற்றியமைத்தல்
7 Alignment சரிசெய்தல்
8 Display Grid பிரதிபலிக்கும் கட்டம்
9 Snap to Grid சிறு கட்டம்
10 Guides when Moving நகரும்போது வழிகாட்டுதல்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: