தொடர்பற்ற தரவுகளை கையாளுவதற்காக  HBase எனும்    கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க

 HBase என்பது  தொடர்பற்ற தரவுகளை கையாள உதவும்  ஒரு கட்டற்ற பயன்பாடாகும்..இது எம்எஸ்ஆஃபிஸ் பயன்பாடுகளின் பல்வேறுவகையான கோப்புகள், ப்பீடிஎஃப் கோப்புகள், லிபர் ஆஃபிஸ் பயன்பாடுகளின் பல்வேறுவகையான கோப்புகள்,வரைகலைகளின் கோப்புகள், உருவப்படங்கள், கானொளிப்படங்கள் என்பன போன்ற ஒன்றுக்கொன்று சம்பந்தமேஇல்லாத தொடர்பற்ற பல்வேறுவகையான அமைவில் உள்ள ஏராளமான எண்ணிக்கைகளற்ற தரவுகளை கொண்ட தரவுதளத்தினை கையாளும் திறன்கொண்டது. இது கூகுள் நிறுவனத்தின் பேரளவு அட்டவணை என்பதற்கு அடுத்த படிநிலையாக ஜாவாமொழியில் எழுதப்பட்ட பயன்பாடாகும். இது இலட்சக்கணக்கான கிடைவரிசைகளையும் நெடுவரிசைகளையும் உள்ளடக்கிய மிகப்பெரிய அட்டவணைகளை கொண்ட பேரளவு தரவுகளையும் மிகஎளிதாக கையாண்டு அதில் தொடரச்சியாக எழுதவும் படித்திடவும் செய்து அதிலிருந்து நாம் விரும்பும் தரவைமட்டும் எளிதாக தேடிபிடித்து கொண்டுவரும் அல்லது கொண்டுசென்று சேர்த்திடும் திறன் கொண்டதாகும் . இந்த பயன்பாடானது அப்பாச்சி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதாகும்.  இது ஹடூப்நிறுவனத்தின் பகிர்ந்தளிக்கப்பட்ட கோப்பமைவின்மீது (HDFS (Hadoop Distributed Filesystem)) செயல்படுகின்றது. இந்த  HBase என்பது எஸ்கியூஎல் தரவுதளத்திற்கு மாற்றானது அன்று. ஆயினும் அதனுடைய அனைத்து பயன்களையும் இதில் பெறமுடியும்.  மிகப்பிரபலமான சமூகவலைதளமான முகநூல்(facebook) தளமானது,இந்த HBase என்ற பயன்பாட்டின் அடிப்படையிலேயேசெயல் படுகின்றது என்ற செய்தியை மனதில்கொள்க. இந்தHBase என்பது ஜாவா மொழியில் உருவாக்கபட்டிருந்தாலும்  RESTஎனும் இணையசேவை, Thriftஎனும் உள்நுழைவு வாயில்சேவை ஆகிய இரு சேவையாளர்களுடன் இது சேர்ந்து வருவதால் இதனுடைய செயல்களை மற்ற அனைத்து கணினிமொழிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அனுமதிக்கின்றது. மிகமுக்கியமாக இது பைத்தான் ,ஹேப்பிபேஸ்  ஆகிய இரண்டுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதால் வெகுதூரத்திலுள்ள கணினியுடன் மிகஎளிதாக இணைந்து பிரச்சினை எதுவுமின்றி நன்றாக  செயல்படுகின்றது. இதுதொகுதியான தற்காலிக நினைவகத்தையும் சுறுசுறுப்பான வடிகட்டியையும் கொண்டுள்ளதால் வாடிக்கையாளர்களின் நேரடி வினாஎழுப்புதலுக்கு தேவையான தகவல்களுக்கு உடனுக்குடன் தேவையான பதில்தகவல்களை வழங்குகின்றது. ஏதாவாது ஒருபகுதி பழுதடைந்தாலும் மற்றொரு பகுதியின் தரவுகளைகொண்டு தானியங்கியாக செயல்படும் திறன்மிக்கது.இது வாடிக்கையாளர் எளிதாக அனுகுவதற்கு ஏதுவாக ஜாவா பயன்பாட்டு நிரல்தொடர் அனுகுமுறையை பின்பற்றுகின்றது.. இது அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது. இதுமறையாக்க (cryptographic) அடிப்படையில் உருவாக்கப்பட்டப் பயன்பாட்டு மென்பொருளாகும். இதனை பற்றிய மேலும் விவரம் அறிந்துகொள்ள http://hbase.apache.org/book/faq.html/ , http://hbase.apache.org/book/quickstart.html/ ஆகிய தளங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ள http://hbase.apache.org/ என்ற இணைய பக்க்ததிற்கும் செல்க.

நன்றி: கணியம் மின்னிதழ்

1

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: