1.சந்தை படுத்துதலுக்கு உதவிடும் கேம்பெயின்செயின் எனும் கட்டற்ற மென்பொருள்

தற்போது கிடைக்ககூடிய அனைத்து கட்டற்ற மென்பொருட்களும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்து வந்து தற்போதைய நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் உதவகூடியதாக உள்ளன அதனால் எந்தவொரு தேவைக்கும் கட்டற்ற மென்பொருட்கள் எதுவுமில்லையேஎன யாரும் கவலைபடத்தேவையில்லை. இன்றைய நாகரிக வளர்ச்சியின் எந்தவொரு புதியபொருளை உருவாக்கினாலும் அதனை பயனாளர்களுக்கு கொண்டு சென்று சேர்த்திட சந்தைபடுத்துதல் மிகமுக்கிய பணியாகவிளங்குகின்றது இவ்வாறான சந்தைபடுத்துதல் எனும் செயலிலும் பயன்படக்கூடிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள் ஏராளமாக உள்ளன அவற்றுள் கேம்பெயின்செயின் என்பதை பற்றி இப்போது காண்போம் . இது ட்விட்டர்,முகநூல், கூகுள்அனாலிட்டகல்ஸ், மின்வணிகம் சிஆர்எம்கருவிகள் ஆகிய அனைத்தையும் அரவணைத்து செல்லும் கருவியாக விளங்குகின்றது இது சந்தைபடுத்துதலின் திட்டமிடுதல் செயல்படுத்துதல் கட்டுபடுத்துதல் ஆகியஅனைத்து செயல்களையும் செய்யவல்லதாக உள்ளது இணையத்தில் பொருட்களை சந்தை படுத்துதலின் முதல் படிமுறையாக ஒவ்வொரு இணையபக்கத்திற்கும் சென்று விளம்பரங்களை காண்பிக்கவேண்டியுள்ளது அதனை தவிர்த்து அனைத்து இணையபக்கத்திற்கும் விளம்பரங்களை கொண்டுசேரத்திடும் பணியை ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பு செய்து பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய தாம் விரும்பும் வகையை தெரிவுசெய்துகொள்ளும் வசதியைஇது வழங்குகின்றது அதற்கடுத்ததாக இந்த விளம்பரங்களை எந்தெந்த நேரத்தில் காண்பி்க்கவேண்டும் எனமுடியவுசெய்யவேண்டும் இந்த மென்பொருளானது முன்கூட்டியே விளம்பரங்களை காண்பிக்கும் நேரத்தை தீர்மாணித்து செயல்படுமாறு செய்திடஉதவுகின்றது. மூன்றாவதாக இந்தவிளம்பரங்கள் மக்களிடம் எவ்வாறுசென்றடைகின்றன என அறிந்துகொள்ளவேண்டும் இது ட்விட்டர் ,முகநூல், கூகுள்அனாலிட்டகல்ஸ், மின்வணிகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கட்டமைக்கபட்டுள்ளதால் விளம்பரம் சென்றடைந்த விவரங்களை புள்ளிவிவரங்களின் வாயிலாக அறிந்துகொள்ளமுடியும்,. மேலும்இது வாடிக்கையாளர்களின் உற்ற நண்பனாகவும் தோழனாகவும் விளங்குகின்றது இதனை http://campaignchain.com/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவிடும் ஆவணத்தைhttp://doc.campaignchain.com/wpcontent/doc/pdf/current/compaignchaindocumentation.pdf/ எனும் இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து படித்து அறிந்துகொள்க

1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: