பயனாளர் ஒருவர் எந்தெந்த கணினிமொழிகளை கற்று பயன்படுத்திகொள்வது

கணினியின் அமைவையும் அதனுடைய பயன்பாடுகளையும் உருவாக்குவது மேம்படுத்துவது ஆகிய செயல்களுக்காக கணினியின் பொறியாளர்களும் மேம்படுத்துனர்களும் அதற்கான கணினி மொழி ஏதாவது ஒன்றை கண்டிப்பாக கற்றறிந்து வல்லுனராக இருக்கவேண்டும். என்ற நிலையில் இன்றைய கால கட்டத்தில் லிஸ்ப் என்றும் சி என்றும் சி ஷார்ப் என்றும் .நெட் என்றும் ஜாவா என்றும் எர்லாங் என்றும் எண்ணற்ற கணினிமொழிகள் அவ்வப்போது புதிது புதிதாக தோன்றி நடைமுறை பயன்பாட்டில் கலந்தவண்ணம் உள்ளன .அவைகளுள் எந்த கணினிமொழியை நான் கற்று தெளிவு பெற்று பயன்படுத்தி கொள்வது அல்லது முதலில் எந்த கணினிமொழியை கற்பது அதற்கடுத்து எதனை கற்பது என அனைவரின் அடிமனத்தில் கேள்வி ஒன்று இயல்பாக எழுவது திண்ணம் . நிற்க

1990 இல் சி ,சி++ ஆகிய மொழிகளின் வல்லுனர்களை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர் அந்த சமயத்தில் ஜாவா ஸ்கிரிப்ட் ,ப்பிஹெச்ப்பி பயின்றவர்கள் எனில் யாரும் திரும்பிகூட பார்க்கமாட்டார்கள் என்றநிலை இருந்தது. அதன்பின்னர் ஜாவா ஸ்கிரிப்ட்டை அடிப்படையாக கொண்டு இணைய பயன்பாடு வளர்ந்து வந்தது. தற்போது இணையம் இல்லாத பயன்பாட்டிற்குகூட இந்த ஜாவா ஸ்கிரிப்ட்டை பயன்படுத்திடும் அளவிற்கு நிலைமை முன்னேறிவிட்டது . கூகுளானது டார்ட்எனும் கணினிமொழியை வைத்தும் மைக்ரோசாப்ட் ஆனது டப்ஸ்கிரிப்ட் எனும் மொழியை வைத்தும் இந்த ஜாவா ஸ்கிரிப்ட்டை ஓரங்கட்டிவிடலாம் என முயன்றனர் .ஆனாலும் முடியவில்லை. இப்போது இந்த ஜாவா ஸ்கிரிப்ட் மட்டுமே வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.. தொடர்ந்து தொலைக்காட்சி பெட்டிகளில் அதனுடைய அமைவுபெட்டி(set off box) போன்ற சாதனங்கள் இயங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பே இந்த ஜாவா ஸ்கிரிப்ட்டின் அடிப்படையில் உள்ளது என்ற செய்தியை மனதில் கொள்க மேலும் ஜாவா, சிஷார்ப்,ரூபி,பைத்தான் ஆகிய பெரிய அளவு மொழிகள் கூட தங்களுடைய கட்டளைகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்வதற்கான அடிப்படை கட்டளைகளின் தொகுதியை இந்த ஜாவா ஸ்கிரிப்ட்டையே பயன்படுத்திக்கொள்கின்றன.. அதுமட்டுமல்லாது தற்போதைய புதியதான எல்ம் எனும்கணினி மொழிகூட நிரல்தொடரை இயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்வதற்காக இந்த ஜாவா ஸ்கிரிப்ட்டையே பயன்படுத்திகொள்கின்றது .

பொதுவாக பெரும்பாலான கணினி வல்லுனர்கள் நம்புகின்ற நிலையான வகை மொழிகளான சிஷார்ப், சி++ ஆகிய மொழிகள் வியாபார பயன்பாடுகளையும் ,கட்டற்ற பயன்பாடுகளையும் உருவாக்குவதற்கு பேரளவு பயன்படுகின்றன அதிலும் சி++, சிஎல் போன்ற மொழிகளிலிருந்து மொழிமாற்றம் செய்வதற்கு ..நெட் ஒரு நல்ல அடிப்படையாக இருந்தாலும் இது விண்டோ இயக்கமுறைமையில் மட்டுமே செயல்படும் என்ற கட்டுபாடு உள்ளதால் அனைத்து இயக்கமுறைமை தளங்களிலும் செயல்படும் ஜாவா நல்லதொரு மாற்றாக விளங்குகின்றது .

அதற்கடுத்ததாக பைத்தான், ரூபி,குரூவி,ஆப்ஜெக்ட்டிவ் சி போன்ற இயக்க நேரமொழிகளின் ஆதிக்கம் மேலோங்கியது. இவைகளின் குறிமுறைவரிகளில் உள்ள கட்டளைத்தொடர்களில் பிழை எதுவும் கண்டதும் உடனுக்குடன்  குறிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் மொழிமாற்றம் செய்தல் என விரைவான செயலாக இவை இருப்பதால் பொதுப்பயன் பாட்டிற்காக இவை பெரிதும் உதவின.

அதற்கடுத்த நிலையில் பொருள்நோக்கு வழிமுறைகளை பின்பற்றிடும் செயலிகளுக்கான மொழிகளான எல்ம்,குளோஜர் போன்றவை பயன்பாட்டில் வந்தன.

அதற்கடுத்த கட்டமாக பெரும்பாலான கணினி மொழிகள் கட்டற்ற திறமூல மொழிகளாக வளர்ச்சி பெற்றன மிகமுக்கியமாக ஜாவா மொழிகூட ஆரம்பத்தில் தனியுடமை மொழியாகத்தான் இருந்தது பின்னர் இதனை உருவாக்கிய உடமையாளரான சன் நிறுவனம் இந்த ஜாவா மொழியை கட்டற்ற மொழியாக அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அனுமதித்தது. .ஏன் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட தனியுடமை மொழியான .நெட்டை தற்போது கட்டற்ற திறமூல மொழியாக அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அனுமதித்துவிட்டது .இதே போன்று கோ, டார்ட், போன்றவை மட்டுமல்லாது கடந்த பத்தாண்டுகளாக ஏராளமான கட்டற்ற திறமூல மொழிகள் பொதுமக்கள் அனைரும் பயன்படுத்துவதற்காக உருவாகி வளர்ந்து வருகின்றன.

மேலும் பழைய மொழிகளான எலிக்ஸர்,எர்லாங்,குளோஜர்,லிஸ்ப், ஆப்ஜெக்ட்டிவ், சி, போன்றவைகள் தற்போதைய சூழ்நிலைக்கு தக்கவாறு புதிய மொழிகளாக மறுபிறப்பு எடுத்துள்ளன.

இவ்வாறு மொழிகளை பற்றி பொதுவான கருத்துகளை கூறினால் மட்டும் போதுமா ஆரம்பத்திலேயே அனைவர் மனதிலும் எழும்கேள்விக்கான பதிலெதுவும் இதுவரையில் இல்லையே என ஆதங்கபடவேண்டாம்

சி++ அல்லது ஜாவா எனும் கணினி மொழியை தற்போது பயன்படுத்திடும் நிலையானவகை மட்டுமே போதும் என விரும்புவோர்கள் ரூபி அல்லது பைத்தான் எனும் கணினி மொழியை கற்று பயன்படுத்துக

இணையத்தை பற்றி ஒன்றும் தெரியாது ஆனாலும் இணையப் பயன்பாடுகளை உருவாக்கவேண்டும் என விரும்புவோர் ஜாவா ஸ்கிரிப்ட் எனும் கணினி மொழியை கற்று பயன்படுத்துக .

கணினியின் அமைவை உருவாக்க விரும்புவோர் சி அல்லது கோ எனும் கணினி மொழியை கற்று பயன்படுத்துக .

விளையாட்டுகளை உருவாக்கி மேம்படுத்த விழைவோர் சி++ அல்லது எல்ம் எனும் கணினி மொழியை கற்று பயன்படுத்துக .

ஃபோர்ட்ரான் எனும் கணினி மொழியை தற்போது பயன்படுத்திடும் கணித தொடர்பான ஆர்வம் உள்ளவர்கள் ஜூலியா அல்லது ஜெ எனும் கணினி மொழியை கற்று பயன்படுத்துக.

கேள்விகள் பலவற்றை கோரி அதற்கு பதில்எழுதுவதற்கு விழைபவர்கள் ப்ரோலாக் அல்லது ஆர் எனும் கணினிமொழியை கற்று பயன்படுத்துக.

முடிவாக அவரவர்கள் எந்தெந்த துறையில் விருப்பமும் ஆர்வுமும் உள்ளனரோ அதற்கேற்ற முதல்தலைமுறைமொழியை அடிப்படையாக கற்றுகொண்டு அதற்கடுத்ததாக தற்போதைய வளர்ச்சிகேற்றவாறு அதே துறையின் தற்போதைய கட்டற்ற கணினிமொழியை கற்று தேர்ச்சிபெற்று பயன்படுத்திகொள்க என பரிந்துரைக்கப் படுகின்றது.

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Nagendra Bharathi
    ஜன 03, 2016 @ 13:44:00

    அருமை

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: