நம்முடைய பிள்ளைகள் மென்பொருளை கற்க உதவும் Sugar Labs எனும் இணயதளம்

1

இது ஒரு தன்னார்வ குழுவால் செயல்படுத்தப்படும் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் இணையதளமாகும்.. அந்தந்த வட்டார மொழிகளில் அல்லது உள்ளூர் மொழிகளில் குழந்தைகள் எவ்வாறு கற்றுகொள்வது என அறிந்து தெரிந்துகொள்வதற்கு உதவுவதுதான் இந்நிறுவனவலைதளத்தின் முக்கியநோக்கமாகும்.. ஒரேயொரு ஒற்றையான சுட்டியின் சொடுக்குதலின் வாயிலாக எழுதுவதற்கும், பகிர்ந்துகொள்ளவும், இசையை கற்றுக்கொள்ளவும் இந்த வலைதளத்தின் மூலம் முடியும்.. வழக்கமாக மாணவர்கள் பயிலும் பள்ளியில் பாடத்திட்டம் ,தேர்வு என்ற வரையறையில் மட்டும் கல்வி கற்பிக்கப் படுகின்றது .ஆனால் பாடத்திட்டத்திற்கு அப்பால் அனைத்து கலைகளையும் கற்றிட விரும்பும் மாணவர்கள் கல்வி பயின்றிட இந்த தளம் உதவுகின்றது..இந்த தளத்தில் நாம் பயின்றுவரும்போது உருவாகும் கோப்பானது தானியங்கியாக பிற்காப்பு செய்யப்பட்டுவிடுகின்றது அதனால் இடையில் ஏதேனும் காரணத்தினால் தடை ஏற்பட்டு மீண்டும் தொடரும்போ.து முந்தையை நிலையிலிருந்து தொடரமுடியும்.. மிகவேகமாக செயல்படும் கணினியிலிருந்து மிகமெதுவாக ஆமை போன்று செயல்படும் கணினிவரை அனைத்திலும் இது செயல்படும் திறன் கொண்டதாகும். இது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற மொழியால் உருவாக்கபட்டது.. அதனால் இதில் பயனாளர் எதனையும் தாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ள முடியும் . மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்..இந்த தளமானது பள்ளி ஆசிரியர் போன்று மாணவர்கள் பயிலுவதற்கு தேவையான ஏராளமான அளவில் அனைத்துக் கருவிகளை.யும் தன்னகத்தே கொண்டுள்ளது..சமீபத்திய அனைத்து நிகழ்வுகளும் இதில் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தப்பட்டு பயிலுபவர்களுக்கு தேவையான செய்திகளை வழங்க தயாராக உள்ளது. மேலும் பயிலுபவர்களின் திறன்எவ்வாறு உள்ளதுஎன அவ்வப்போது மதிப்பிட்டு திரையில் பிரதிபலிக்கச் செய்கின்றது.. அனைவரும் சமமாக பயிலுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த தளம் உதவுகின்றது . சாதாரண விவரத்திலிருந்து மிக சிக்கலானது வரை அனைத்து கலைகளையும் எளிதில் பயில இந்த தளம் பயனுள்ளதாக உள்ளது.. இந்த தளமானது இதுவரையில் 25 மொழிகளில் பயிலுவதற் கேற்ப உள்ளது. மேலும்பல்வேறு மொழிகளிலும்இந்த தளமான வளர்ந்து வரத்தயராக உள்ளது.. இது குறுவட்டு ,நெகிழ்வட்டு, யூஎஸ்பி ,மெய்நிகர் கணினி போன்ற ஏராளமான வகையிலும் பயனாளர்கள் இதனை நகலெடுத்து சென்றும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதுஅனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது .இது ஒருசிறந்த பள்ளிஆசிரியரின் வரைச்சட்டமாகும் .இது அனைத்து கணினியுடனும் இயக்க முறையுடனும் இணைந்து இயங்கும் தன்மைகொண்டது. இது பயனாளர்கள் பயிலுவதற்கான ஆயிரக்கணக்கான செயல்களையும் கருவிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.. ஏராளமான தன்னார்வாளர்கள் தொடர்ந்து இதனை மேம்படுத்திக் கொண்டே உள்ளனர். இந்த தளமானது 24மணிநேரம் பயன்படுத்திகொள்ளதயாராக உள்ளது..

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளவிரும்புவோர்களும் பயின்றிடவிரும்பும் பயனாளர்களும் https://www.sugarlabs.org/ எனும் இதனுடைய இணைய பக்கத்திற்கு செல்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: