ஐபேடில் யாகூ மின்னஞ்சலை திறந்து பணிபுரியஇயலவில்லைஎன்ன செய்வது?

முதலில் நாம் ஐபேடில் நம்முடைய யாகூ மின்னஞ்சல் கணக்கின் சரியான கடவுச் சொற்களை பயன்படுத்திடுகின்றோமா என உறுதிபடுத்திடுக. இதனை சரிபார்த்திடுவதற்காக சஃபாரியின் வாயிலாக http://mail.yahoo.com எனும் இணைய பக்கத்தின் வழியில் உள்நுழைவு செய்திடுக ஏற்கனவே உள்நுழைவு முயற்சி செய்திருந்தால் வெளியில்வந்து மீண்டும் உள்நுழைவு செய்திடுக. அடுத்ததாக நம்முடைய ஐபேடில் பயன்பாடுகளின் கட்டமைவை சரிபார்த்திடவேண்டும் அதற்காக Settings => Mail, Contacts and Calendars => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் திரையில் நம்முடைய நடப்பு மின்னஞ்சல் கணக்கின் கட்டமைவுகளை சரிபார்த்திடுக. அந்ததிரையில் யாகூமின்னஞ்சல் கணக்கில்Yahoo! account சுட்டியை கொண்டுசெல்க பின்னர் அதிலிருந்து Delete Accounஎனும் கட்டளைக்கு கொண்டுசென்று அந்த கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக.

9.1

இந்நிலையில் நம்முடைய யாகூ மின்னஞ்சல் கணக்கில் உள்ள மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டுவிடுமோ அல்லது யாகூ மின்னஞ்சல் கணக்கே அழிக்கப்பட்டுவிடுமே என பதற்றபட வேண்டாம்.அஞ்சற்க.ஐபேடில்மட்டும் இந்த மின்னஞ்சல் கணக்குடன்கூடிய தொடர்புமட்டுமே நீக்கம் செய்யபடுகின்றது. உடன் இவ்வாறு நீக்கம் செய்வது தொடர்பான எச்சரிக்கை செய்தி பெட்டி ஒன்று deleting the account will remove all existing emails, contacts and calendars from the iPad என்றவாறு தோன்றிடும் அதனை ஆமோதித்து Delete என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

9.2

அதன்பின்னர் Add Account என்பதையும் பின்னர் Yahoo!என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் மேல்மீட்புபட்டியில் நம்முடைய யாகூமின்னஞ்சல் கணக்குதொடர்பான விவரங்களையும் கடவுச்சொற்களையும் உள்ளீடு செய்துகொண்டு வலதுபுறமூலையில் உள்ள next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் யாகூவின் மின்னஞ்சல் சேவைதான் நமக்குத்தேவை என்பதால் மின்னஞ்சல் சேவையைமட்டும் தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே வலதுபுறமூலையில்உள்ளSave என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இதன்பிறகு நம்முடைய ஐபேடில் நம்முடைய யாகூமின்னஞ்சல் கணக்கினை திறந்து பணிபுரியமுடியும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: