விண்டோ8 இயக்கமுறைமையிலுள்ள விண்டோஸ்டுகோ எனும் வசதி

விண்டோ8 இயக்கமுறைமையிலுள்ள விண்டோஸ்டுகோ எனும் புதிய வசதியானது ஃப்ளாஸ் ட்ரைவ்களிலும் கையடக்க ட்ரைவ்களிலும் நகலெடுத்து கொள்ள அனுமதிக்கின்றது..அதன்வாயிலாக பயனாளர் ஒருவர் கணினியில் தான் வழக்கமாக பயன்படுத்திடும் விண்டோ இயக்க முறைமை நிறுவுகை செய்யவில்லையென்றாலும் கையடக்க சாதனத்தின் வாயிலாகவே தான் வழக்கமாக பயன்படுத்திடும் விண்டோ இயக்கமுறைமையை செயல்படச்செய்து பயன்படுத்தி கொள்ள முடியும். ஆரம்பத்தில் டேப்ளெட் , ஐபேடு, ஆண்ட்ராய்டு பயன்படும் சாதனம் ஆகியவைகளில் செயல்படுத்தமுடியாத யூஎஸ்பி3 வாயில் வழியாக மட்டுமே இது செயல்படுமாறு வெளியிடபட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது செல்லிடத்து பேசிபயன்படுத்துபவர்கள்கூட இந்த யூஎஸ்பி2. அல்லது யூஎஸ்பி3. வாயில்வழியாக உள்ளிணைப்பு செய்து விண்டோ இயக்க முறைமையை செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த வசதியின் வாயிலாக பயனாளர் ஒருவர் தான் பயன்படுத்திடும் கையடக்க சாதனங்களிலும் வலை பின்னலிலும்,மேககணினிசேமிப்பகத்திலும் கணினியின் அமைவை கட்டமைவு செய்து தரவுகளை வேறுபகுதிக்கு இடமாற்றம் செய்யவும் ,சேமித்து வைக்கவும் முடியும். இது இவ்வாறு தரவுகளை இடமாற்றம் செய்திடும்போது தரவுகள் எதுவும் வெளியே கசிந்து விடாமல் பாதுகாப்பாக வைத்துகொள்கின்றது. அதாவது மிகமுக்கியமாக பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் தான் செல்லுமிடத்திலிருந்து கூட தங்களுடைய நிறுவனத்தின் கணினியுடன் நேரடியாக பணிபுரிவதை போன்று வழக்கமான தத்தமது பணியை ஆற்றிடமுடியும்..அமோசான், கிங்ஸ்டான்,வெஸ்ட்ன்டிஜிட்டல் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் இந்த விண்டோஸ்டுகோஎனும் வசதியை தங்களுடைய கையடக்க யூஎஸ்பி சாதனத்தில் செயல்படும் வண்ணம் அமைவுசெய்தே வெளியிடுகின்றனர். . வழக்கமான விண்டோ இயக்க முறைமையில் அலுவலக பயன்பாடுகளை பயன் படுத்தி கொள்ளுதல் ,இணையஉலாவியை பயன்படுத்தி கொள்ளுதல், தூரத்திலிருந்து தத்தமது பணிகளை செய்தல் இதர பயன் பாடுகளை பயன்படுத்திகொள்ளுதல் போன்ற என்னென்ன பணிகளை செய்தோமோ அவை யனைத்தையும் இந்த விண்டோடுஸ்கோ வசதியின் வாயிலாக செய்து கொள்ள முடியும். மிகமுக்கியமாக இயக்க முறைமை யானது கையடக்க யூஎஸ்பி சாதனத்தின் வாயிலாக செயல்படுத்தி நாம்வழக்கமாக பயன்படுத்திவரும் இயக்கமுறைமையை செல்லுமிட மெல்லாம் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என்பதேஇதனுடைய மிக்கமுக்கிய பயனாகும் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: