நம்முடைய மின்னஞ்சலின் உள்வருகை பெட்டியை கையாள Unroll Me என்ற இணையதளத்தின் சேவையை பயன்படுத்திகொள்க.

  பொதுவாக நாம் எந்தவொரு இணைய பக்கத்திற்குள் உள்நுழைவு செய்தாலும் அவை உடன் நம்மை பற்றிய விவரங்களுடன் நம்முடைய மின்னஞ்சல் முகவரியையும்  பெற்றுகொள்கின்றன . அதனால் நம்முடைய மின்னஞ்சலின் உள்வருகை பெட்டியில் எப்போதும் ஏராளமான  கணக்கிடமுடியாத அளவிற்கு மின்னஞ்சல்களானது வைக்கோல் போர் போன்று குவிந்திருக்கும் . அவைகளுக்கிடையே மிகமுக்கியமான மின்னஞ்சலை தேடிபிடித்து படிப்பது , பதிவிறக்கம் செய்வது என்பது வைக்கோல் போரிற்குள் குண்டூசியை தேடியகதை ஆகிவிடுகின்றது.. மேலும், இந்த செயலானது நம்முடைய பொறுமையை பெரிதும்  சோதிப்பதாகவும் காலவிரையம் ஆக்குவதாகவும் ஆகிவிடுகின்றது.

அஞ்சற்க! இவ்வாறான நிலையில் நம்முடைய மின்னஞ்சல் உள்வருகை பெட்டியை கையாள உதவிசெய்வதற்காக Unroll Me என்ற தளத்தின் சேவை தயாராக இருக்கின்றது. இதுஅவுட்லுக், ஹாட்மெயில் , விண்டோஸ் லிவ்மெயில், யாகூ ,ஏஓஎல்மெயில்,  எம்எஸ்என், ஜிமெயில்,ஐகிளவுட் ஆகிய எந்தவொரு மின்னஞ்சலையும் கையாளும் திறன்கொண்டது.

இதனுடைய சேவையை பெறுவதற்காக இந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்தவுடன் Watch Our Video எனும் இணைப்பு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் கானொளி காட்சியாக நாம் செய்யவேண்டியது என்னென்ன என்ற  விவரங்களை திரையில் காணலாம்.

அதன்பின்னர் இந்த தளத்தின் சேவையை பெறுவதற்காக  Get Started எனும்  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் திரையில் சுத்தமாக்க விரும்பும் நம்முடைய மின்னஞ்சல் முகவரியையும் பூர்த்திசெய்து ,பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஆமோதித்து,  Next எனும்  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர் நம்முடைய மின்னஞ்சல்களை பயன்படுத்திடும் நிறுவனத்திடம் இந்த சேவையை பெறுவதற்கான அனுமதியை அளித்திடுமாறு கோரவேண்டும்.

உடன் நம்முடைய மின்னஞ்சல் உள்வருகை பெட்டியை ஆய்வுசெய்து தேவையற்ற குப்பைமின்னஞ்சல்களை அறவேநீக்கம் செய்து காலியாக ஆக்கிவிடும். அதன்பின்னர்  இந்த தளத்தின் சேவைத் தேவை யில்லை என நீக்கம் செய்துவிடலாம்.

இந்த Unroll Me என்ற சேவையானது நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் எதையும் திருடிகொள்ளாது .

உடன் வாருங்கள் இந்த தளத்தின் சேவையின்வாயிலாக நம்முடைய மின்னஞ்சல்களின் உள்வருகை பெட்டியில் உள்ள தேவையற்ற குப்பையான மின்னஞ்சல்களை நீக்கம் செய்து காலியாக வைத்திடுக. மேலும் விவரங்களுக்கு https://unroll.me/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: