கூகுளின் ஸ்கை எனும்இணையபக்கம்

பொது வாக நாம் அனைவரும் ஒவ்வொரு பருவத்திலும் இரவில் வானத்தில் இருக்கும் விதவிதமான காட்சிகளை காணவும் அல்லது ஒருசிலர் வானிலை ஆய்வை செய்யவும் விழைவார்கள் இதற்காகவென தனியாக அமைக்கபட்டுள்ள வானிலை ஆய்வுமையத்திற்கு செல்லவேண்டிய அவசியம் தற்போது இல்லை அவர்களுக்கு உதவுவதற்காகவே கூகுள் நிறுவனத்தின் ஸ்கை எனும் தளம் இருக்கின்றது கூகுள் நிறுவனமும் வானிலை ஆய்வாளர்களும் சேர்ந்து உலகம் முழவதும் ஆங்காங்கு இருந்து வானிலையை கண்டால் வானம் எவ்வாறு தோன்றிடும் என வேவ்வேறு நிலைகளில் வானிலையின் காட்சிகளை இந்த இணைய பக்கத்தில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர் பொதுவாக இந்த இணைய பக்கத்திற்குள் உள்புகுமுன் நம்மால் அடிக்கடி கேட்கபடும் கேள்விகளும் அதற்கான பதில்களையும் FAQ எனும் பகுதிக்கு சென்று அறிந்துகொள்க என பரிந்துரைக்கபடுகின்றது இந்த இணையபக்கத்தின் கீழ்பகுதியிலுள்ள Solar System, Constellations, Hubble Showcase, Backyard Astronomy, Chandra X Ray Showcase, GALEX Ultraviolet Showcase, Spitzer Infrared Showcase, and Earth & Sky Podcastsஆகிய வகைகளுள் நாம் விரும்பும் உருவபொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து குறிப்பிட்ட காட்சியை திரையில் கண்டுகளித்திடுக அல்லது திரையின் மேலே Horseshoe Nebula அல்லது Orion’s Belt என்றவாறு நாம் விரும்பும் காட்சிக்கான பெயரை அதற்கான தேடிடும் பெட்டியில் உள்ளீடு செய்து தேடிபிடித்து தெரிவுசெய்து கண்டுகளித்திடுக இந்நிலையில் அடுத்தவகையை காணவிரும்பினால் திரையின் கீழே இடதுபுறமூலையிலுள்ள Home என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முதன்மை திரைக்கு வந்தபின் மீண்டும் தேவையான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

1
வானிலையின் வரைபடத்துடன் நாம் இடைமுகம்செய்து அவற்றை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள மற்றொரு இணைய பக்கமான
Sky-Map என்பது உதவுகின்றது. இதில் உள்நுழைவுசெய்தவுடன் Getting Started எனும்பகுதியை முதலில் பயன்படுத்திடுக இந்த வானிலை படத்தை எவ்வாறு பயன்படுத்திடுவது படங்களை அல்லது வானில் உள்ள இதரபொருட்களை எவ்வாறு பெரியதாக அல்லது சிறியதாக மாற்றி காண்பது என்பனபோன்ற இந்த இணையபக்கத்தை பயன்படுத்திகொள்வதற்கான பல்வேறுவிவரங்களை இது வழங்குகின்றது இதன்பின் இந்த திரையின் முதன்மைபக்கத்திற்கு வந்து நாம் விரும்பும் வானிலை படத்தை அல்லது வானில் உள்ள பொருட்களை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து காண்க பின்னர் மீண்டும் முதன்மை பக்கத்திற்கு வந்து மேலும் நாம் விரும்புவதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து கண்டுகளித்திடுக.

மேலும் விவரங்களுக்கு http://www.google.com/sky, http://www.sky-map.org/ஆகிய இணைய பக்கங்களுக்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: