JqueryMobileஎனும் செல்லிடத்துபேசிக்கான இணைய பயன்பாட்டினை உருவாக்க பயன்படும் கட்டமைவு கருவி

இது தொடுவுணர்வமூலம் செயல்படும் கைபேசி மடிக்கணினி ஆகியவற்றில் செயல்படும் இணையபக்கங்களை உருவாக்குவதற்கான கட்டமைவு கருவியாகும். இது ஜாவாஸ்கிரிப்ட்  இல்லாமலேயே மார்க் அப்பை பயன்படுத்தி நாம் விரும்பும் இணைய பக்கங்களை உருவாக்கிட உதவுகின்றது. இது சமீபத்திய HTML5 CSS3 ஆகியவற்றை ஆதரிக்கின்றது. பார்வையாளர்களை கவரும் வண்ணமான இணைய பக்கத்தை உருவாக்க இது உதவுகின்றது. இதனை நம்முடைய சாதனத்தில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்வதற்காக12 கேபி அளவு மட்டுமேயான நினைவகம் போதுமானதாகும்.   இது எம்ஐட்டி, ஜிப்பிஎல் அனுமதியை பெற்றதாகும் . இதுநிகழ்வுகளை கையாளுதல் சேவையாளரை கையாளுதல் அசைவுட்டு படங்களை கையாளுதல் போன்ற செயல்களை ஒரு இணையபக்கத்திற்கு வழங்குகின்றது.

இந்த Jqueryஎனும் கருவியின் முகப்புபக்கத்தில் மேல்பகுதியில் தலைப்பு பட்டை உள்ளது. அதில் பக்கத்தலைப்பும் பின்செல்கை பொத்தானும் உள்ளன. இடையில் இந்த பயன்பாட்டின் உள்ளடக்கங்கள் அனைத்தும் அடங்கியதாகும். கீழ்பகுதியில் இருப்பது முடிவுபட்டையாகும். இதில் இந்த பயன்பாட்டின் உரிமைவிவரம் வழிகாட்டிடும் பொத்தானானது மேலும் நாம் கூடுதலாக சேர்க்கவிருப்பவைகளை கொள்வதற்கான பகுதியாக விளங்குகின்றன .இதிலுள்ள $.mobileஎன்பதை பயன்படுத்தி நிகழ்வுகளை Live(),Bind()ஆகிய வழிமுறைகள் மூலம் கட்டமைவு செய்திடலாம்.  மேலும் இந்த $.mobileஎன்பதில் பின்வரும் நிகழ்வுகள் உள்ளடங்கியுள்ளன

$.mobile.changePage எனும் கட்டளையானதுஒரு இணைய பக்கத்திலிருந்துமற்றொரு இணையபக்கத்தை மாற்றுவதை குறிக்கின்றது.

$.mobile.loadPage எனும் கட்டளையானது உள்ளிணைப்பதற்கானவெளிப்புற பக்கத்தை மேலேற்றுவதை இது குறிப்பிடுகின்றது.

$.mobile.showPageLoadingMsgஎனும் கட்டளையானது பக்கத்தை மேலேற்றம் செய்திடும் செய்தியை திரையில் குறிப்பிட பயன்படுகின்றது.

$.mobile.hidePageLoadingMsg எனும் கட்டளையானது பக்கத்தை மேலேற்றம் செய்திடும் செய்தியை திரையில் மறைத்திட பயன்படுகின்றது.

$.mobile.path.isSameDomain எனும் கட்டளையானதுஇரண்டுவெவ்வேறு இணையமுகவரியை ஒப்பிட பயன்படுகின்றது.

$.mobile.activePage எனும் கட்டளையானது நடப்புபயன்பாட்டில் உள்ள இணைய பக்கத்தை மேற்பார் செய்திட காண்பிக்கின்றது.

மேலும் CSS3  அடிப்படையிலான ,Slide,SlideupandSlidedown,Pop,Fade,Flip ஆகிய செயல்களை குறிப்பிடுகின்றது .

இணைய பயன்பாட்டுபக்கங்களை உருவாக்கிட இந்த JqueryMobileஎனும் பயன்பாட்டு கருவியை பயன்படுத்தி கொள்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: