Dash Radioஎனும் இணையதளத்தின் வாயிலாக வானொலி ஒலிபரப்பினை கேட்டுமகிழ்ந்திடுக

தொலைகாட்சி நிலையங்களும் இணையபயன்பாடும் வருவதற்குமுன் நாம்அனைவரும் சிற்றலை என்றும் மத்தியஅலை என்றும்பண்பலை  என்றும்  நம்முடைய பொழுதுபோக்கிற்காக வானொலி ஒலிபரப்புகளை கேட்டு மகிழ்ந்துவந்தோம் தற்போது நாம் அனைவரும் தொலைகாட்சிகளையும் இணையத்தையும் பயன்படுத்துவதால் வானொலி ஒலிபரப்பு என்றால் என்னவென இளைஞர்கள் கேள்விகேட்கும் நிலைக்குவானொலி ஒலிபரப்பே மறந்துபோய்விட்டது ஆயினும் தற்போது பண்பலை ஒலிபரப்பு என்பது குறிப்பிட்ட நகரங்களில் இருப்பவர்களுக்கும் அதனைசுற்றி இருப்பவர்களுக்கும் என ஒலிபரப்பாவது நாம் அறிந்ததே  இந்த இணைய பயன்பாடு அதிகரித்த நிலையில் 24 மணிநேரமும் வானொலி ஒலிபரப்பினை இணையத்தின் வாயிலாக  Dash Radioஎனும் தளம் ஒலிபரப்பு செய்வது நாம் அறியாத செய்தியாகும்இதனுடைய   இணைய பக்கத்திற்கு சென்று முகநூல்  அல்லது நம்முடைய மின்னஞ்சல் வாயிலாக பயனாளராக பதிவுசெய்துகொண்டு உள்நுழைவுசெய்துகொள்க ஆயினும் இதனுடைய முகப்பு பக்கத்தில்உள்நுழைவுசெய்திடும்போதுNo thanks. I don’t want to create an account என்ற வாய்ப்பை பயன்படுத்தி பயனாளராக பதிவுசெய்யாமலும் இந்த வசதியை குறிப்பிட்டஅளவிற்கு மட்டும் பயன்படுத்திகொள்ளமுடியும்  பின்னர் இதனுடைய முதன்மை பக்கத்தில் All Stations எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அனைத்து வொனொலி நிலையங்களையும் பார்வையிட்டு அவற்றில் ஒன்றினை தெரிவுசெய்து கொள்ளமுடியும் அல்லது  DJ & Hosts எனும் பகுதியில் நாம்விரும்பும் வானொலிநிலையத்தை தெரிவுசெய்து கொள்ளமுடியும் அல்லது நாம் விரும்பும் வானொலி நிலையத்தை இதன்முகப்பு பக்கத்தில்ல் கொண்டுவந்து சேர்த்து கொள்ளமுடியும்  மேலும் விவரங்களுக்குhttp://dashradio.com/ எனும் இணைய பக்கத்திற்குசெல்க

1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: