கட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க

Go என்பது கணினியின்அமைவு செயல்முறையை மனதில்கொண்டு பொதுபயன்பாட்டிற்காக உருவாக்கபட்டஒரு நிரல்தொடர்மொழியாகும் . இந்த கோஎனும் மெழியானது கூகுள் நிறுவனத்தின் Robert Griesemer, Rob Pike, Ken Thompson. ஆகியோரால் சேர்ந்து 2007இல் உருவாக்கபட்டு பொதுபயன்பாட்டிற்காக 2009 இல் வெளியிடபட்டது. இது மென்பொருள் உருவாக்குபவருக்கு ஒருவலுவான நிலையானவகையில் குப்பையான கட்டளைகள் அனைத்தையும் சேகரித்து ஒதுக்குவதற்கான உள்ளக கட்டமைப்பை வழங்குகின்றது. இது கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியை சார்ந்துள்ளதை திறனுடன் நிருவகிப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கின்றது என்ற அடிப்படையை பயன்படுத்தி இந்த நிரல்தொடர் மொழியானது கட்டமைப்பட்டுள்ளது. இந்த கோ எனும் நிரல்தொடர்மொழியானது கட்டளைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்தல், இணைப்பு வழங்குதல் ஆகிய பழையவழக்கமாக நாம் பயன்படுத்திவரும் வழி முறைகளை பயன்படுத்தி செயலிகளின்குறிமுறைகளை உருவாக்குகின்றது.

1

இது இயக்கநேர மொழிகள்போன்று தற்போது உள்ள சூழலைஏற்றிடும் வகையை ஆதரித்திடுமாறும், , குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு விரைவாக மொழிமாற்றம் செய்திடுமாறும் ,இடைமுகத்தையும் ,உள்பொதிதல் வகையையும் ஆதரித்திடுமாறும், மற்றபயன்பாடுகளை சார்ந்திராமல் சுயமாக நிலையான இணைப்பை கொண்டுஇயங்கிடுமாறும், அனுகுவதற்கு எளியதாக இருந்திடுமாறும் , பாதுகாப்பானதாகவும் , கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியின் உள்ளககட்டமைப்பை ஆதரித்திடுமாறும் வடிவமைக்கபட்டுள்ளது .

மிகமுக்கியமாக இது மரபுரிமைவகையை யும், வழிமுறை அல்லது இயக்குபவரின் அதிகபளுவையும் ,கட்டுகளுக்கிடையே சுற்றுமறையை சார்ந்திருப்பதையும்,

சுட்டிடும் கணக்கீட்டையும், மதிப்பீ்ட்டை உண்மையாக்கும் உறுதிபடுத்துதலையும் .

பொதுவான நிரல்தொடரையும் ஆதரிக்காதுஎன்ற செய்தியை மனதில் கொள்க.

இந்த கோ நிரல்தொடரானது குறைந்தது மூன்றுவரிக்கட்டளைகள் முதல் மில்லியன் கணக்கான கட்டளைவரிகளை கொண்டு ஒன்றிற்கு மேற்பட்ட தனித்தனி உரைகோப்புகளாக “vi”, “vim”போன்ற எந்தவொரு உரைபதிப்பானிலும் .goஎனும் பின்னொட்டுடன் உருவாக்கமுடியும்.

அதுமட்டுமல்லாது நம்முடைய கணினியில் இதற்காக தனியானதொரு மென்பொருளை நிறுவுகை செய்திடாமலேயே நேரடியாக இணையத்தின் வாயிலாக கூட நாம்விரும்பும் நமக்கு தேவையான நிரல்தொடர்களை உருவாக்கி மொழிமாற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்.

இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து செயற்படுத்திடுவதற்காக (1) Text Editor , (2) The Go Compilerஆகிய இரண்டு மென்பொருட்களும் அடிப்படைத்தேவையாகும்.

இந்த மென்பொருள் இயங்குவதற்காக நம்முடைய கணினியின் இயக்கமுறைமைக் கேற்ற நாம் வழக்கமாக பயன்படுத்திடும் உரைபதிப்பானானவிண்டோவின் நோட்பேடு,பிரீஃப், எப்ஸிலான் எமாக்ஸ் விம்,விஆகியவற்றுள் ஒன்று நம்முடைய கணனியில் இருந்தால் போதுமானதாகும். இந்த உரைபதிப்பானில் நாம் உருவாக்க போகும் கோப்பானது .goஎனும் பின்னொட்டுடன் உருவாக்கிடவேண்டும் என்ற செய்தியை மட்டும் மனதில்கொள்க.

இந்த கோ எனும் மொழியை பயன்படுத்திடவிழைபவர் கணினியின் நிரல்தொடர் குறிமுறைவரிகளை எழுதுவதிலும் அதனை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்வதிலும் ஓரளவாவது அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும்..

விண்டோ இயக்கமுறைமை எனில் 32-bit (386) அல்லது 64-bit(amd64) x86 ஆகிய செயலிகளை கொண்ட கட்டமைவுடன் லினக்ஸ்,மேக்ஒஎக்ஸ் ஆகிய எந்தவொரு இயக்கமுறைமையிலும் இது செயல்படும்திறன் கொண்டதாகும்.. ஆனால், அந்தந்த இயக்கமுறைமக்கேற்ற இதனுடைய மென்பொருள் கோப்பினை https://golang.org/dl/ எனும் இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க.. நாம்படித்தறியும் வகையில் இருக்கின்ற இதனுடைய நிரல்தொடர் குறிமுறைவரிகளான மூலக்குறிமுறைவரிகளை இந்த மென்பொருளானது அதனை இயந்திரங்கள் படித்தறியும் கட்டளைவரிகளாக மொழிமாற்றம் செய்து நாம் செயல்படுத்தி செயல்படுத்துவதற்கேற்றவாறு செய்கின்றது.

இதற்காக இந்த கோ எனும் மொழியின் மென்பொருள் கட்டுகளை இதனுடைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தபின் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க

இதன் பின்னர் இந்த மென்பொருளை பயன்படுத்தி நம்முடைய முதன்முதலான எளிய நிரல்தொடர்கட்டளைவரிகளை உருவாக்கவிருக்கிருக்கின்றோம் அந்த கட்டளை வரித்தொடரானது பின்வருமாறு இருக்கும்

package m ain

im port “fm t”

func m ain() {

/* This is m y first sam ple program . * /

fm t.Println(வருக! வருக! வணக்கம்!”)

}

இந்த கோ எனும் மொழியினுடைய கட்டளைவரிகளின் முதல்வரியானது நிரல் தொடரின் பெயருடன்கூறிய package main எனும் முதன்மை அறிவிப்பு வரியாகும்.

அதற்கடுத்ததாக இருப்பது முன்செயலி கட்டளைவரியாகும். இந்த வரியானது fm t எனும் கட்டுகளில் இந்த நிரல்தொடர்குறிமுறைவரிகள் இருக்கும் என கோமொழியின் மொழிமாற்றிக்கு அறிவிப்பு செய்கின்றது.

மூன்றாவது வரியானது நிரல்தொடர்குறி முறைவரிகளின் கட்டளைகள் துவங்கும் func main()எனும் முதன்மை செயலி வரியாகும் .

அதற்கடுத்த நான்காவது வரியானது இந்தகுறிமுறை வரிகள் எதற்காக எழுதபட்டது என்ற தகவலை நமக்கு அளிக்கும் வரியாகும். இந்த வரியானது /*…*/ எனும் குறியீட்டிற்குள் இருப்பதால் அதனை மொழிமாற்றியானது விட்டுவிடும்.

ஐந்தாவது வரியானது நாம் கூறும் செய்தியை fmt.Printlnஎனும் கட்டளைவரியின் வாயிலாக செய்திகளை திரையில் பிரதிபலிக்கசெய்வதற்கான கட்டளைவரியாகும். இந்த குறிமுறை வரியில் உள்ள Printlnஎன்பதன்முதல் எழுத்தான Pஎன்பது பெரிய எழுத்தாக இருக்கின்றது. இந்த கோஎனும் மொழியில் கட்டளைபெயரின் முதல் எழுத்து பெரியஎழுத்தாக இருக்குவேண்டும் என்ற செய்தியைமட்டும் மனதில்கொள்க.

இந்த கோஎனும் நிரல்தொடர்குறிமுறைவரிகளில் நாம் எழுதும் அனைத்து கட்டளைவரிகுறிமுறைவரிகளும் func main()எனும் முதன்மை செயலிக்கு அடுத்ததாக “{“ எனும் குறியீட்டுடன் தொடங்கி இறுதியாக “}” எனும் குறியீட்டுடன் முடிவடையவேண்டும் என்ற செய்தியையும் மனதில் கொள்க

இந்த குறிமுறைவரி தொடர்களை எவ்வாறு செயல்படுத்துவதுஎன இப்போது காண்போம்

ஏதேனும் உரைபதிப்பானை திறந்து மேலேகூறிய நிரல்தொடர் குறிமுறை வரிகளை உருவாக்கிகொள்க. பின்னர் இந்த கோப்பினை வருகவணக்கம்..go” என்ற கோப்பாக சேமித்து கொள்க அதன்பின்னர் கணினியின் கட்டளைவரிகளை செயல்படுத்திடும் command promptஎனும் கருப்பு வெள்ளை திரையில் வருகவணக்கம்..go” என்ற கோப்பினை நம்மால் சேமிக்கபட்ட இடத்திற்கு செல்க. பின்னர் அங்கு go run வருகவணக்கம்..go என்றவாறு கட்டளைகளை உள்ளீடு செய்து உள்ளீட்டு (enter)விசையை அழுத்துக. உடன் நம்முடைய நிரல்தொடர்குறிமுறைவரிகளில் பிழைகள் எதுவும் இல்லையெனில் வருக! வருக! வணக்கம்! என்ற செய்தி திரையில் பிரதிபலிக்கும் .

நன்றி: கணியம் மின்னிதழ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: