லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-38-உள்ளடக்கங்கள், வரிசைகள் நூலாசிரியர்களின் விவரங்களுக்கான அட்டவணைகள்-தொடர்ச்சி

 உள்ளடக்க அட்டவணையின் வரிகளுள் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் குறிப்பிட்ட பகுதியை சென்றடையும்படி செய்வதற்காக லிபர் ஆஃபிஸ் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் Insert => Hyperlink=> என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்Insert Index/Table எனும் உரையாடல் பெட்டியில் Style எனும் தாவியின் திரையை தோன்றிட செய்திடுக அதில் தலைப்பு வரிசைகளை குறிப்பிடLevels என்பதன்கீழ் உள்ளபட்டியல்களையும் பத்தியின் பாவணைகளுக்கு Paragraph Styles என்பதன்கீழ் உள்ளபட்டியல்களையும் பயன்படு்ததி தேவையானவைகளை தெரிவுசெய்து கொண்டு < எனும் பொத்தானை தெரிவுசெய்து செயல்படுத்திகொள்க அவற்றுள் குறிப்பிட்டவைகளை தெரிவுசெய்து Defaultஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் நீக்கம் செய்துகொள்க மாறுதல்கள் செய்திட Editஎனும் பொத்தானை பயன்படுத்திகொள்க அடுத்ததாக இந்த insert Index/Table எனும் உரையாடல் பெட்டியில் Style எனும் தாவியின் திரையை தோன்றிட செய்து பின்புல வண்ணத்தை சேர்த்திடுக இயல்புநிலையில் பின்புலவண்ண தோற்றத்தை கொண்டுவருவதற்கு லிபர் ஆஃபிஸ் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் Tools => Options => LibreOffice => Appearance=> என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையின் Text Document எனும் பகுதியில் Index and table shadings என்பதை தெரிவுசெய்துகொள்க

38.138.1

வரைகலையை சேர்த்திட இந்த insert Index/Table எனும் உரையாடல் பெட்டியில் Style எனும் தாவியின் திரையில் As என்பதற்கருகிலுள்ள Graphic.எனும் கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவுசெய்துகொள்க ஏற்கனவே இருப்பதை கொண்டுவந்து சேர்த்திட Browseஎனும் வாய்ப்பு பொத்தானை பயன்படுத்திகொள்க இந்த வரைகலை எந்த இடஅமைவில் அமைத்திடவேண்டும் என்பதற்காக Type என்ற பகுதியிலுள்ள Position, Area,Tileஆகிய மூன்று வாய்ப்பு பொத்தான்களில் தேவையானவற்றை தெரிவுசெய்துகொள்க முன்காட்சியாக கண்டிட Preview எனும் வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்துகொள்க இவையெதுவும் தேவையில்லை எனில் As என்பதற்கருகிலுள்ள Graphic.எனும் கீழிறங்கு பட்டியலிலிருந்து No Fill என்பதை தெரிவுசெய்து இந்த வரைகலை அல்லது வண்ணத்தை நீக்கம் செய்துகொள்க உள்ளடக்க அட்டவணையின் வரிகளை மாறுதல்செய்திட சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சூழ்நிலைபட்டியை தோன்றிட செய்திடுக அதில் Edit Index/Tableஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து விரியும் திரையின் வாயிலாக தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொள்க

பொதுவானநடைமுறையில் உள்ளடக்க அட்டவணைபகுதியை யாரும் அனுகுதல்செய்து திருத்தும் எதுவும் செய்திடாமல் பாதுகாத்திருப்பர் அதனை நீக்கம்செய்து திருத்தம் செய்வதற்கு அனுகுதல் செய்திடுமாறு செய்திட லிபர் ஆஃபிஸ் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் Tools => Options => LibreOffice Writer => Formatting Aids=> என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் Enable எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துகொள்க வேறுவகையில் இவ்வாறு அனுகிட விசைப்பலைகையிலுள்ள F5 எனும் செயலிவிசையை அழுத்துக உடன்விரியும் Navigator எனும் பெட்டியில் Table of Contents என்பதற்கருகிலுள்ள + எனும் கூட்டல் அல்லதுமுக்கோண குறியீட்டை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்க பின்னர் Table of Contentsஎன்பதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தி டுக அதில் Index => Edit=> என்றவாறு கட்டளைவரிகளை தெரிவுசெய்துசொடுக்குக

இந்த உள்ளடக்கங்களுக்கான அட்டவணையை அவ்வப்போது நிகழ்நிலை படுத்திகொள்ள இதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Update Index/Table என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நிகழ்நிலை படுத்திகொள்க இந்த உள்ளடக்கங்களுக்கான அட்டவணையை நீக்கம்செய்திட இதே சூழ்நிலைபட்டியில் Delete Index/Table என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நீக்கம் செய்துகொள்க வேறுவகையில்Navigator எனும் பெட்டியில்Table of Contents என்பதற்கருகிலுள்ள + எனும் கூட்டல் அல்லதுமுக்கோண குறியீட்டை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்க பின்னர் Table of Contentsஎன்பதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக அதில்Index => Delete =>என்றவாறு கட்டளைவரிகளை தெரிவுசெய்துசொடுக்குக

உள்ளடக்கங்களுக்கான அட்டவணையில் புதியதான அகரமுதலிவரிசையிலான உள்ளடக்கங்களை உள்ளீடு செய்வதற்காக லிபர் ஆஃபிஸ் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் Insert => Indexes and Tables => Entry=> என்றவாறு தெரிவு செய்து சொடுக்குக அல்லது லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே Insert எனும் கருவிகளின் பட்டையிலுள்ள Entry எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக

38.238.2

உடன் விரியும் Insert Indexe Entry எனும் உரையாடல் பெட்டியில் Insert என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக Index, Entry , 1st key, 2nd key, main entry, apply to all similar texts ,Apply to all similar textsஆகிய வாய்ப்புகளின் வாயிலாக நாம் விரும்பியவாறு வரிசையை உருவாக்கிகொண்டு இறுதியாக OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

இந்த அகரமுதலிவரிசையை விரைவாக உருவாக்கிடுவதற்காக ரைட்டர் ஆவணத்தில் தேவையான பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு லிபர் ஆஃபிஸ் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் Insert => Indexes and Tables => Indexes and Tables=> என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Insert Indexes and Tables எனும் உரையாடல் பெட்டியில் Index/Table எனும் தாவியின் திரையில் Type எனும் பெட்டியில்Alphabetical Index. எனும் வாய்ப்பை தெரிவுசெய்துகொள்க பின்னர் Options எனும்பகுதியில் உள்ள Case sensitive,Combine identical entrieswith p or pp ஆகிய வாய்ப்புகள் தெரிவுசெய்யபடவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

38.338.3

வேறு தலைப்பில் வரிசையை உருவாக்கிட Title எனும் பெட்டியில் தேவையான தலைப்பினை உள்ளீடு செய்துகொள்க நாம் உருவாக்கிடும் வரிசையானது கைதவறி மாறிவிடாமல்இருப்பதற்கு Protected against manual changes. எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க இந்த வரிசையானது ஆவண முழுவதுமெனில் Create index/table எனும் பகுதியில் என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து Entire document என்றவாய்ப்பையும் குறிப்பிட்ட பகுதிமட்டுமெனில் current chapter என்ற வாய்ப்பையும் தெரிவுசெய்துகொள்க மிகுதி வாய்ப்புகளை நம்முடைய தேவைக்கேற்ப பயன்படுத்திகொள்க

இதே உரையாடல் பெட்டியின் Entriesஎனும் தாவிபொத்தானின் திரையில் Structure Eஎனும் பொத்தான் உள்ளீட்டையும் T எனும் பொத்தான் தாவிநிறுத்தத்தையும் # எனும் பொத்தான் பக்கஎண்ணையும் Chapter info எனும் பொத்தான்புதிய பகுதியையும் குறிப்பிட பயன்படுகின்றன இவைகளை பயன்படுத்தி அட்டவணையின் உள்ளடக்க வரிகளைஉள்ளீடு செய்துகொள்க

இதேஉரையாடல்பெட்டியின் columns எனும் தாவிபொத்தானின் திரையின் வாயிலாக வரிசையில் எத்தனை நெடுவரிசை உருவாக்கிடுக

வரிசையை திருத்தம் செய்திட வரிசை பட்டியலில் இடம்சுட்டியை நிறுத்திகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக தோன்றிடும் சூழ்நிலைபட்டியில் Edit Index/Table எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

38.438.4

பின்னர்விரியும் Insert Index/Table dialog உரையால்பெட்டியின் மூலம் தேவையானவாறு மாறுதல் கள்செய்துகொள்க இதே போன்ற உருவாக்கபடும் சூழ்நிலை பட்டியலில் Update Index/Table எனும் கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்க Delete Index/Table எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த வரிசையை நீக்கம் செய்துகொள்க

நடப்பிலுள்ளவரிசைகளின் உள்ளீட்டை பார்வையிடவும் மாறுதல் செய்திடவும் லிபர் ஆஃபிஸ் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் View => Field shadings=> என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Ctrl+F8 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் புலத்தின் பின்புலம் செயலில் இருக்கும்

38.538.5

அதன்பின் இடம்சுட்டியை அங்குவைத்துகொண்டு Edit => Index Entry=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி உள்ளீடு களை மாறுதல்கள் செய்துகொண்டு இறுதியாக OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

38.638.6

அகரமுதலி தவிரத்து வேறுவகையான வரிசையை உருவாக்கிடுவதற்காக Insert Indexes and Tables எனும் உரையாடல் பெட்டியில் Index/Table எனும் தாவியின் திரையில் Type எனும் பெட்டியில்Alphabetical Index. எனும் வாய்ப்பிற்கு பதிலாக நாம் விரும்பும் Illustration Indexஎன்றவாறு வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Title எனும் பெட்டியில்Table of figures என உள்ளீடு செய்துகொண்டு Create from Captions எனும் பகுதியில் என்ற வாய்ப்பு தெரிவுசெய்துள்ளதை உறுதிசெய்துகொள்க Category என்பதில் figure என்பதையும் Display என்பதில் Referencesஎன்பதையும் தெ ரிவுசெய்துகொள்க Entries எனும் தாவியின் பொத்தானின் திரையில் மீயிணைப்பு தவிர மற்றவாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு இறுதியாக OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

38.7

38.7

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: