Pocket எனும் வசதியை கொண்டு இணைய இணைப்பில்லாதபோதும் செய்திகளை அறிந்துகொள்ளலாம்

இணையத்தில் உலாவரும்போது முக்கியமான செய்திகள் கட்டுரைகள் ஒலிஒளி படங்கள் போன்றவைகளை படிப்பதற்குஅல்லது பார்ப்பதற்கு நமக்கு போதுமான நேரம் அல்லது காலஅவகாசம் இருக்காது ஆனால் ஓய்வு இருக்கும்போது மட்டும் இவைகளை படித்து கொள்ளலாம் அல்லது காட்சியாக கண்டுகளித்திடலாம் என எண்ணிடுவோம் அப்போது அந்த இணையபக்கங்களை தொடர்பு கொள்ளமுடியாதுஅல்லது இணைய இணைப்பே கிடைக்காது என்றநிலை உருவாகியிருக்கும் இவ்வாறான நிலையிலும் நாம் இணையத்தில் உலாவரும்போது பார்த்த முக்கியமான செய்திகளையும் கட்டுரைகளையும் படித்தறியமுடியும் அதற்காக உதவுவதுதான் Pocket எனும் வசதியாகும் இந்த வசதியானது நம்முடைய இணைய உலாவியான இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் , குரோம், ஃபயர் ஃபாக்ஸ், ஸபாரி ஆகியவற்றின் விரிவாக்கபயன்பாடாக ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசிகளிலும் டேப்ளெட்களிலும் கோபோர் ரீடர்களில் கூட இதனை செயல்படுத்தி பயன்பெறலாம் இந்த வசதியை பெறுவதற்காக https://getpocket.com/ எனும் இணைய பக்கத்திற்கு சென்ற பயனாளர் பெயர் கடவுச்சொற்களை கொண்டு பதிவுசெய்துகொண்டு உள்நுழைவு செய்திடுக நம்மிடம் ஆண்ட்ராய்டு சாதனம் அல்லது ஜிமெயில் கணக்கிருந்தால் அவைகளின் வாயிலாக கூட இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்திடமுடியும் உடன் இந்த பயன்பாட்டினை உங்களுடைய ஆண்ட்ராய்டு சாதனத்தில் நிறுவுகை செய்திடவா என கோரும் ஆம் எனில் பயனாளர் பெயர் கடவுச்சொல் பயனாளர் பெயருடன் நிறுவுகை செய்திடுக   பின்னர் pocket button என்பதை நம்முடைய இணைய உலாவியில் இணைத்திடவா என கோரும் அதனை தொடர்ந்து Connect now என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து அனுமதித்திடுக உடன் நம்முடைய இணைய உலாவியின் மேல்பகுதியில் தனியாக இது அமர்ந்துவிடும் இதன்பின்னர்   இணைய உலாவியில் உலாவரும்போது pocket எனும் பயன்பாட்டின் கட்டளை பட்டியை விரியசெய்து அதில் share via => Add to pocket => என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்துகொள்க இதன் பின்னர் நம்முடைய செல்லிடத்து பேசியை Airplane mode என்றநிலையில் அமைத்துகொண்டு இணைய இணைப்பை துண்டித்த பின் நாம் சேமித்து வைத்த செய்தியை அல்லது படகாட்சியை இணைய இணைப்பு இல்லாமலேயே pocket எனும் பயன்பாட்டின் வாயிலாக படித்திடலாம் காட்சியை கண்டு களித்திடலாம்

8

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: