இணைய உலாவலை புள்ளிவிவரங்களுடன் அளித்திடும் Internet in Real Timeஎனும் இணையதளம்

நாம் இன்று அல்லது நேற்று அல்லது கடந்தவாரம் அல்லது கடந்தமாதம் எந்தெந்த இணைய பக்கங்களை பார்வையிட்டோம் என அறிந்துகொள்வதற்கு இணைய உலாவிகளில் உள்ள History எனும் வசதி உதவியாக இருக்கின்றது ஆயினும் இதைவிட நாம் இணையத்தில் உலாவியபோது பார்வையிட்ட இணைய பக்கங்களான Tumblr, Twitter, YouTube, Facebook போன்றவைகளை ஒவ்வொன்றிற்கும் ஒரு பெட்டியென தனித்தனியான சிறு சிறுபெட்டிகளில் ஒரே திரையில் இந்த Internet in Real Timeஎனும் இணையதளம் காண்பிக்கின்றது உதாரணமாக YouTube எனும் இணைய பக்கத்தில் எத்தனை ஒலிஒளிபடங்களை நாம் பதிவேற்றம் செய்தோம் அவ்வாறே எத்தனை ஒலிஒளிபடங்களை இந்த இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்திட்டோம் எத்தனை ஒலிஒளிபடங்களை எவ்வளவ நேரம் நேரடியாக நம்முடைய கணினியில் காட்சியாக கண்டுகளித்தோம் என்பன போன்ற விவரங்களை அந்தYouTube எனும் இணைய பக்கத்திற்கான சிறுபெட்டியில் காண்பிக்கின்றது மேலும் எவ்வளவு நேரம் குறிப்பிட்ட இணைய பக்கத்தை பார்வையிட்டோம் எவ்வளவு தரவுகள் அந்த இணைய பக்கத்திற்குள் பதிவேற்றம் செய்தோம் அல்லது குறிப்பிட்ட இணைய பக்கத்திலிருந்து எத்தனை ஜிபி தரவுகள் பதிவிறக்கம் செய்தோம் என்பன போன்ற விவரங்களை அந்தந்த பெட்டிகளில் காண்பிக்கின்றது சமூக வலைதளங்கள் ,இணையத்தின் வாயிலாக பொருட்களை கொள்முதல்செய்தல், பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்தல் தேடிபிடித்தல் என்பன போன்ற செயல்களுக்கு நாம் அந்தந்த இணைய பக்கங்களில் செலவிட்ட நேரம் தரவுகளின் அளவுகள் போன்ற விவரங்களை இது ஒரே பக்கத்தில் சிறுசிறு பெட்டிகளாக அளிக்கின்றது மேலும்விவரங்களுக்கு http://pennystocks.la/internet-in-real-time/      எனும் இணைய பக்கத்திற்கு சென்று அறிந்துகொள்க

1

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.