புதியதாக வெளியிடபட்டுள்ள இண்டெல் கலிலியோ எனும் கட்டற்ற கணினி அட்டையை புதிய செயல்திட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்

1. 

கணினியினுடைய வன்பொருட்களில் நாளுக்குநாள் உருவாகும் வளர்ச்சியினால் கணினியின் அடிப்படையான அட்டையின் திறனானது அவ்வப்போது மேம்படுத்துபட்டுகொண்டேவருவதுடன் அதன் அளவும் சிறியதாகி கொண்டே வருகின்றது மிகமுக்கியமாக ஆர்டினோ அட்டையின் துரித வளர்ச்சியினால் இண்டெல்நிறுவனமும் தன்னுடைய நிறுவனத்தின் சார்பாக கலிலியோ எனும் அட்டையை அறிமுக படுத்தியுள்ளனர் பொதுவாக மின்னனு பொறியியல் படித்தவர்கள்தான் இந்த கணினிக்கான அட்டையை உருவாக்கமுடியும் என்பதற்கு பதிலாக மின்னனு பற்றிய அடிப்படை விவரங்களை மட்டும் தெரிந்தவர்களேகூட இந்த கட்டற்ற ஆர்டினோயூனோ, இண்டெல் கலிலியோ ஆகிய இரண்டினை கொண்டு தங்களுடைய செயல்திட்டத்தை எளிதாக முடிக்கமுடியும் என்றநிலைக்கு தற்போது வளர்ந்து வந்துள்ளது மேலும் இண்டெல் தொழில்நுட்பத்தில் ஆர்டினோவால் சான்றளிக்கபட்டு வடிவமைக்கபட்டதே இந்த இண்டெல் கலிலியோ கணினி அட்டையாகும் இதில் செயலியாக சிறியஅளவிலான குறைந்த மின்சாரத்தில் செயல்படும் குவார்க் எஸ்ஓசிஎக்ஸ்1000 எனும் பயன்பாடு உள்ளது. ரேம் ஆக 512 கேபியுடன் தேவையெனில் கூடுதலாக 26கேபி வரை ரேமை இணைத்துகொள்ளும் வசதியுள்ளது மேலும் இது32 ஜிபி வரை நினைவக வசதியைபொருத்தும் வாயிலுடன் கூடுதலான நினைவகத்தை பொருத்திகொள்ளும் வசதிகொண்டது. அதுமட்டுமல்லாது இதுஆர்டினோ விரிவாக்க இணைப்பு கொண்டது மேலும் வாடிக்கையாளர்களின் யூஎஸ்பி பொருத்தும் வாயில்களை கொண்டது கூடுதலாகவும் இணையாகவும் பல்வேறு வாயில்கள உள்ளடக்கியது அதனோடு மட்டுமல்லாது ஈதர்நெட் வாயிலையும் இது கொண்டுள்ளது மேலும் இதிலுள்ள கடிகாரம் இயங்குவதற்கான மின்கலத்தை தன்னகத்தே கொண்டது கணினியை மறுதொடக்கம் செய்திடும் பொத்தான் இதில் உள்ளது மறுஅமைவு செய்வதற்கான பொத்தானையும் கொண்டுள்ளது என்பனபோன்ற பல்வேறு அரும்பெரும் வசதிகளை கொண்ட இந்த இண்டெல் கலிலியோ கணினி அட்டையை நம்முடைய புதிய செயல்திட்டத்திற்கு பயன்படுத்திகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: