வொய்பீக்கும் வொயர்லெஸ்லிற்கும் இடையிலான வித்தியாசம்யாவை?

நன்கு தொழில்நுட்பம் அறிந்தவர்களிடையேகூட வொய்பீ க்கும் வொயர்லெஸ்லிற்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் இதற்கு பதிலாக அதையும் அதற்கு பதிலாக இதையும் பயன்படுத்திகுழப்பம் அடைவார்கள் ஆயினும இரண்டிற்கு மிடையே சிறிதளவு மட்டும் வித்தியாசம்உள்ளது என்பதை மனதில் கொள்க பொதுவாக வொயர்லெஸ் என்பது   கம்பியல்லாத விசைப்பலகை ,சுட்டி, ஆகியவற்றை தொடர்பு கணினியுடன் இணைத்தபின்னர் இணையத்தில் நம்முடைய கணினியிலிருந்து உலாவரலாம் அவ்வாறு உலாவரும்போது நம்முடைய விசைப்பலகையில் யூஎஸ்பி நினைவகத்தை இணைத்து இணையத்திலிருந்து பதிவிறக்கமும் இணையத்திற்கு பதிவேற்றமும் செய்துகொள்ளலாம் ஆயினும் இந்த சாதனம் கம்பியல்லாமல் நம்முடைய கணினியுடன் இணைக்கபட்டு நம்முடைய பணியை செய்கின்றது இதே போன்று கம்பியல்லாமல் நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களையும், டேப்ளெட்களையும் இணைத்து இணையத்தில் உலாவரலாம்.

வொய்பீ என்பது செந்தர தொடர்பு அடிப்படையில் கணினியானது இணைப்பு ஏற்படுத்தி ஒருசில வளங்களையும் கோப்புகளையும் பங்கிட்டு கொள்கின்றது இதற்காக தொடர்பு மையமும் வழிசெலுத்தியும் அடிப்படை தேவையாகும் மேலும் இந்த தொடர்பு மையத்திலிருந்து குறிப்பிட்ட தூரம் வரைமட்டுமே குறிப்பிட்ட சாதனங்களினால் மட்டுமே பயன்படுத்திகொள்ளமுடியும் உதாரணமாக நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களை நம்முடைய வீடுகளில் , அலுவலகத்தில் , தொழிலகத்தில் வொய்பீக்காக தொடர்பு மையமும் வழிசெலுத்தியும் அமைக்கபட்டிருந்தால் அந்த எல்லைவரை வொய்பீயாக செயல்படும் வொய்பீயின் தொடர்பு எல்லை தாண்டியபின் 3ஜி 4ஜி போன்ற அலைகற்றை அல்லது கம்பியில்லா இணைப்பு ஆகியவற்றுடன் இணைய தொடர்பினை ஏற்படுத்தி கொண்டு இவை செயல்படும் .அதாவது   செந்தர தொடர்பு அடிப்படையில் ஒரு கணினியானது வொய்பீக்காக தொடர்பு மையமும் வழிசெலுத்தியும் அமைக்கபட்டிருந்தால் ம்டடும் அதனை சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை வொய்பீயின் அடிப்படையில் இணைய இணைப்பு ஏற்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் அவ்வாறில்லாமல் 3ஜி ,4ஜி போன்ற அலைகற்றையை பயன்படுத்தி இணையிணைப்பை கம்பியில்லாமல் பயன்படுத்தி கொள்ளமுடியும்.

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: