இன்றைய காலகட்டத்தில் நம்மில் பெரும்பாலாணவர்கள் கணினியில் அமர்ந்து பணிபுரிகின்றோம் அவ்வாறு அமர்ந்து பணிபுரியும்போது சரியான நிலையில் அமர்ந்து பணிபுரியவில்லைஎனில் முதுகுவலி ,கழுத்துவலி ,கைகளில் விரல்களில் வலி ,கால்களில் வலி என நம்முடைய உடலை சோர்வடைய செய்திடுகின்றது இதனை தவிர்த்திட முதலில் நாம் அமர்ந்து பணிபுரியும் இருக்கை சரியான உயரத்தில் சரியான அமைவில் உள்ளதா சரிபார்த்து அதற்கேற்ற மிகசரியான இருக்கையை வாங்கி பயன்படுத்திடுக. அதற்கடுத்ததாக நம்முடைய கண்ணிற்கு பொருத்தமான சரியாக ஒளிரக்கூடியதாக கணினியினடைய திரையின் ஒளிரும் அமைவை சரிசெய்திடுக. அதற்கடுத்ததாக விசைப்பலகையின் அமைவிடத்தையும் அதன் அமைவையும் மிகச்சரியானதாக அமையசெய்திடுக மூன்றாவதாக கணினியின் திரை அமைந்துள்ளஇடத்தை மிகச்சரியாக அமைத்திடுக நான்காவதாக கணினியில் பணிபுரிந்துவரும்போதும் அவ்வப்போது குறிப்பிட்ட காலஇடைவெளியில் நம்முடைய உடலிற்கு சிறிதுநேரம் ஓய்வு அளித்து பணிபுரிந்திடுக