நம்முடைய கணினி மடிக்கணினி போன்றவைகள் அதில் பொருத்தபட்டுள்ள வன்பொருட்கள் அல்லது அமைவு செய்யபட்டுள்ள மென்பொருட்கள், நினைவகம் ,தற்காலிக நினைவகம் ஆகியவற்றினால் மெதுவாக செயல்படும் நிலைக்கும் தள்ளபடும் அதனை தவிர்த்து வேகமாக செயல்படுமாறு செய்திடபின்வரும் வழிமுறையை பின்பற்றிடுக
1நம்முடைய கணினியில் முன்கூட்டியே நிறுவுகை செய்யபட்டுவரும் bloatware எனும் பயன்பாடுகளை http://www.pcdecrapifier.com/ எனும் தளத்தில்கிடைக்கும் PC Decrapifier எனும் கருவியை நிறுவுகை செய்து கொண்டு அறவே நீக்கம் செய்துகொள்க
2. அதற்கடுத்ததாக CCleaner எனும் பயன்பாடு நம்முடைய கணினியில் நிறுவுகை செய்யபட்டுள்ளதாவென சரிபார்த்து கொள்க அல்லது இதனை இதற்கான இணைய தளத்திலிருந்துபதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து செயல்படசெய்து நம்முடைய கணினியிலுள்ள தேவையற்ற caches, cookies போன்றவைகளை அவ்வப்போது நீக்கம் செய்து நினைவகத்தை காலியாக வைத்துகொள்க
3 கணினித்திரையின் கீழே இடதுபுறமூலையில் Starts=>Control panel=>performance Information and Tools=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக (இங்கு performance Information and Tools என்பது கண்ணிற்கு புலப்படவில்லையெனில் view by என்பதற்கருகிலுள்ள category கீழிறங்கு பட்டியலை விரியசெய்து அதில் Large icons என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தோன்ற செய்திடுக) அடுத்து தோன்றிடும் திரையின் இடதுபுற பலகத்தில் Adjust Visual Effects:என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Performance Optionஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Adjust for Best Performance, Use visual styles on windows and buttons ஆகிய. இரு தேர்வு செய் பெட்டிகளை தெரிவுசெய்து கொண்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக