சீரழிந்து போன எக்செல் பணித்தாளை பழையநிலையில் மீட்டு பயன்படுத்தி கொள்ளமுடியும்

   நாம் பயன்படுத்திடும் எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் பணித்தாளானது ஏதோவொரு காரணத்தினால் நம்மால் பயன்படுத்துமுடியாமல் சீரழிந்து போனநிலையில் பிற்காப்பு வழிமுறையில் ஏற்கனவே சேமித்துவைத்திருந்த கோப்பினை திறந்து பயன்படுத்த முனைந்தால் சமீபத்திய நிகழ்வுகள் எதுவும் சேமிக்கபடாமல் நிகழ்நிலை படுத்தபடாத கோப்பாக இருக்கும் இவ்வாறான நிலையில் பின்வரும் வழிமுறைகளில் நம்முடைய எக்செல் பணித்தாளை பழையநிலையில் மீட்டு பயன்படுத்தி கொள்ளமுடியும்

1 நாமே முயன்று அவ்வாறான எக்செல் பணித்தாளை மீட்டாக்கம் செய்திடலாம் அதற்காக எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File =>Open => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் Open எனும் உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பின் பெயரை தெரிவுசெய்துகொண்டு Open என்பதன் கீழிறங்கு பட்டியலிலுள்ள Open And Repair என்றவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் microsoft Excellஎனும் சிறுஉரையாடல் பெட்டியில் Repair என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் தேவையான எக்செல் கோப்பு மீட்டாக்கம் செய்யபட்டுவிடும்

11.1

2 எக்செல் பணித்தாளினை நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும்போது இவ்வாற கோப்பு சீரழிந்துபோனால் உடன் எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளை பட்டையில் File=> Open =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் விரியும் Open எனும் உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பின் பெயரை தெரிவு செய்து கொண்டு Open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையான எக்செல் கோப்பு மீட்டாக்கம் செய்யபட்டுவிடும்

3 எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File=>Options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் excel optionsஎனும் உரையாடல் பெட்டியில் இடதுபுறமுள்ள Formula என்பதை தெரிவு செய்தவுடன் விரியும் வலதுபுறபகுதியில் calculation options என்பதன் கீழுள்ள வாய்ப்பகளில் manual என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு OK. எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக இதன் பின்னர் தேவையான எக்செல் கோப்பினை திறந்திடுக

4 திரையின் கீழே உள்ள நிலைபட்டையின் இடதுபுறமூலையிலுள்ள Start =>All Programs => Microsoft Office =>Microsoft Office Tools => Microsoft Office Application Recovery => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் Microsoft Office Application Recovery எனும் உரையாடல் பெட்டியில் Microsoft Office Excel எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையான எக்செல் கோப்பு மீட்டாக்கம் செய்யபட்டுவிடும்
11.4

5 இவ்வாறு சீரழிந்த எக்செல் கோப்பினை வேறு கோப்பகத்திற்கு நகர்த்தி சென்று அங்கு திறந்தால் ஒருசில நேரங்களில் சரியாக திறந்துகொள்ளும்

6 லிபர் ஆஃபிஸ் அல்லது ஓப்பன் ஆஃபிஸ் ஆகிய கட்டற்ற பயன்பாடுகளின் வாயிலாக இந்த சீரழிந்த எக்செல் கோப்பினை திறந்து பணிபுரிய ஆரம்பித்தால் சரியாகிவிடும்

7 எம்எஸ் ஆஃபிஸின் மற்ற பயன்பாடுகளான வேர்டுபேடு அல்லது வேர்டில் ஆகிய பயன்பாட்டின் வாயிலாக இந்த சீரழிந்த எக்செல் கோப்பினை திறந்து பணிபுரிய ஆரம்பித்தால் சரியாகிவிடும்

8 புதிய எக்செல் கோப்பினை திறந்து சீரழிந்த எக்செல் கோப்பின் பணித்தாளினை ஒவ்வொரு பணித்தாளின் முகவரியை இட்டு அதன்மூவலம் குறிப்பிட்ட கோப்பினை திறந்து பணிபுரிய ஆரம்பித்தால் சரியாகிவிடும்

9 சீரழிந்த எக்செல் கோப்பின் ஒவ்வொரு பணித்தாளையும் திறந்து கொண்டு எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File=>Save As=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் Save As எனும் உரையாடல் பெட்டியின்Save As Type என்பதன் கீழிறங்கு பட்டியிலிலிருந்து SYLK எனும் கோப்புஅமைவை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் விரியும் சிறுஉரையாடல் பெட்டியில்Yes எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின் .slkஎனும்வடிவமைப்பில் சேமிக்கபட்டுள்ள கோப்பு ஒவ்வொன்றையும் திறந்து .xls எனும் வடிவமைப்பாக சேமித்துகொள்க

10 மேலேகூறிய வழிமுறைகளில் எக்செல் பணித்தாளின் தரவுகளை மட்டுமே மீட்டாக்கம் செய்யமுடியும் எக்செல் பணித்தாளில் தானியங்கியாக செயல்படும் மேக்ரோ கட்டளைகளை மீட்டாக்கம் செய்திடமுடியாது ஆனால் மேக்ரோக்களையும் மீட்டாக்கம் செய்திட

முதலில் ஏதேனுமொரு எக்செல் பணித்தாளை திறந்துகொள்க பின்னர் வழிமுறை 3 இல் கூறியவாறு calculation options என்பதன் கீழுள்ள வாய்ப்பகளில் manual என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து அதனை செயலில் கொண்டுவருக அதன்பின்னர் File=>options=> என்றவாறு கட்டளைகளை செரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் Excel options எனும் உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் Trust center என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் வலதுபுற பலகத்தில்Trust center settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் விரியும் உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் Macro settings என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் வலதுபுற பலகத்தில் Disable All Macros without Notificationஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Trust center என்ற உரையாடல் பெட்டியில் Ok எனும் பொத்தானையும் Excel optionsஎனும் உரையாடல் பெட்டியில் Ok எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக பிறகு சீரழிந்த எக்செல் கோப்பின் பணித்தாளினை திறந்து விசைப்பலகையில் [Alt]+[F11] ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி திரையில் isual Basic Editor (VBE).ஐ தோன்றிடசெய்திடுக பின்னர் விசைப்பலகையில் [Ctrl]+R) ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி திரையில் Project Explorerஎன்பதை திறந்துகொண்டு அதில் தேவையான module இல் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Exportன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இதற்கு ஒரு பெயரிட்டு சேமித்திடுக இந்த படிமுறையை பின்பற்றி தேவையான மேக்ரோக்களின் module களை மேலேற்றம் செய்தபின்இறுதியாக திரையையும் எக்செல் திரையையும் மூடிவெளியேறுக பிறகு தரவுகள் மீட்டாக்கம் செய்யபட்ட எக்செல்பணித்தாளில் இந்த module களை கீழிறக்கம் செய்து சேமித்துகொள்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: